கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாதுக்க கோரலஹிம
அலுத்வத்த எனும்
பகுதியில் பூச்சி மருந்து வில்லை தொண்டடையில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
4 வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது, தாய் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
'சில நாட்களுக்கு முன்னர் எனது மகளை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன். மகள் எடை குறைந்த காரணத்தினால் மகளுக்கு விட்டமின் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டன.
மகளுக்கு மருந்து குடிப்பதற்கு பயம். இதனால் அவருடைய தந்தை பணிக்கு செல்ல முன்னர் மகளுக்கு மருந்தை கொடுத்தார். இதன்போது பூச்சி வில்லையை இரண்டாக உடைத்து ஒரு பாதியை தண்ணீருடன் கொடுத்தார்.
பின்னர் மறு பாதியையும் தொண்டையில் இட்டு தண்ணீர் கொடுத்தார். அப்போது மகள் "அப்பா" என சத்திமிட்டார். அதன் பின்னர் மகளின் முதுகில் பலமாக தட்டினோம், தலை கீழாக தொங்கவிட்டு தட்டினோம், பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம்
அங்கிருந்து சிறுவர் நல வைத்தியசாலைக்கு மகள் மாற்றப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்தார்" என சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் சிறுமி பூச்சி மாத்திரை தொண்டையில் இறுகி உயிரிழந்துள்ளார் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹல் அக் அறிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கும் போது பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக