கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

செவ்வாய், 30 நவம்பர், 2021

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில்.30.11.2021இன்று மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று 
ஏற்பட்டுள்ளது.வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் ரெகுலேட்டரின் துண்டுகளையேனும் காண முடியவில்லை மேலும் அதற்கான 
இறப்பர் குழாயும் 
முழுமையாக எரிந்துள்ளது.தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு 
சமையல் அறையில்
 இருந்த கேஸ் குக்கரை பற்றவைத்து விட்டு வீட்டினுல் இருந்த பொழுது பாரிய சத்தத்துடன் கேஸ் குக்கர் வெடித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
READ MORE - கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

திங்கள், 29 நவம்பர், 2021

ஹட்டன் – மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவமொன்று
 பதிவாகியுள்ளது.
இன்று காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றதாகக் குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாய் உடைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 
அறியமுடிந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனி, 27 நவம்பர், 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் நீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும் , மாவட்டத்திற்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் 
விடுக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
READ MORE - சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிவுவதால், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிவாயு விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் 
காத்து நிற்கின்றனர்.
அதோடு ஒருபக்கம் சடுதியாக அதிகரிக்கும் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, எரிவாயு தட்டுப்பாட்டினால் மின் அடுப்பு மற்றும் மண்ணெண்ணை அடுப்பு என்பவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் ரைஸ் குக்கர் மூலம் சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறப்படுகின்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் 
வைரலாகியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீண்டும் தெரிவித்துள்ளார்.நேற்று (13) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்

செவ்வாய், 2 நவம்பர், 2021

வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி 
வருகின்றது.
அந்த வகையில், வவுனியாவில் கடும் மழை பெய்தது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தில் காணப்பட்ட உமை காரணமாக குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகர சபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை 
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல குடிமனைகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும். உடைபெடுப்பதை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்