நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

ஞாயிறு, 30 மே, 2021

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என கூட்டுறவு சேவை, விநியோக அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஊடகங்களிடம் 
தெரிவித்தார்.
இரத்துச் செய்யப்படும் அனுமதிப்பத்திரங்களை அதே பகுதியில் உள்ள ஏனைய விற்பனையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  
அவர் கூறினார்.
                                                                                                                                                    
அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக இரண்டு வர்த்தகர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் 
குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஒரு சில வர்த்தகர்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும், அந்த முறைபாடுகள் தொடர்பா விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>


READ MORE - நாட்டில் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலையில் விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்

வெள்ளி, 28 மே, 2021

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் 
கரையொதுங்கியுள்ளது.
குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.
இதேவேளை கப்பலில் இருந்து ரசாயனங்கள் கலந்த உடைவுகள் வெளியேறினால் அது உயிரினங்களின் இறப்புக்களுக்கு காரணமாக அமையலாம் என்பதால் கப்பல் அனர்த்தத்துக்கு 
உள்ளாகியுள்ள பகுதியில் மீன்பிடி நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தலைவர் பேராசிரியர் ஏ.நவரத்னராஜா தெரிவித்திருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - கொழும்புகப்பலின் இரசாயன கசிவுகளால் உயிரிழந்து கரையொதுங்கும் மீன்கள்

நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்

செவ்வாய், 25 மே, 2021

 இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம்
 திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி 
வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில் 
வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் நெருக்கடி 
நிலைக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நிவாரணம் 5000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசாங்கம்

உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்

வெள்ளி, 21 மே, 2021

இதுவரையில் இனங்காணப்பட்ட அனைத்து விதமான கொரோனா வைரஸிற்கு எதிராகவும் கொவிட் 19 தடுப்பூசிகள் செயற்படும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர 
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகைக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - உலக சுகாதார அமைப்பின் கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்

வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!

புதன், 19 மே, 2021

 

வவுனியாவில் பெண்ணின் தாலிக் கொடி அறுப்பு சம்பவம் தொடர்பில் இருவரை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர்.19-05-2021. இன்றுகாலை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-வவுனியா, மாடசாமி கோவிலடி குளக்கட்டு வீதியில் நேற்று (18.05) மாலை 3.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 58 வயதுடைய பெண் ஒருவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு பிறிதொரு நபரின் சைக்கிளில் ஏறி தப்பிச் 
சென்றிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் செய்த முறைப்பாட்டையடுத்து,வவுனியா தலைமைப் காவல் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில்
,குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி 
தலைமையிலான 
காவல்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரையும், தோணிக்கல் பகுதியயை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன்,அவர்களிடம் இருந்து இரண்டரைப்பவுண் தாலிக்கொடியும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்,அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 


READ MORE - வவுனியாவில் இரண்டரைப்பவுண் தாலிக்கொடி மீட்பு!!

நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்

ஞாயிறு, 16 மே, 2021


நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் .16-05-2021.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்

கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வியாழன், 13 மே, 2021

 
கிளிநொச்சி - தருமபுர காவல் துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுர காவல் துறைக்கு கிடைக்கப்பெற்றத் தகவலுக்கமைய இன்று 13.05.2021அன்றையதினம் குறித்த நபர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
பியரை விற்பனைக்குத் தயார் நிலையில் மறைத்து வைத்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுர காவல் துறை  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை
 தெரிவித்தள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

READ MORE - கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

திங்கள், 10 மே, 2021

வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் சித்தமருத்துவ அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டு வருவதாக அரச சித்தமருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 வடக்கு மாகாணத்தில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இயங்கி வரும் சுதேச மருத்துவ திணைக்களத்தின் அபிவிருத்தி ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதாவது கடந்த 15 வருடங்களை கடந்தும் சுதேச மருத்துவ 
திணைக்களத்திற்கென தனியான காணி ஒதுக்கீடுகளோ நிரந்தர கட்டடங்களோ ஏதும் இன்றி காலத்திற்குகாலம் இடமாற்றப்பட்டு தனியார் கட்டடங்களில் இயங்கி வருகின்றது. 
 அவ்வாறே சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய சித்தமருந்தகம், கிராமிய சித்தமருத்துவமனை, மாவட்ட சித்தமருத்துவமனை, மருந்து உற்பத்தி பிரிவு, மூலிகை தோட்டங்கள், மாகாண மூலிகை கிராமம், சமூக மருத்துவ பிரிவு என்பன அடிப்படை வசதிகளோ
 நிரற்படுத்தப்பட்ட ஆளணியினரோ இன்றி காணப்படுவதுடன் இவற்றில் சில இடவசதிகளின்றி தனியார் கட்டடங்களில் பல இடையூறுகளுக்கு மத்தியில் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையாற்றி 
வருகின்றன 
 இவ்வாறான செயல்களை வடக்கு மாகாண  ஆளுநர் , பிரதம செயலாளர் பணிமனையும், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சும், சுதேச மருத்துவ திணைக்களமும், பாரா முகமாக இருப்பது எமது சங்கம் ஆழ்ந்த மனவேதனையினை அடைகின்றது. 
 மேலும் சித்த மருத்துவத்தினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் பிரமுகர்கள், இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர்கள், உயரதிகாரிகள், சித்த மருத்துவ விரிவுரையாளர்கள் சித்த மருத்துவ நிபுணர்கள், சித்த மருத்துவர்கள் ஆகியோர்கள் மட்டும் அல்லாது ஒவ்வொரு தமிழ் மகனும் முன்வர வேண்டும் என அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 
விடுக்கின்றது. 
 வேகமாக பரவிவரும் COVID-19 பரவலைத் தடுப்பதற்கு COVID- 19 தொடர்பாக இராஜங்க அமைச்சர் சுதர்சினிபெனாண்டோ பிள்ளை ஆயுள்வேத வைத்தியசாலைகளை COVID-19 இற்காக சிகிச்சை நிலையங்களாக மாற்றி அமைக்க கேட்டுக் கொண்ட போதும் வடக்கு
 மாகாணத்தில் அதற்கான நடவடிக்கைகள் வடமாகாண ஆளுநரோ, சுகாதார சுதேச மருத்துவ அமைச்சோ, மேற்கொள்ளாமை அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இவற்றை ஆரம்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். என்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - சித்தமருத்துவ அபிவிருத்தி வடமாகாணத்தில் உயரதிகாரிகளினால் புறக்கணிப்பு

யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்

வியாழன், 6 மே, 2021

 
யாழ்ப்பாண வவுனியா போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணி ஒருவருக்கு மீதி பணம் வழங்காது பயணியை தூசன வார்த்தைகளில் பேசியதுடன் அவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று
 இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம்.06-05-2021. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார்.
இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார்.
இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார்.
எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு,மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார்.
இதன்போது அப்பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது,அதற்கு நடத்துனர் இல்லை,5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில் 
தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார்.
பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? காவல் நிலையத்திற்கா செல்வாய் ? முடிந்தால் செல் என அச்சுறுத்தியுள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை 
தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை 
எடுக்கப்படும் என கூற, பயணியின் பேருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தை கொடுத்துவிட்டு அவரை தூசன வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும்,அவற்றை கேட்கப்போனால் 
நடத்துனர்கள் அச்சுறுத்துவதாகவும் ஏனைய பயணிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

READ MORE - யாழ் வவுனியா சாரதியும் நடந்துனரும் இணைந்து பயணியை அச்சுறுத்தல்