இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது

வியாழன், 21 மார்ச், 2019

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டள்ளார்.
தெல்லிப்பளை வீமன் காமம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனையே தெல்லிப்பளை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
குறித்த இளைஞனை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இதன் போது , நீதிவான் இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தெல்லிப்பளை கட்டுவான் பகுதியில் உள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்தி நகை பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற குழுவின் பிரதான சந்தேக நபர் இவரெனவும் பொலிசார் தெரிவித்தனர்..
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றசாட்டில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது

ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம் வடக்கிகு பாடசாலைகளில்

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வும்,பிரயோகப் பரீட்சையும் நாளை வியாழக்கிழமை(21) முதல் இடம்பெறுமென வடமாகாணக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் மூன்றாம் வகுப்பு 1(அ) தரப் பிரிவுக்கு விஞ்ஞானத் தகவல் தொழில்நுட்பப் பாடங்களுக்கான பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக மாகாணப் பொதுச்சேவை ஆணைக் குழுவால் கடந்த ஒக்ரோபர் 
மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும், பிரயோகப் பரீட்சையும் நாளையும்(21),நாளை மறுதினமும்(22) மாகாணக் கல்வியமைச்சில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்திகள் 20.03.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம் வடக்கிகு பாடசாலைகளில்