உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

புதன், 20 அக்டோபர், 2021

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி கோரலானது இவ்வாண்டு குறையும் போதும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக 
தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

நாட்டில் நாளாந்தம் விலை அதிகரிப்பு என்ற செய்தியே தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்படி அண்மையில் சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை பெருமளவில் 
உயர்ந்திருந்தன.
அத்துடன் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படுமெனவும் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்தன.இந்தநிலையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் 
விலை மீண்டும்
அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர் விடாப்பிடியாக நிற்கிறார்.இவ்வாறு பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் மீண்டும்
 உயர்ந்துள்ளன.
அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை றோல்ஸ் 65 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பிறைட் ரைஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக 
அறியமுடிகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

வியாழன், 14 அக்டோபர், 2021

இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள்.14-10-2021. இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.அதற்கமைய உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

எரிபொருள் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது..11-10-2021.அன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடைவதாகவும், டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், எரிபொருட்களின்
 விலைகளை உயர்த்த
வேண்டுமெனவும் அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.எனினும் இன்று, நாளை எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

திங்கள், 11 அக்டோபர், 2021

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400 கிராம் பால் மாவின் விலை 480 ரூபாய் என்ற புதிய விலையின் கீழ் இன்று சந்தையில்
வெளியிடப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ கிராமிற்கு 350 ரூபாய் அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை
 விடுத்திருந்தோம்.
எனினும் நாட்டு மக்களின் நலனை கருதி அவ்வளவு பெரிய தொகை அதிகரிக்க வேண்டாம் 250 ரூபாய் அதிகரிக்க அனுமதி வழங்குகின்றோம் என அமைச்சர் கூறியுள்ளார்.அமைச்சரின் கருத்திற்கு 
இணங்கி இந்த
விலையில் பால் மா அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று நாட்டிற்கு அவசியமான அளவு பால் மா நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது.அதற்கமைய எவ்வித தட்டுபாடுமின்றி இன்று முதல் பால் மா வழங்கப்படும் என உறுதியாக கூற முடியும் என பால் மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.



நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்காக அமைச்சரின் அனுமதியை கோரியுள்ளதாகவும் விஜேயசிங்க 
குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்படுமாயின் பொது மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வியாழன், 7 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.07-10-2021. இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த 
காற்றும் வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் 
அறிவுறுத்தப்படுகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு