இலங்கை அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

 நாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) முடிவடையும் நிலையில் , ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, சமுர்த்தி உறுப்பினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளிகள், டெண்டர் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் இந்தப் புதிய பதிவிற்குள் நுழைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை , தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டில் திரிபோஷா ஆய்வின் மூலம் வெளிவந்த அதிர்ச்சி புதிய அறிவிப்பு.

வியாழன், 29 செப்டம்பர், 2022

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களுக்காக திரிபோஷா தொடர்பிலான புதிய அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு Aflatoxin இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்ககப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளன
இதையடுத்து தற்போது அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி.29-09-2022. இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா, பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய திரிபோஷாவை பயன்படுத்த முடியும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் திரிபோஷா ஆய்வின் மூலம் வெளிவந்த அதிர்ச்சி புதிய அறிவிப்பு.

நாட்டில் 500 ரூபாவை எட்டும் பாணின் விலை. வெளியான அதிர்ச்சி செய்தி

புதன், 28 செப்டம்பர், 2022

நாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் 
பாசிர் மொஹமட் தெரிவித்தார்.
கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி 
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய 
அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை நிறுத்தியுள்ளனர்.
பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளன பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், பாண் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை.தற்போதைய நிலவரப்படி 
பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும். ஏழைகளின் உணவாக இருந்த பாண் தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது.
பல ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறேன். 
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் 
சில நாட்களில் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளேன்.என் பேக்கரியில் வேலை செய்தவர்களுக்கு என்ன நடக்கும் என தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் 500 ரூபாவை எட்டும் பாணின் விலை. வெளியான அதிர்ச்சி செய்தி

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் விநியோகம்

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க 
தெரிவித்துள்ளார்.
27-09-2022.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன் மூலம் தரம் குறைந்த எரிபொருள் இல்லாது சீரான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிவிக்கையில்,“கடந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது.நாட்டில் எங்களிடம் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 100 இடங்களில் இருந்து
 100 முறைப்பாடுகளை பெற்றிருப்பின், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென கருத முடியும்.
எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் 
லீட்டருக்கு பயணிக்கும் தூரத்தின் எண்ணிக்கை வழமையை விட குறைந்துள்ளது மற்றும் ஒக்கீட்டுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என பல முறைப்பாடுகள்
 கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு, குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க தீர்மானித்துள்ளது.எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.”என கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் விநியோகம்

தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

திங்கள், 26 செப்டம்பர், 2022

தேநீருடன் பெரும்பாலானோர்,  ஏதாவது நொறுக்கு தீனிகள் அல்லது பிஸ்கட் சாப்பிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எனினும், தேநீருடன் உட்கொள்ளும் சில பொருட்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அந்தவகையில் டீயும் என்னமாதிரியான உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.
டீயுடன் முட்டை சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் தேயிலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதத்துடன் கலக்கும் போது, ​​அமிலங்கள் புரோட்டீன் கலவைகளை உருவாக்கி மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் 
அபாயத்தை அதிகரிக்கும்.
தேநீருடன் இனிப்பு பிஸ்கட்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை பெரிதும் அதிகரிக்கும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகனால், உடல் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும். சர்க்கரை 
தொடர்ந்து கட்டுக்குள் இல்லை என்றால், சிறுநீரகம், கண் போன்ற சில உறுப்புகளும் பாதிக்கும்.
டீயுடன் பகோடா பஜ்ஜி சாப்பிடுவது தவறு. ஏனெனில் கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை டீயுடன் உட்கொண்டால், அது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதோடு, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் 
ஏற்படத் தொடங்கும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - தேநீருடன் இந்த உணவுகளை மறந்தும் கூட எடுத்துக் கொள்ளாதீங்க

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

இலங்கையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 
அறிவித்துள்ளார்.
இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் வீதம் நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் உள்ள 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இது மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்கத் தீர்மானித்துள்ளது.
22-09-2022.அன்று முதல்   நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் முந்தைய விலை ரூ.175, புதிய விலை ரூ.150 ஆகும்.
இதேவேளை, ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 278 ரூபாவாகும்.
முன்னதாக ஒரு கிலோ வெள்ளை சீனி 285 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

இலங்கை திரிபோஷ நிறுவனம் திரிபோஷாவின் தரம் கண்டு பயப்பட வேண்டாம்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022


நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷாவின் தரம் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை திரிபோஷ நிறுவனம் இன்று வலியுறுத்தியுள்ளது.
திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு புற்றுநோயான அஃப்லாடோக்சின் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிக நச்சுத்தன்மை கொண்ட புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டது.
திரிபோஷாவில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக்கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட டிரிபோ ஸ்டாக்கில் அஃப்ளாடோக்சின் இருப்பது ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளதாக 
அமைச்சர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி திரிபோஷா கையிருப்பில் அஃப்ளாடோக்சின் கலந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அதன் விநியோகம் இம்மாதம் 6 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் சில திரிபோஷா மாதிரிகளில் அஃப்ளாடோக்சின் கலந்திருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கடந்த 20ஆம் திகதி வெளியிட்ட தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாகொட தேசிய சுகாதார நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​திரிபோஷாவில் வரம்பிற்கு அப்பால் அஃப்ளாடாக்சின் கலந்துள்ளதாக உறுதிப்படுத்தும் 6 பரிசோதனை அறிக்கைகளை நேற்று (21) நாட்டுக்கு 
வெளிப்படுத்தினோம்.
சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் நேற்று அறிக்கைகளை உறுதிப்படுத்தியதோடு, சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் திரிபோஷாவில் அஃப்ளாடாக்சின் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத்
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கை திரிபோஷ நிறுவனம் திரிபோஷாவின் தரம் கண்டு பயப்பட வேண்டாம்

நாட்டில் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

வியாழன், 22 செப்டம்பர், 2022

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அதிகாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களை பெற்றுக்கொள்ள 24 நிறுவனங்கள் விலை மனுக்களை முன்வைத்துள்ளதுடன் அவற்றில் தகுதியை பூர்த்தி செய்துள்ள சில நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் 
வழங்கப்படவுள்ளது.
இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்கும் வேலைத்திட்ட்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் காஞ்சன விஜேசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

நாட்டில் மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில்

புதன், 21 செப்டம்பர், 2022

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலை 
அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது , பல பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பிஸ்கட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மெலிபன் பிஸ்கட் நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனைத் 
தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதால், ந்நாட்டின் முக்கிய பிஸ்கட் நிறுவனங்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி பிஸ்கட் வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், மக்கள் அவற்றினை வாங்காதுவிட்டால் தங்களது நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில்

புதுக்குடியிருப்பில் கடையொன்றில் பாண் விலை 150 ரூபா

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நாடளாவிய ரீதியில் பாணின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் 150 ரூபாவுக்கு விற்கப்படுகிறதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த வெதுப்பகத்தில் 150 ரூபாவுக்கு பாண் விற்பனை செய்யப்படும் நிலையில் ஏன் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறு விற்க முடியாது என சமூக ஆர்வலர்கள் கேள்வி 
எழுப்பியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - புதுக்குடியிருப்பில் கடையொன்றில் பாண் விலை 150 ரூபா

இலங்கையில் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

திங்கள், 19 செப்டம்பர், 2022

நாட்டில் கோழி இறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விடயங்களை அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.இதன்படி, தோலுடனான ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர 
தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விலை நிர்ணயமானது.19-09-2022. இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழி இறைச்சியை பயன்படுத்தி
தயாரிக்கப்படும் பொருட்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் எனவும் அஜித் குணசேகர 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில். தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.நாட்டில் தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் 
அதிகரிக்கப்பட்டமை
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தமது கருத்துக்களை 
பதிவு செய்துள்ளனர்
.அத்துடன், 5000 ரூபா பணம் என்பது தற்போது மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. உணவுகளின் விலைகள் கடுமையாக 
அதிகரித்துள்ளன.
பாண் உண்பதையே நாம் நிறுத்தி விட்டோம். முன்னதாக 20,000 ரூபாவிற்கு ஒன்றரை மாதத்திற்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.ஆனால் தற்போது 20,000 ரூபாவிற்கு பத்து நாட்களுக்கான 
உணவுப் பொருட்களை
மாத்திரமே கொள்வனவு செய்ய முடிகிறது.மாலை நேரங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதால் மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில். தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

நாட்டில் மீண்டும் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

சனி, 17 செப்டம்பர், 2022

இலங்கையில் எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டார்.அதிகரித்த மின்சாரக் கட்டணம் தொடர்பில் நாடு முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகள் கேட்கப்படுவது 
தொடர்பில் ஜனக ரத்நாயக்கவிடம் 
கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும், மின்கட்டண உயர்வைக் குறை கூறாமல் முடிந்தவரை மின்கட்டணம் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மீண்டும் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

கோறளைப்பற்று பதுக்கி வைத்திருந்த பால்மா; அதிகாரிகள் சுற்றிவளைப்பு

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால்.15-09.2022. நேற்றும்.
 .16-09.2022.இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் 
முற்றுகையிடப்பட்டது.
இதன்போது வர்த்தக நிலையத்தில் , பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று
 மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 
வாழைச்சேனை 
பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதிகாரிகள் அதிரடி
இதன்போது சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மா புதிய விலையான 1,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 
கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கோறளைப்பற்று பதுக்கி வைத்திருந்த பால்மா; அதிகாரிகள் சுற்றிவளைப்பு

நாட்டில் மின் கட்டண அதிகரிப்பில் புகாரா நுகர்வோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

வியாழன், 15 செப்டம்பர், 2022

நாட்டில் புதிய மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து தங்களுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய தெளிவுபடுத்தலைப் பெற, நுகர்வோர் இப்போது 0775687387 என்ற எண்ணைப் பயன்படுத்தி ஆணைக்குழுவின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

வீட்டு மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய மின் கட்டண திருத்தத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது
ஒகஸ்ட் 10 முதல் பொது ஆலோசனை செயல்முறை மூலம் பொதுமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பின்னர் இது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





READ MORE - நாட்டில் மின் கட்டண அதிகரிப்பில் புகாரா நுகர்வோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் சிக்கல்

திங்கள், 12 செப்டம்பர், 2022

அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் 
நாளாந்தம் 10 – 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சார சபை 
பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கொழும்பில்11-09-2022.அன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் 
இதனைத் தெரிவித்தார்.
தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் ஒக்டோபர் 20 – 25 ஆம் திகதி வரை மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 
அதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுமெனில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானது என்றார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் சிக்கல்

மதுபாணத்தால் ஒரு மனிதன் மூன்று காரியங்களின் முக்கியத்துவத்தை இழக்கிறான்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஒரு ஆணிற்கு சாராயம்தான் வாழ்க்கை எனில் அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியமில்லாதவனாக மாறிவிடுகிறான்! 
1, அன்பான மனைவியை  ரசிக்க தெரியாத குருடனாக?
2, அழகான குழந்தைகளின் 
பாசத்தை உணர முடியாத முரடனாக!
3, இச்சமுகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக!
மதுவிற்கு ஏன் குடி என்று பெயர் வந்தது 
தெரியுமா?
மது மட்டுமே வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். சேர்த்து குடிப்பதால்..
மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக...
போதையின் மயக்கத்தில், தன்னை நம்பி வாழ வந்தவளை, எந்தவொரு உறுதி மொழி ஏற்று கரம் பிடித்தானோ அதை கைக்கழுவி விட்டு, தன்னுடைய சுகத்திற்காக மட்டுமே வாழ தொடங்கிவிடுகிறான், 
அதன் விளைவாய் (சில பெண்கள்) கட்டியவனை 
வெறுத்து ஒதுக்கி வேறொருவரின் உதவியை நாடுகிறார்கள், இங்கு அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடாத ராமன் இன்னும் பிறக்கவில்லை.
.. இறுதியில் 
தன் மனைவிக்கு மனசு மற்றும் உடல் சுகத்தை கொடுக்க முடியாத ஏமாளி கணவனாகிவிடுகிறான், 
அழகான குழந்தைகளின் பாசத்தை உணர முடியாத முரடனாக...
மதுவிற்கு அடிமையானவன் தன் குழந்தைகளிடம் பேசுவதில்லை, குழந்தைகளிடம் பேசி, அவர்கள் பேசுவதை 
கேட்டால்தான்
 இச்சமூகத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது புரியவரும், இல்லையேல் குடிகாரன் பெத்த பிள்ளைதானே என்று ஏசக்கூடும்,
இச்சமூகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக...
இறுதியில் ஒழுக்கம் கெட்டு அவன் மதிப்பை அவன் இழந்துவிடுகிறான், வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் மரியாதை இல்லாமல், அவன் பேச்சை யாரும் கேட்பதுமில்லை, மதிப்பதுமில்லை,
மது அவன் ‌உழைப்பையும், உயிரையும், சிறுக சிறுக குடிக்கிறது... ஆனால்? தண்டனையோ... அவன் மனைவியை யாசியாக்கும், சிலரை வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்... இவனுக்கு கிடைக்கும் மரியாதைதான் இவன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும், 
குடி தான் உன் வாழ்க்கை என்றால்? 
உனக்கு திருமணம் எதற்க்கு?
மனைவி எதற்க்கு?
குழந்தைகள் எதற்க்கு?
உன்னை திருத்தி நல்வழிப்படுத்தி... எல்லாவற்றையும் சகித்து உன்னுடன் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் உன் குடும்பம் இருக்கிறது, தற்போதைய காலகட்டத்தில் இப்படியொரு குடும்பம் கிடைப்பது
 மிகமிக அரிது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மதுபாணத்தால் ஒரு மனிதன் மூன்று காரியங்களின் முக்கியத்துவத்தை இழக்கிறான்

பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் யாழில் சாதனை

சனி, 10 செப்டம்பர், 2022

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை 
சேர்த்துள்ளனர்.
17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 kg எடை பிரிவில் நா. நகிந்தன், 82kg தூக்கி தங்கமும் ஜொ. ஜதுர்சன் 55kg எடை பிரிவில் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும் கி. சுபிஸ்கரன் 59kg எடை பிரிவில்
 100kg தூக்கி வெள்ளி பதக்கமும் யோ. சாருஜன் 55kg எடை பிரிவில் 80kg தூக்கி 5ஆம் இடமும் 20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65kg எடை பிரிவில் 125kg பழுவை தூக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் தங்க பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பளு தூக்கும் போட்டியில் வவுனியா மாணவர்கள் யாழில் சாதனை

நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படுமாம்

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர மேலும் தெரிவிக்கையில், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம்
 தடைப்படும்.
இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும். 2022 அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க
 வேண்டியிருக்கும்.
தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகின்றது.

மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும். இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக 
இயங்கவில்லை.
நவம்பர் 2022 இற்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாக

 குறிப்பிட்டுள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படுமாம்

நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

வியாழன், 8 செப்டம்பர், 2022

மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க 
தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணையகத்தின் தலைவர்
 சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த வாரத்தில் 1 மணித்தியால மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த மூன்றாம் திகதி முதல் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே என கூறியுள்ளார்.
மேலும் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை. தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான சாதாகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மின் உற்பத்திக்கான நிலக்கரி பிரச்சினை ஏற்படவில்லை எனில் ஒரு மணித்தியால
 மின் துண்டிப்பு கூட முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின் உற்பத்திக்கு தேவையான 
நீர் மட்டம் மற்றும் நிலக்கரி போதியளவு இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்காது என அவர் மேலும் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவித்தல்

தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

புதன், 7 செப்டம்பர், 2022

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக 
திகழ்கின்றது.
அந்தவகையில் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை 
ஏற்படாமல் தடுக்கிறது.
தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் 
உறுப்புகள் சுத்தமாகும்.
அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றம் நீடிக்கும்.
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் 
வாய்ப்புகள் குறைகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - தேங்காய் பாலில் இத்தனை பல மருத்துவ குணங்கள் உள்ளனதாம்

வாங்க பார்ப்போம் அழிக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை எவ்வாறு படிப்பது

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

வாங்க பார்ப்போம் WhatsApp செயலியில் அழிக்கப்பட்ட மெசேஜ்களை எவ்வாறு படிப்பது என்பதை இங்கே பார்க்கலாம் WhatsApp-ல் “டெலீட் ஃபார் மி”, “டெலீட் ஃபார் எவரிஒன்” அம்சம் வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. இருப்பினும், அவ்வாறு நீக்கப்பட்ட செய்திகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, Iphone-ல் நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை
 உங்களால் படிக்க முடியாது.
இருப்பினும் உங்களிடம் Android மொபைல் போன் இருந்தால், எந்த ஒரு மூன்றாம் தரப்பு செயலியை இன்ஸ்டால் செய்தோ அல்லது செய்யாமலோ நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் பார்க்க முடியும். அது எப்படி என்பதை பின்வருமாறு காணலாம்.
நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை எப்படி பார்ப்பது?
டெலீட் செய்யப்பட்ட செய்திகளைப் படிக்க அனுமதிக்கும் உள்ளமைக்கப்பட்ட அம்சம் WhatsApp-ல் இல்லை. இதற்கு மொபைலின் நோட்டிபிகேஷன்களை கண்காணிக்கும் மூன்றாம் தரப்பு செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு செயலி உங்களுக்கு வரும் செய்தியை பதிவுசெய்ய அவை வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் மூலம் பெறப்படுவதை
 உறுதிப்படுத்த வேண்டும்
ஏனெனில், அந்த குறிப்பிட்ட சாட் திறந்திருக்கும் போது அல்லது டெலீட் செய்யப்பட்ட செய்தியைப் பெறும் நேரத்தில் நீங்கள் ஆக்டிவில் இருந்தாலோ படிக்க முடியாது. இதனை எப்படி செய்யலாம் என்பதை 
பின்வருமாறு காண்போம்.
கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, நோட்டிபிகேஷன் ஹிஸ்டரியை ஒரு டேபாக வைத்திருக்கக்கூடிய செயலியை டவுன்லோட் செய்யவும். Notisave ஆப் இதற்கு சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். இந்த ஆப் அதிக எண்ணிக்கையிலான டவுன்லோட்ஸ் மற்றும் மதிப்புமிக்க நல்ல ரிவியூஸ்களை கொண்டுள்ளது.
 ஆப்பை இன்ஸ்டால் செய்தபின், தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கவும். Notisave ஆப்பிற்கு நோட்டிபிகேஷன்கள், புகைப்படங்கள், மீடியா மற்றும் ஃபைல்களை படிப்பதற்கும், தானாகத் தொடங்கும் விருப்பத்தை மாற்றுவதற்கும் அணுகல் தேவைப்படும்.
அது முடிந்ததும், WhatsApp செய்திகள் உட்பட நீங்கள் பெறும் ஒவ்வொரு நோட்டிபிகேஷனின் பதிவையும் இந்த ஆப் கண்காணிக்கத் தொடங்கும்.
இதற்குப் பிறகு, அனுப்பியவர் தனது WhatsApp செய்திகளை நீக்கினாலும், Notisave செயலி மூலம் அவற்றைப் படிக்க முடியும். இது வாட்ஸ்அப்பில் செய்தியின் தன்மையை மாற்றாது. +கூடுதலாக, ஆப்பில் இருந்து 
வெளியேறாமல் பிறர் அனுப்பும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் விருப்பத்தை Notisave வழங்குகிறது.
நீங்கள் தற்செயலாக ஸ்வைப் செய்த நோட்டிபிகேஷன்களைபடிக்கவும் இந்த ஆப் உதவும். நீங்கள் நீக்கப்பட்ட WhatsApp செய்திகளை மீட்டெடுக்க முடியும் என்றாலும், இந்த செயலியில் சில குறைபாடுகள் உள்ளன.
Notisave ஆப்ஸின் இலவசப் பதிப்பைப் பயன்படுத்தினால், நீங்கள் விளம்பரங்களின் சுமையை தாங்க வேண்டியிருக்கும். தவிர, இதன் கட்டணப் பதிப்பு மாதம் ரூ.65 இல் இருந்து தொடங்குகிறது. இது தவிர, செயலியால் எளிய உரையில் இருக்கும் மெசேஜ்களை மட்டுமே 
மீட்டெடுக்க முடியும்.
GIFகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட நீக்கப்பட்ட மீடியா பைல்களை மீட்டெடுக்கவோ அல்லது பார்க்கவோ முடியாது.
3ம் தரப்பு ஆப்ஸ் இல்லாமல் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் 
செய்திகளை எப்படி பார்ப்பது?
உங்களிடம் ஆண்ட்ராய்டு 11 சாதனம் இருந்தால், எந்த செயலியையும் நிறுவாமல் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் 
எளிதில் படிக்கலாம்.
இந்த OS ஆனது உள்ளமைக்கப்பட்ட நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி விருப்பத்துடன் வருகிறது. இது அனுப்புநரால் செய்திகள் நீக்கப்பட்டிருந்தாலும், அனைத்து WhatsApp செய்திகளின் பதிவையும் வைத்திருக்கும். இது பயன்படுத்த முற்றிலும் இலவசம்.
நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் பார்க்க, ஆண்ட்ராய்டு 11 மொபைல் போனில் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரியை எவ்வாறு இயக்குவது 
என்பதைக் காண்போம்.
ஆண்ட்ராய்டு 11 போனில் செட்டிங்ஸை திறந்து, “ஆப்ஸ் & நோட்டிபிகேஷன்ஸ்” என்பதைத் கிளிக் செய்யவும். அதன்பின், “நோட்டிபிகேஷன்ஸ்” என்பதைத் கிளிக் செய்யவும்.
அதில் “நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி” என்பதைத் கிளிக் செய்து, ‘நோட்டிபிகேஷன் ஹிஸ்டரியை பயன்படுத்து’ என்பதற்கு நேராக உள்ள பட்டனை மாற்றவும்.
இதற்குப் பிறகு, உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்கள், வாட்ஸ்அப் செய்திகள் உட்பட, அனைத்தும் கிடைக்கும்.
ஒவ்வொரு முறையும் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் படிக்க நீங்கள் அதே வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். Notisave போலவே, Android 11 சாதனத்தின் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி விருப்பமும் 
மீடியா ஃபைல்களை மீட்டெடுக்காது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - வாங்க பார்ப்போம் அழிக்கப்பட்ட WhatsApp மெசேஜ்களை எவ்வாறு படிப்பது