அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

புதன், 31 ஜனவரி, 2018

கடந்த 5 ஆண்டு காலத்தில் தொடர்ந்தும் வருமான அனுமதிப் பத்திரங்களை பெறாத வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை என கருதி அவற்றுக்கான ஆவணங்கள் அப்புறப்படுத்த அமைச்சரவை அனுமதி 
வழங்கியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளை கொண்ட குழுவின் ஆய்விற்கு பின்னர் இந்த ஆவணங்கள்
 அப்புறப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் காலத்தில் அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு
 பயன்படுத்துவதை தடுக்க தேவையான ஏற்பாடுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தவிர கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கவும் அமைச்சரவை 
அனுமதி வழங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

நாய்க்கடிக்குள்ளான மாணவன் நீர்வெறுப்பு நோயால் யாழில் பலி

செவ்வாய், 23 ஜனவரி, 2018

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயால் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
வழி தவறித் திரிந்த நாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து, குறித்த சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும்
 கடித்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.
மேலும், அந்த மாணவனின் தாய் மற்றும் சகோதரி வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கடித்ததாக கூறப்படும் நாயை
 கண்டுபிடிக்க, அப் பகுதி மக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், மாகாணத்தில் கட்டாக்கலியாக திரியும் அனைத்து நாய்களையும் பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாய்க்கடிக்குள்ளான மாணவன் நீர்வெறுப்பு நோயால் யாழில் பலி

இந்தியா இலங்கைக்கிடையில் குறைந்த கட்டனத்தில் விமான சேவை

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து இயங்கவுள்ளது.
 நாளொன்றுக்கு மூன்று முறை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இடம்பெறும் இந்த விமான சேவை குறைந்த  கட்டன விமான சேவையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இதன் முதலாவது விமான சேவை இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >>


READ MORE - இந்தியா இலங்கைக்கிடையில் குறைந்த கட்டனத்தில் விமான சேவை

நொச்சி மோட்டை பகுதியில் விபத்த்தில் இருவர் படுகாயம்

வவுனியா - ஓமந்தை நொச்சி மோட்டை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த
 கென்டர் ரக வாகனம் ஒன்று நொச்சி மோட்டை பகுதியை அண்மித்த 
வேளை அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீதும்
 வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >>

READ MORE - நொச்சி மோட்டை பகுதியில் விபத்த்தில் இருவர் படுகாயம்

வாள்வெட்டு சம்பவத்தில் குழந்தை யாழில் வெட்டிக்கொலைகொலை

சனி, 20 ஜனவரி, 2018

வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாய் ஒருவர் படுகாயம் அடைந்ததுடன் வாள் வெட்டை மேற்கொண்ட மகனும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்இ இன்று காலை குறித்த தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன்இ கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர் நஞ்சை உட்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்
தனுசன் நிக்சையா (03)இ ஈஸ்வர் (33) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பரமேஷ்வரி (55) என்பவர்
 படுகாயமடைந்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >>

READ MORE - வாள்வெட்டு சம்பவத்தில் குழந்தை யாழில் வெட்டிக்கொலைகொலை

பால் புரக்கேறியதில் இரண்டு மாத குழந்தை யாழில் உயிரிழந்துள்ளதூ

பால் புரக்கேறியதில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணம், யாழ் வீதியை சேர்ந்த இரண்டு மாதங்களான தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தாயார், நேற்று அதிகாலை 2 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, குழந்தையை உறங்க செய்த பின்னர் தானும் உறங்கியுள்ளார்.
பின்னர் நேற்று காலை 7 மணிக்கு குழந்தையை எழுப்ப சென்ற போது, மூக்கினால் பால் வழிந்தபடி, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது.
உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் 
தெரிவித்தனர்.
இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி, நமசிவாயம் பிறேம் குமார் 
மேற்கொண்டிருந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பால் புரக்கேறியதில் இரண்டு மாத குழந்தை யாழில் உயிரிழந்துள்ளதூ

பொலிஸாரின் நேர்மையை யாழில் கண்டு அசந்து போகும் தமிழ் மக்கள்!!

யாழில் மாணவர் ஒருவரால் தவறவிடப்பட்ட பணப்பை ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு குறித்த மாணவரிடமே ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் 
உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து மேலும் 
தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகருக்கு சென்று வீடு திரும்பியபோது, தனது பணப் பையினைத் தவறவிட்டமை தெரிந்து கதறி 
அழுதுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பணப் பை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைக்கு முன்பாக இருப்பதுகண்டு, அந்த இடத்தில் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸ் 
உத்தியோகத்தர் ஒருவர் அதனை எடுத்துள்ளார்.குறித்த பணப்பையில் தொலைபேசி இலக்கம் ஒன்றும் இருந்துள்ளது. இதன்படி அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பெடுத்த குறித்த
 பொலிஸ் உத்தியோகத்தர் மாணவனின் குடும்பத்தினரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து
 ஒப்படைத்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பொலிஸாரின் நேர்மையை யாழில் கண்டு அசந்து போகும் தமிழ் மக்கள்!!

இரு வடக்கு தமிழர்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்

வெள்ளி, 19 ஜனவரி, 2018

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தின் வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் இரண்டு பெண் வீராங்கனைகள் உட்பட ஏழு வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
'கண் போய்ஸ்' விளையாட்டுக்கழகத்தின் குத்துச்சண்டை வீரர்களுக்கான தங்கசாமி தர்சிகா 23 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,
தியாகராசா நாகராஜா 19 வயதுக்குட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,
புருசோத்தமன் சியாமினி 19 வயதுகுட்பட்ட 48 கிலோ எடைப்பிரிவில்வெண்கலப் பதக்கத்தையும்,
குகனேந்திரன் கபிசன் 19 வயதுக்குட்பட்ட 70 கிலோஎடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும்,
மகேந்திரராசா பிரவீன் 23 வயதுக்குட்பட்ட70 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.
தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்ற வீரர்கள் தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இரு வடக்கு தமிழர்கள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்

நீர்வேலி வடக்கில் இரு வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட நீர்வேலி வடக்கில்  புதன்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளில் புகுந்த கொள்ளைக் கும் பல் ஆயுதமுனையில் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள் களை கொள்ளையிட்டுத்
 தப்பித் துச் சென்றுள்ளது.
நீர்வேலி வடக்கு இராசபாதை வீதியுள்ள இரண்டு வீடுகளிலேயே  புதன்கிழமை அதிகாலை 1.30 மணி யளவில் இந்தச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இளம் தம்பதியர் அவர்களது
 குடும்பத்தினரும் வசித்த வீடொன்றுக்குள் புகுந்த கொள் ளைக் கும்பல், இளம் குடும்பத் தலைவரை யும் அவரது சகோதரனையும் தாக்கிவிட்டு 15 பவுண் தங்க நகைகளைக் 
கொள்ளை யிட்டுத் தப்பித்தது.
அந்த வீட்டுக்கு அயலிலுள்ள மற்றொரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபத் தம்பதியரைத் தாக் கிவிட்டு நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை 
கொள்ளையிட்டுத் தப்பித்தது. வயோதிபத் தம்பதிகளுக்குத் துணையாக அவர்களது மகன் தினமும் இரவில் அங்கு சென்று தங்குவார் எனவும்; அன்றைய தினம் அவர் செல்லவில்லை எனவும்  
தெரிவிக்கப் பட்டது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - நீர்வேலி வடக்கில் இரு வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளை

பொங்கலையும் 30 லட்சம் சொத்தினையும் இழந்த பெண்மணி

கொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார்.
கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில் வசிக்கும் கணவனும் மணைவியும் தனியாக வாழும் குடும்பத்தினர் அண்மையிலேயே பிள்ளைகளிடம் லண்டன் சென்று 
திரும்பியிருந்தனர் .
இந்த நிலையில் தைப் பொங்கல் தினத்தன்று பொங்கலிற்காக அதிகாலையில் எழுந்த வீட்டின் கதவுகளை திறந்து கோலம் போடும் பணியில் ஈடுபட்டிருந்தவேளையில் வீட்டின் பின் கதவு வழியாக உள் நுழைந்த திருடர்கள் இத் துணிகரக் கொள்ளைச் சம்பவத்தில் 
ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலையில் எழுந்த பெண்மணி வீட்டின் வாசலில் கோலம் இடும் பணியில் நீண்ட நேரம் ஈடுபட்டிருந்துள்ளார் . இந்த சமயம் கணவர் உறக்கத்தில் இருந்துள்ளார்.
அச் சமயம் வீட்டின் கதவு வழியாக உள்நுளைந்த கொள்ளையர்கள் சாமி அறையில் அலுமாறியில் நகை மற்றும் பணம் என்பவை வைக்கக்பட்டிருந்த பணப்பையினை களவாடியவாறு வீட்டின் மதிலினால் ஏறித் தப்பியோடியுள்ளார்.
குறித்த கொள்ளை தொடர்பில் கருத்து வெளியிட்ட வீட்டின் 
உரிமையாளர் தர்மராயா
நான் உறக்கத்தில் இருந்தபோது அதிகாலை 6 மணியை அண்மித்தவேளையில் பதற்றத்துடன் மனைவி என்னை எழுப்பி விடயத்தினை தெரிவித்து பணம் நகை என்பன வைக்கப்பட்டிருந்த கைப் பையினைக் கானவில்லை எனக் கூறியபோதே விடயத்தினை அறிந்துகொண்டேன்.
எமது பிள்ளைகளிடம் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் பிள்ளைகள் தந்த நகைகள் எமது நகை என 55 பவுண் நகை வைத்திருந்தோம் அத்தோடு காசாக ஆயிரம் பவுண்ஸ்சும் 30 ஆயிரம் ரூபாவும் என அனைத்தும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் செல்லும்போது சாமி அறையில் எடுத்து வந்த பணப்பையினை வீட்டின் பின் பகுதியில் வைத்து தேடுதல் நடாத்தி அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை மட்டும் கைப்பையில் 
எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு இடம்பெற்ற திருட்டினை அறியாத பெண்மணி கோலம் நிறைவடைந்து வீட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

அதன்போது சாமி அறை திறந்துள்ளதனை அவதானித்து ஓடிச் சென்று பார்த்தவேளை அலுமாரி திறந்து உள்ளதனை கண்டு பதற்றத்துடன் அவதானித்துள்ளார்.
அலுமாரியில் இருந்த பணம் , நகைகள் வைத்திருந்த கைப்பையை கானாது கணவரை அவசரமாக எழுப்பி விடயத்தை தெரிவித்து தேடியவேளையிலேயே கொள்ளை இடம்பெற்றதனை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு முறையிடப்பட்டதனைத் தொடர்ந்து பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - பொங்கலையும் 30 லட்சம் சொத்தினையும் இழந்த பெண்மணி

அமைச்சரவை மதுபான விற்பனை குறித்த சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய அனுமதி

செவ்வாய், 16 ஜனவரி, 2018

பெண்களுக்கு மதுபானம் விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் இரவு 10 வரையில் திறந்து வைத்தல் ஆகியன தொடர்பிலான சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்த சுற்று நிருபத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு மதுபானம் விற்பைன செய்தல், மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல், மற்றும் இரவு 10.00 மணி வரையில் மதுபான விற்பனை நிலையங்கைள 
திறந்து வைத்தல் ஆகிய தொடர்பில் நிதி அமைச்சினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சினால் 
வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - அமைச்சரவை மதுபான விற்பனை குறித்த சுற்று நிருபத்தை ரத்துச் செய்ய அனுமதி

நாட்டில் வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல்

சனி, 13 ஜனவரி, 2018

இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
மேகமூட்டம் கடுமையாக இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடல் திடீரென்று சீற்றத்துக்கு உள்ளாவது, காற்றின் வேகம் மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவது என்பது உள்ளிட்ட தன்மைகள் உருவாகும் என்றும் அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பலப்பிட்டிய வரையிலான கரையோரப் பகுதியில் இந்த அறிகுறிகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அப்பகுதிகளில் பணியாற்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும்
 அறிவிக்கப்பட்டுள்ளது¨.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - நாட்டில் வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல்

நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நிலையில் உயிரியல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன், டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2017ஆம் வருடத்தில் சுமார் 400பேர் டெங்கு நோயினால் இலங்கையில் உயிரிழந்ததுடன், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மீள் மதிப்பீட்டில் புலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

புதன், 10 ஜனவரி, 2018

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம்
 ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத 20000 மாணவ மாணவியர் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் 
செய்திருந்தனர்.
இவர்களில் 234 மாணவ மாணவியரின் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பாக புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள மாணவ மாணவியரின் பெறுபேறுகள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மீள்மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து புள்ளிகளில் மாற்றம் ஏற்படா மாணவ மாணவியரின் விபரங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியருக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதிக்குள் பூர்த்தியாகும் என கல்வி அமைச்சு
 அறிவித்துள்ளது.
பாடசாலைகள் கிடைக்கப்பெறாத மாணவ மாணவியர் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரையில் மேன்முறையீடு செய்ய முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது..


READ MORE - மீள் மதிப்பீட்டில் புலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

முழங்­கா­வில் ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில்
 கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. முழுங்­கா­வில் தேசிய பாட­சா­லை­யில் கல்வி கற்­கும் உத­ய­காந்­தன் பிர­சாந்த் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­தான்.
பிர­சாந்த் வழமை போன்று தனி­யார் கல்வி நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்டு நண்­பர்­க­ளு­டன் வீடு திரும்­பி­ய­போதே இந்த அசம்­பா­வி­தம் நடந்­துள்­ளது. நண்­பர்­கள் தப்­பிக்­கொள்ள பிர­சாந்த் வாக­னத்­துக்­குக் கீழ் 
சிக்­கிக் கொண்­டுள்­ளான்.
தடம் புரண்ட வாக­னத்­தைத் தூக்­கு­வ­தற்கு வேறொரு ஜேசிபி வர­வ­ழைக்­கப்­பட்டு தூக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே மாண­வன் மீட்­கப்­பட்­டான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - முழங்­கா­வில் ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி