நாட்டில் ஏ 9 வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதன், 31 ஜனவரி, 2024


உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் .31-01-2024.இன்றைய தினம் ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின்
 இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
எதிர்கால சந்ததிக்கான சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகள் முதல் கட்டமாக 31-01-2024.இன்றைய தினம்  மாங்குளம் முதல் முறிகண்டி பகுதி வரையில் 
முன்னெடுக்கப்பட்டது. 
பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பனிக்கன்குளம் கிராம 
அலுவலர் பிரிவின் மக்கள் உலக சிறுவர் நலன் காப்பக
 ஊழியர்களும் இணைந்து இந்த நடவடிக்கையை 
முன்னெடுத்திருந்தனர். 
குறிப்பாக நிரந்தர தீர்வாக மாங்குளம் முதல் முறுகண்டி வரையிலான பகுதிகளில் 15 குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 ஆகவே குறித்த வீதியை பயன்படுத்துகின்ற 
மக்களிடம் கிராம
 மக்கள் மற்றும் உலக சிறுவர் நலம் காப்பகத்தினர் பணிவாக வேண்டிக்கொள்வது நீங்கள் பாவனை செய்கின்ற 
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை வீதிகளில் ஆங்காங்கே வீசாது உரிய தொட்டிகளில் போட்டு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் ஏ 9 வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன 
தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் 
வழங்கியுள்ளது.
இதேநேரம் இலங்கையின் சுதந்திரதின நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

பாடசாலை பஸ்சின் சாரதி கனடாவில் விபத்து ஒன்றை மேற்கொண்டடுள்ளார்

திங்கள், 29 ஜனவரி, 2024

கனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி, குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார். நயகராவின் வெல்லென்ட் பகுதியின்
 சார்ளஸ் ட்ரைவ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் பஸ்ஸின் ஒரு டயர் கழன்றிருந்தது எனவும், நான்கு பிள்ளைகள் பஸ்ஸில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். பெண் ஒருவர் செலுத்திய வாகனத்தில் பஸ் மோதுண்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை பஸ்ஸில் நான்கு
 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர் எனவும், மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - பாடசாலை பஸ்சின் சாரதி கனடாவில் விபத்து ஒன்றை மேற்கொண்டடுள்ளார்

நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  
வெளிநாட்டில் படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டது. சிறப்பு அனுமதியின் கீழ், படத்தின் படப்பிடிப்பிற்காக ஜனவரி 24 முதல் 29 வரை இந்த 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே துறை வழங்கியுள்ளது. 
சில பகுதிகளாக நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று கொழும்பு திரும்பும் போதே ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

ஊர்காவற்றுறையில் புகையிலை கொள்வனவில் மோசடி; யால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

சனி, 27 ஜனவரி, 2024

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நம்பிக்கை அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த 
வியாபாரியிடம் உலர்த்திய புகையிலையை விற்பனைக்காக 
கொடுத்துள்ளனர்.
 எனினும் குறித்த வியாபாரி நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவாகியமை தொடர்பில் விவசாயிகள் மத்தியில் தெரிய வந்த 
நிலையில் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
செய்துள்ளனர்.
 இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஊடாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கையொப்பம் ஈட்டு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகள் ஆகிய நாங்கள் கடந்த 2023 ஆண்டு புகையிலைகளை பயிர் செய்து 
அதனை எங்கள் வாழ்வாதாரமாக மேற்கொண்டோம். 
இந்நிலையில் உலர்த்திய புகையிலைகளை நம்பிக்கை 
அடிப்படையில் எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிப்பவருக்கு விற்பனை செய்தோம். 
 அவர் அதற்கான பணத்தினை கடந்த 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்பு தருவதாக கூறினார். ஆனால் அவர் பணத்தை குறித்த தவணையில் கொடுக்காததால் அது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்தோம்.
 இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து பின்னர் சட்டத்தரணி ஊடாக பிணையில் விடுதலை செய்தனர். இந்நிலையில் அவர் பணத்தினை ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு வழங்குவதாக 
சட்டத்தரணி ஊடாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையிலும் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.
 ஆனால் குறித்த திகதியில் நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர் சமுகம் தரவில்லை என பொலிஸாரால்
 தெரிவிக்கப்பட்டது. இதனால் 35 பேருக்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது
 தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்கள் பணத்தினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - ஊர்காவற்றுறையில் புகையிலை கொள்வனவில் மோசடி; யால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

தென் அமெரிக்க நாட்டில் உலகிலியே முதன்முறையாக போடப்பட்ட டெங்கு தடுப்பூசி

வெள்ளி, 26 ஜனவரி, 2024

உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது.
அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், 
தொடர் காய்ச்சல். 
ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி
 போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.
 இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது. என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தென் அமெரிக்க நாட்டில் உலகிலியே முதன்முறையாக போடப்பட்ட டெங்கு தடுப்பூசி

இலங்கை களனி கங்கைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பாரிய முதலை

வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கைகளனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25.01) பிற்பகல் 2.00 மணியளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். முதலையின் உடலைக் கண்ட இளைஞர்கள் குழு அதை கீழே மிதக்க ஆற்றின் நடுவில் இழுத்துச் சென்றது.விட்னர்  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கை களனி கங்கைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பாரிய முதலை

நாட்டில் இரண்டு வகையான மாதுளை இனங்கள் கண்டுப்பிடிப்பு

புதன், 24 ஜனவரி, 2024

 

ஹோமாகம, தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' ஆகிய இரண்டு
 புதிய வகை 
மாதுளை வகைகள் இன்று (24.01)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு மாதுளை பழங்களும் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு சமீபத்திய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது மற்றும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலிருந்தும் 20-25 கிலோ மாதுளை
 அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம்  ஒரு ஏக்கருக்கு 8 மில்லியன் ரூபாய் என்று 
அமைச்சர் கூறினார்.
குறிப்பாக இந்த இரண்டு வகையான மாதுளைகளும் உலர் வலயத்தில் பயிரிடுவதற்கு ஏற்றது, மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக இந்த வகைகளை
 பயன்படுத்தலாம்.
எமது நாட்டில் மாதுளை இறக்குமதி செலவை குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைவாக, இந்த நாட்டில் பயிரிடக் கூடிய விவசாயப் பயிர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
 செய்யப்படுவதைத் தடுக்க, ஏற்றுமதி 
செய்யக்கூடிய பயிர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
என்பது  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் இரண்டு வகையான மாதுளை இனங்கள் கண்டுப்பிடிப்பு

மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

கர்ப்பிணிப்பெண்களின் போசணையானது நம்நாட்டில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் நமக்கு அறியக்கிடைக்கிறது.
இத்தகைய காலக்கட்டத்தில் அவர்கள் இதனை கருத்திற் கொள்ளாவிடின் பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தான 
நிலைமைகளை உருவாக்க கூடும். இவர்களிற்கு விலைமதிப்பு மிக்க உணவு வகைகளை வாங்கி உட்கொள்ள போதுமான வசதியில்லாமல் 
இருக்கலாம்.
அதற்கு கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது ஊரில் இந்த மீன் வகை தாராளமாக 
கிடைக்கும்.
இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவை அதிகம் உட்கொண்டால் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியுடனும், மூளை 
சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்குமென 
கண்டறியப்பட்டுள்ளது
கர்ப்ப காலத்தில் முதலில் சிசுவிற்கு முண்ணான் விருத்தியாவதாலும், கண் மற்றும் கை தொடர்பு மிகச் சிறப்பாக செயல் படவும் இந்த மீன் உணவு காரணமாக அமைகிறது.
இங்கு மீன் உணவு எனும் போது மீனில் காணப்படும் கொழுப்பமிலமான போலிக்கமிலம் முண்ணான் விருத்திக்கும், மூளை 
வளர்ச்சிக்கேதுவான ஒமேகா - 3 கொழுப்பமிலம் அங்கு உள்ளதாலாகும். தாயின் இதய ஆரோக்கியத்திற்கும் இந்த ஒமேகா - 3 கொழுப்பமிலம்
 இதமானது.
எனவே மீன் உணவை அளவுக்கதிகமாக எடுக்காமல் அளவாக உட்கொண்டு நல்ல புத்திகூர்மையான குழந்தைகளை ஆரோக்கிமாக பெறவும் மீன் உணவு ஏதுவாக அமையும்.
குறிப்பு - அளவுக்கதிகமான மீன் உணவு குழந்தைகளின் புத்திகூர்மையை மழுங்கவும் செய்யும் .என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

கனேடிய பெண் ஒருவர் வழியில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த முறை

திங்கள், 22 ஜனவரி, 2024

கனேடிய பெண் ஒருவர் நடந்துசெல்லும்போது, வழியில் ஒரு கவர் கிடப்பதை கவனித்துள்ளார். அதை அவர் எடுத்துப் பார்க்க, அதில் பெரும் தொகையிலான பணம் இருப்பதை அவர் கண்டுள்ளார். கவரில் 
எழுதப்பட்டிருந்த
 வார்த்தைகள் கடந்த வாரம், வான்கூவரைச் சேர்ந்த Talia Ball, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வழியில், பனியில், கவர் ஒன்று கிடப்பதைக் கவனித்துள்ளார்.
 அவர் அதை எடுத்துப் பார்க்க, அந்த கவரில் பெரும் தொகையிலான பணம் இருந்துள்ளது. மேலும், அந்தக் கவரில் ’குழந்தைகளுக்காக’ என எழுதப்பட்டுள்ளதைக் கவனித்த Talia, அது யாரோ
 ஒரு குடும்பத்தினருடையது என்பதையும், அவர்கள் 
அந்தக் கவரை தவறவிட்டிருக்கலாம் என்பதையும் புரிந்துகொண்டு, உடனடியாக, சமூக ஊடகங்களில் தான் ஒரு 
கவரைக் கண்டெடுத்ததையும், அதில் பணம் இருந்ததையும் குறித்து விவரமாக குறிப்பிட்டு, பணத்தின் உரிமையாளர் தக்க ஆதாரங்களுடன் வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பணத்தை இழந்த நபரின் நண்பர் ஒருவர் இந்த விடயத்தை அறிந்து, அந்த நபரை Taliaவிடம் அறிமுகம் செய்துள்ளார். பணத்தை இழந்து 
கவலையடைந்திருந்த அந்தக் குடும்பம், பணம் திரும்பக் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளது.
 பணத்தைத் தவறவிட்ட அந்த நபரின் மனைவி, தாங்கள் தவறவிட்ட பணத்தைக் கண்டெடுத்த பெண் அதைத் திருப்பிக் கொடுக்க 
முன்வந்ததை அறிந்ததும் ஓவென கண்ணீர் விட்டு அழுதாராம். அந்தக் குடும்பத்தினர் Taliaவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு 50 டொலர்களை பரிசாக வழங்கியுள்ளார்கள்..என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - கனேடிய பெண் ஒருவர் வழியில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த முறை

நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளின் முழுமையான பகுப்பாய்வு தேவை

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள்குறித்து சுகாதார அமைச்சு முழுமையான பகுப்பாய்வை 
மேற்கொள்ள வேண்டும்
 என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான
 வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஏதேனும் பிரச்சினையோ அல்லது மோசடியோ ஏற்பட்டால், தற்போதைய சுகாதார நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான கொள்வனவு செயற்பாடுகள் காரணமாக கடந்த காலங்களில் ஆர்டர் செய்யப்பட்ட மருந்துகள் அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, கேள்விக்குரிய கொள்முதலால் நாடு இழக்கும் பணத்தை மிச்சப்படுத்தவோ அல்லது மீட்பதற்கோ 
தற்போதைய சுகாதார 
அமைச்சருக்கும் தற்போதைய சுகாதாரச் செயலாளருக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு உள்ளது என்று மருத்துவ மற்றும்
 மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார் என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளின் முழுமையான பகுப்பாய்வு தேவை

அதிக தங்கம் கொண்ட நாடு உலகிலேயே அமெரிக்கா பங்கு வகிக்கிறது

சனி, 20 ஜனவரி, 2024

உலகிலேயே தங்க கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமான மதிப்பின் சேமிப்பாக 
செயல்படுகிறது.
உலகளாவிய ரீதியில் அதிக தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. 
அமெரிக்காவிடம் 8,1336.46 டன்கள் தங்கம் கையிருப்பில் உள்ளது. இந்த வரிசையில், 3 ஆயிரத்து 352.65 டன் தங்க இருப்புடன் ஜேர்மனி இரண்டாவது இடத்தையும் 2 ஆயிரத்து 451.84 தங்க இருப்புடன் இத்தாலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பிரான்சிடம் 2,436.88 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 2,332.74 டன் தங்கம் இருப்புடன், ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடான சீனா, 2,191.53 டன் தங்கம் 
கையிருப்பில் உள்ளது. 
சுவிட்சர்லாந்தில் 1,040.00 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. ஜப்பானில் 845.97 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 800.78 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் 612.45 டன் தங்கம் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தங்கம் வரலாற்று ரீதியாக ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பை ஆதரிக்கிறது. 
தங்கத் தரம் இனி பரவலாக நடைமுறையில் இல்லை என்றாலும், சில நாடுகள் இன்னும் நாணய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு முறையாக தங்க இருப்புக்களை உணர்கின்றன என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - அதிக தங்கம் கொண்ட நாடு உலகிலேயே அமெரிக்கா பங்கு வகிக்கிறது

நாட்டில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் வெளியாகியுள்ள புதிய தகவல்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 
மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு 
தெரிவித்துள்ளது.
 பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டில் அஸ்வெசும திட்டம் மூன்று இலட்சம் குடும்பங்கள் புதிதாக தகுதிபெற்றுள்ளனர்

வியாழன், 18 ஜனவரி, 2024

நாட்டில்7 இலட்சம் நிவாரண மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக 
நிவாரணத்தை பெற தகுதி பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
அத்துடன் 5000 குடும்பங்கள்  தகுதியற்றவை என  பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் 
குறிப்பிட்டுள்ளது. 
அஸ்வசும நலன்புரி திட்டம் தொடர்பாக  640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மூன்று இலட்சம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக   
பதில் நிதியமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.  
நிதியமைச்சில்.18-01-2023. இன்று நலன்புரி நன்மைகள் சபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார். 
நிவாரணப் பலன்களைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது 
குறிப்பிட்டுள்ளார். 
புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
இதுவரை நிவாரணம் பெற்றுக் கொண்டிருந்த 5,209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 2,567 குடும்பங்கள் தாங்கள் பெறும் சலுகைகளின் மட்டத்திலிருந்து கீழே 
சென்றுள்ளதாகவும்,   மேலும் 50,882 பேர் தமது 
நன்மை மட்டத்தை உயர்த்தியுள்ளதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 
ஏறக்குறைய 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றை விரைவில்
 பரிசீலித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
.என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அஸ்வெசும திட்டம் மூன்று இலட்சம் குடும்பங்கள் புதிதாக தகுதிபெற்றுள்ளனர்

நாட்டில் பொருட்களின் விலை குறித்து சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

புதன், 17 ஜனவரி, 2024

நாட்டில் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
இதன்படி , சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் , முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மேலும் 
தெரிவித்துள்ளது.
 வற் வரியானது பதினெட்டு சதவீதமாக அதிகரித்தமையால் சந்தையில் சில பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமை.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பொருட்களின் விலை குறித்து சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்கள் பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த நிபுணர்கள்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

 

புதுப்புது உணவு வகைகள் சமைப்பதிலும் சமையல் நிபுணர்கள் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். 
அந்த வகையில் பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு 'பீட்சா'வை உருவாக்கி கின்னஸ் சாதனை 
படைத்துள்ளனர்.
இந்த பீட்சாவில் 940 வகையான பிரஞ்சு சீஸ்களும், 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் இடம்பெற்றுள்ளன. 
இந்த 'பீட்சா' குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்கள் பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த நிபுணர்கள்

நாட்டில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 15 ஜனவரி, 2024

நாட்டில்  இந்த நாட்களில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை சுற்றி கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. 
இதன் விளைவாக, வாகனம் ஓட்டும்போது சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
அதன்படி, முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்டுவது மிகவும் அவசியம். மணிக்கு 100 கிமீக்கு குறைவான வேகத்தில் ஓட்டுவதும், இரண்டு வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பராமரிப்பதும் முக்கியம் என நெருஞ்சாலை தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைஅடுத்த வாரம் முதல் அதிகரிப்பு

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்
 தெரிவித்துள்ளது. 
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன். ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
வட் வரி 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைஅடுத்த வாரம் முதல் அதிகரிப்பு

மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

சனி, 13 ஜனவரி, 2024

நாட்டில்  மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சி கோழி மற்றும் முட்டை கோழி விலை குறைவடைந்துள்ளது.
 குறிப்பாக ஒரு கிலோ இறைச்சி கோழி 1,360 ரூபாவாகவும் முட்டை கோழி கிலோ 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு 
வருகின்றது.
 இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1,450-1,500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்கப்பட்டு வருகின்றமை  என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 
நடாத்திவரப்பட்டது.
 இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் 
பராமரிக்கப்பட்டு வந்தன.
 எனினும் ஐந்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்த நாய்கள் சரணாலயம் சுகாதார வசதிகள் இன்மையாலும் மருத்துவ 
துறையின் போதிய ஆதரவின்மையாலும், நாய்களை
 பராமரிப்பதற்கு போதிய 
பராமரிப்பாளர்கள் இல்லாமையாலும் அறக்கட்டளையினர் நாய்கள் சரணாலயத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
 தகுந்த பணியாளர்கள், மருத்துவ ஒத்துழைப்பு கிடைத்ததும் மீண்டும் திறக்கப்படும் அதுவரை நாய்களை அங்கு விடவேண்டாம் என அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ஊடாக செல்லும் ரயில்கள் இரத்து

வியாழன், 11 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ரயில் பாதையில் புனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த பாதையின் 
போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.  
இதன் காரணமாக இன்று (11.01) கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயங்கும் இரண்டு இரவு அஞ்சல் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
மேலும், நாளை (12.1) காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு செல்லும் உதயாதேவி விரைவு புகையிரதம் மற்றும் மட்டக்களப்பில் 
இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
 வெள்ள நிலைமை காரணமாக நேற்றும் மட்டக்களப்பு மார்க்கத்தின் பல ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ஊடாக செல்லும் ரயில்கள் இரத்து

நாட்டில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில்2024 ஜனவரியில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10.01) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  
இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளதுடன், குழுவின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான  நாலக பண்டார கோட்டேகொட இதனை
 சமர்ப்பித்துள்ளார்.  
இது தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அவர், “நீர் மின் உற்பத்தி அதிகரிப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு விசேடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்றார். 
அதாவது. இது தவிர, சோலார் பேனல்கள் மீதான வாட் வரியை நீக்குதல், உற்பத்தித் தொழில்களுக்கு சலுகைகள், மின் கட்டணம் செலுத்துவதற்கான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகம் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

துருக்கிக்கு கனேடியர்களுக்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி

செவ்வாய், 9 ஜனவரி, 2024

கனடிய பிரஜகள் துருக்கிக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 90 நாட்களைக் கொண்ட சுற்றுலா 
வீசாவின் ஊடாக இவ்வாறு துருக்கி நாட்டுக்கு பயணம் 
செய்ய முடியும்.
 இதுவரை காலமும் துருக்கிக்கு பயணம் செய்யும் கனடியர்கள் வீசா பெற்றுக்கொண்டே பயணம் செய்ய வேண்டும் . சுற்றுலா நோக்கில் பயணம் செய்யும் கனடியர்கள் வீசா இன்றி துருக்கி செல்ல முடியும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
 கடந்த காலங்களில் துருக்கிக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு, கனடியர்கள் 60 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. கனடாவிற்கான துருக்கி தூதரகம் இந்த வீசாவை
 வழங்கி வந்தது.
 எனினும் மாணவர், மருத்துவ மற்றும் தொழில்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள விரும்பும் கனடியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 வீசா தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் மூன்றாம் தரப்பு இணைய தளங்களை நம்ப வேண்டாம் என கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - துருக்கிக்கு கனேடியர்களுக்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி

நாட்டில் கொழும்பில் வோல்பேசியா டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விடுவிக்க நடவடிக்கை

திங்கள், 8 ஜனவரி, 2024

கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பிரதேசங்களில் நுளம்புகளை கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் 
தொற்றுள்ள 
நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர 
தெரிவித்தார். 
 இத்திட்டம் ஆராய்ச்சி மட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு மாவட்டத்தின் பல 
வைத்திய அதிகாரி
 பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 
 ஆராய்ச்சி மட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் கிடைக்கும் பெறுபேறுகளின் பிரகாரம் எதிர்காலத்தில் 
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கொழும்பில் வோல்பேசியா டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விடுவிக்க நடவடிக்கை