கொக்கட்டிச்சோலை இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது

புதன், 30 ஜனவரி, 2019

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சட்டில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்சல் ஊழல் மோசடிப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பிரதேசத்தில் நேற்று 28,01,2018, திங்கட்கிழமை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஆற்று மண் ஏற்றிக் கொண்டிருந்த போது பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது லொறியை கைவிட்டுவிட்டு லொறி உரிமையாளர் உட்பட மண் ஏற்றியவர்கள் தப்பியோடியுள்ளதையடுத்து பொலிசார் லொறியை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு 
எடுத்துச் சென்றனர்
இந்த நிலையில் லொறி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து லொறியை மீட்பதற்கு முயற்சித்த போது அவர்களிடம் 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக தருமாறு கோரியுள்ள நிலையில் லொறி உரிமையாளர் இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவுக்கு 
தெரிவித்துள்ளார்.
அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று மாலை 5.35 மணியளவில் லொறி உரிமையாளர் 25 ஆயிரம் ரூபாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியபோது இலஞ்ச ஊழல் மோசடிப் பிரிவினரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


READ MORE - கொக்கட்டிச்சோலை இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது

மீண்டும் இலங்கையில் கடும் சிவப்பு மழை எச்சரிக்கை

புதன், 16 ஜனவரி, 2019

இலங்கையின் சில பகுதிகளுக்கு அடுத்துவரும் சில மணித்தியாலங்கள்வரை பாரிய மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பினை இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.மத்திய மாகாணம், ஊவா மாகாணம்,
 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் மற்றும் வட மத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டம் ஆகியனவற்றுக்கே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்டுள்ள
 பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அத்துடன் கிழக்கின் கடற்பிராந்தியத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மழை பொழியும் நேரத்தில்,
 கடுமையான இடி மின்னல் தோன்றக்கூடும் என்பதனால், மக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் 
கேட்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - மீண்டும் இலங்கையில் கடும் சிவப்பு மழை எச்சரிக்கை

உத்தரதேவி கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது

திங்கள், 14 ஜனவரி, 2019

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உத்தரதேவி ரயில் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது
எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் "உத்தரதேவி" என்ற பெயருடன் இன்று காங்கேசன்துறையை 
சென்றடைந்துள்ளது
கொழும்பிலிருந்து இன்று காலை 7.15 மணியளவில் தனது இரண்டாவது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்.காங்கேசன்துறையை 
சென்றடைந்துள்ளது
இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் 
மேற்கொண்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உத்தரதேவி கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது

புதியவகை நோய் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பெரியதொரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான 
நோய் பல
ங்கொடை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் 
சுட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையாக பலங்கொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நாய் பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவ Testse Fly என்ற இலையான் வகை முக்கிய காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இலங்கையில் இந்த இலையான் பதிவாகிவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் என்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.
எனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமெனவும் அத்துடன் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - புதியவகை நோய் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன

தீ விபத்திள் மனைவி, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை

புதன், 9 ஜனவரி, 2019

கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களும் பாராட்டி வருகின்றனர்.யட்டிநுவர வீதியில்
 அமைந்த 5 மாடி கட்டடத்தில் நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.இதன்போது உயிரை பணயம் வைத்து முழு குடும்பத்தையும் 
காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் குறித்து அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.சுமார் 75 அடி உயரத்தில் அமைந்துள்ள வீட்டினுள் தீபற்றியுள்ளது. பற்றிய தீ வேகமாக பரவியமையினால் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வர முடியாத நிலையில் சிக்கிகொண்டுள்ளனர்.
திகில் நிறைந்த தருணத்தில் தனது செயற்பாடு குறித்து 
கருத்து வெளியிட்ட ராமராஜ்;
ஜன்னல் ஊடாக வெளியே இருப்பவர்களிடம் ‘நாங்கள் உள்ளே சிக்கியுள்ளோம். எங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவுமாறு’ கூல்லிட்டேன் உடனடியாக மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். பிள்ளைகளை வீசுங்கள் நாங்கள் பிடிக்கிறோம் என மக்கள் 
கூறியுள்ளனர்.
வீட்டினுள் இருந்த இரண்டு போர்வைகள் மற்றும் மெத்தை ஒன்றை ஜன்னல் ஊடாக ராஜ்குமார் மக்களை நோக்கி முதலில் வீசினேன். பின்னர் மக்கள் போர்வையை பிடித்து கொண்டு தயார் நிலையில் இருந்தனர். ‘நான் முதலாவதாக 8 வயது மகனான இஷாரத் என்பவரையும் இரண்டாவது மகனான சத்தியஜித் என்பவரையும் முதலில் கீழே தூக்கிய வீசினேன். நேற்று தான் பாலர் பாடசாலையை ஆரம்பித்த மூன்றாவது மகனை
 இறுதியாக வீசினேன்.
பிள்ளைகளுக்கு எந்த காயமும் ஏற்பட கூடாதென்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் இன்று நான் இருந்து பயனில்லை. எனது அதிஷ்டம் பிள்ளைகள் காயங்களின்றி தப்பி விட்டார்கள்.அடுத்ததாக எனது மனைவியை தூக்கி வீசினேன். அதற்காக நான் சிறிது தூரம் கீழே இறங்கி விட்டு மனைவியை குதிக்குமாறு கூறினேன் மனைவி குதிக்கும் போது என்னால் சரியாக பிடித்து கொள்ள முடியாமல் கையைவிட்டு விட்டேன். எனினும் மக்கள் அவரையும் காயமின்றி 
பிடித்து விட்டார்கள்.
மனைவியை காப்பாற்ற முயற்சித்த போது, எனது கையில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் என்னால் இறங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னை பிடிக்குமாறு கூறிவிட்டு நானும் குதித்து விட்டேன். என்னையும் காயமின்றி மக்கள் காப்பாற்றி விட்டார்கள்.கண்டி மக்கள் மிகவும் நல்லவர்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த ஊர் பண்டாரவளை. நானும் எனது மனைவி ராதிகாவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கண்டி நகரத்திற்கு வந்தோம். நான் நகை செய்யும் ஆசாரி தொழிலில் ஈடுபடுகின்றேன்.
இந்த பகுதி மக்களிடம் இன பேதம், மத பேதம், என ஒன்றும் இல்லை. பிரச்சினை ஒன்று ஏற்பட்டால், சரியான நேரத்திற்கு ஒன்று கூடி விடுவார்கள். எங்கள் அதிஷ்டத்திற்கு எங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள்.கண்டி நகர தீயணைப்பு பிரிவு, பொாலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீ மேலும் பரவாமல் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்’ என ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE - தீ விபத்திள் மனைவி, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை

பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்

யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.ரீ.வி கமரா இணைப்புக்களை துண்டித்து விட்டு, 
உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைப்பேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு
 சென்றுள்ளனர்.இதன்போது சுமார் ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைப்பேசி மீள்நிரப்பு 
அட்டைகள் என சுமார் 10 இலட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இக்கொள்ளை
 சம்பவம் இடம்பெற்ற போது, கடையின் பின்புறம் வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் உறக்கத்தில் இருந்துள்ளனர்.இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரோடு இணைந்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்