புதியவகை நோய் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பெரியதொரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான 
நோய் பல
ங்கொடை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் 
சுட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையாக பலங்கொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நாய் பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவ Testse Fly என்ற இலையான் வகை முக்கிய காரணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இலங்கையில் இந்த இலையான் பதிவாகிவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் என்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.
எனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமெனவும் அத்துடன் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் பேராசிரியர் அஷோக் தங்கொல்ல கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக