ஜனாதிபதி இணக்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை

புதன், 20 பிப்ரவரி, 2019

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் .20.02.2019  முற்பகல் கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “ சிறுவர்களை பாதுகாப்போம் “ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி 
இதனைத் தெரிவித்தார் .
ஜனாதிபதியின் உரையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கருத்து தெரிவித்த போது இதனை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுவதாக தெரிவித்தார் .ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமானதொரு தடை தாண்டல் அல்ல என்றும் இதன்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என 
ஜனாதிபதி குறிப்பிட்டார் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ஜனாதிபதி இணக்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை

திடீரெனக் இலங்கையில் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்

புதன், 13 பிப்ரவரி, 2019

இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பரவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் வீட்டில் இருந்து 
அரை மீற்றர் தூரத்தில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.20 வயதான பாக்யா செவ்வந்தி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 
10.30 மணியளவில் வீட்டினை துப்பரவு செய்யும் போது குறித்த யுவதி காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யுவதியின் மரணம் தொடர்பில் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - திடீரெனக் இலங்கையில் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்

நாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்

இலங்கையிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில் இலவச தொழில்சார் பயிற்சிநெறியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது
.தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபை (நைட்டா) இதற்கான பயிற்சிநெறியை நடத்தவுள்ளது.இந்த அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் 
வேலை செய்கின்றனர்.அதில் அவர்கள் ஆறு மணிநேரம் வாடகைக்காக காத்திருக்கவேண்டியுள்ளது.
எனவே, இந்த நேரத்துக்குள் அவர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையிலேயே இந்த தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.’மூன்று சக்கரத்திலிருந்து நான்கு சக்கரங்கள்’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிநெறி வழங்கப்படவுள்ளது. இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஒரு மில்லியன் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சி
 அளிக்கப்படும்.
இதன்படி இலத்திரனியல் உபகரணங்களை திருத்துதல், கைபேசி திருத்துதல், சிகையலங்காரம் ஆகிய தொழிற்பயிற்சிகளே வழங்கப்படவுள்ளன.நுவரெலியாஇமாத்தளை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த பயிற்சிநெறி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நைட்டாவின் கணக்கெடுப்பின்படி 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - நாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்

நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு .ரப் கணிணி அனுமதி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

நாடளாவிய ரீதியில் உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி 
அமைச்சு எடுத்துள்ளது.
உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ரப் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், ரப் கணிணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர 
இணக்கம் தெரிவித்துள்ளார்.
1 AB பாடசாலைகளில் உள்ள உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து கண்காணிப்புச் செயற்திட்டம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உயர்தர
 மாணவர்களுக்கும் ரப் கணிணி வழங்கல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ரப் கணிணி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்த போகும் முறைமையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,
 அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வைக்கவுள்ளார்.
{புத்தகங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு குறைக்கப்படும் புத்தகங்களை
 பாதுகாப்போம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் உயர்தர மாணவர்களுக்கு .ரப் கணிணி அனுமதி

இம்முறை இருபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகளுக்கு இம்முறை வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா
 தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.இதற்காக 20000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும்
 அவர் கூறினார்.
நாடாளுமன்றில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருந்தார்.இந்த கேள்விக்கான பதிலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கூறிய அவர்,“
அமைச்சரவைப் பத்திர அனுமதியின்கீழ் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒக்டோபர் 26ஆம் நாள் ஏற்பட்ட குழப்பங்களால் அந்த நடவடிக்கை தடைப்பட்டது. ஆனாலும் இம்முறை பாதீட்டில் இதுதொடர்பான கவனம் 
செலுத்தப்படும்“ என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இம்முறை இருபதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

நாட்டில் பெற்றோல் டீசலின் விலை நள்ளிரவு 11.02.19 -முதல் அதிகரிப்பு .

திங்கள், 11 பிப்ரவரி, 2019

 நள்ளிரவு முதல் (11.02.2019)அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன . இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும் , ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் 
அதிகரிக்கப்பட்டுள்ளன .
 சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும் , ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன 
. இதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு
 விற்பனை செய்யப்பட்ட 
ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய 152 ரூபாவாகும் . இதுவரை 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை
 செய்யப்படவுள்ளது .
இதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும் . இதுவரை 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - நாட்டில் பெற்றோல் டீசலின் விலை நள்ளிரவு 11.02.19 -முதல் அதிகரிப்பு .