.சங்குபிட்டி பாலத்தில் தடம்புரண்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பினர்!

திங்கள், 23 அக்டோபர், 2017

சங்குப்பிட்டி பாலத்தில் எதிர் எதிரே வந்த கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கார் பாரிய சேதம் அடைந்ததுடன் அதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் உயிர் 
தப்பியுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்தில் கார் ஒன்று வேறு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
அப்போது எதிரே வந்த வாகனத்துடன் மோதுண்டு கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - .சங்குபிட்டி பாலத்தில் தடம்புரண்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பினர்!

நீர்வேலியில் பயங்கர விபத்து இளைஞன் படுகாயம்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 
இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிர்முனையில் வந்துகொண்டிருந்த இளைஞனின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானத
இதனால் உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். 
பின்னர் அவரை வீதியில் வந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் மோதிக்கொண்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதோடு இருவரினதும் கட்டுமீறிய வேகமே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று வெகு நேரமாகியும் பொலிஸார் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகவில்லை என்றும் மக்களால் விசனம் 
வெளியிடப்பட்டுள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - நீர்வேலியில் பயங்கர விபத்து இளைஞன் படுகாயம்

கஞ்சாவுடன் கனகராயன்குளத்தில் நால்வர் கைது

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில்  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த
 பிந்துவின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்றினை கனகராயன்குளம்
 பகுதியில் வைத்து சோதனையிட்டபோது,
 குறித்த வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதிவான் 
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த நான்கு நபர்களையும் எதிர்வரும் 23 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கஞ்சாவுடன் கனகராயன்குளத்தில் நால்வர் கைது

நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு

செவ்வாய், 17 அக்டோபர், 2017

மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக 25000 ரூபா அபராதம் விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதுமோட்டார் போக்குவரத்து கட்டளைச் சட்டத் திருத்தங்கள் மற்றும் அபராதத் தொகை தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளன.
 சுமார் மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான உத்தேச வரைவுத் திட்டங்கள் ஏற்கனவே திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
ஐந்து மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25000 ரூபா அபராதம் விதித்தல், மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தர நிர்ணயம் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உச்சபட்ச வேகத்தை மணிக்கு 40 கிலோமீற்றர் என வரையறுத்தல் ஆகியன தொடர்பிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட உள்ளன
முச்சக்கர வண்டியில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை வரையறை குறித்தும் இந்த வர்த்மானி அறிவித்தலில் 
குறிப்பிடப்பட உள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு

கல்முனைக்குடியில் இளைஞன் பலி விபத்தின் பின் கைகலப்பு; !

வெள்ளி, 13 அக்டோபர், 2017

விபத்தின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளார்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி செய்லான் வீதி, கல்முனைக்குடி 01 யைச் சேர்ந்த உதுமா லெப்பை மொஹமட் சாகிர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.  
இச்சம்பவம் நேற்று (12) இரவு 10.00 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
இரண்டு மோட்டார் வண்டிகள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் போது 32 வயதான கல்முனைக்குடி 05 யைச் சேர்ந்த ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். 
அதன் பின்னர் கல்முனை போக்குவரத்து பொலிஸாரினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பிரதேசத்திற்கு சென்ற காயமடைந்த நபர் விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மொஹமட் சாகிர் என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று (13) நள்ளிரவு 1.18 அளவில் மரணமடைந்துள்ளதாக கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் பொலிஸ் காவல் பிரிவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான சந்தேகநபர்  கல்முனைப் பொலிஸாரினால் நடைபெற்றுவருவதாகவும்
 குறிப்பிட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கல்முனைக்குடியில் இளைஞன் பலி விபத்தின் பின் கைகலப்பு; !