இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

வியாழன், 18 ஜூலை, 2024


இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, 
உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த
 ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார்
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், அநுராதபுரம் பாடசாலையொன்றில் கற்பிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆசிரியர், பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளில் பணத்திற்காக கற்பிப்பதாக பெற்றோர்கள் குழுவொன்று மாகாண கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு
 செய்திருந்தது.
அந்த முறைப்பாட்டின் பேரில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்த போது, ​​இந்த ஆசிரியர், பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று
 பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக்
 கண்டுபிடித்தனர்.
இவ்வருடத்தில் இதுவரையிலும் எவ்வித அங்கீகாரமும் இன்றி இந்த ஆசிரியர் 26 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த ஆசிரியரை மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன், புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

புதன், 17 ஜூலை, 2024

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
 தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆள்பதிவுய் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
 புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

செவ்வாய், 16 ஜூலை, 2024

நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16.07) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதன்படி சாதாரண சோற்றுப் பொதி  ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
 இதேவேளை, சோறுமற்றும் கொத்துவின் விலை 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டியின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது. 
ஒரு சாதாரண தேநீர் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சலுகையை வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உணவகங்களை தலைவர் கேட்டுக் கொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

திங்கள், 15 ஜூலை, 2024

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கடடையும் தின்னலாம் தோழர்களே.... ஆம் நாளையதினம் ஆடிப் பிறப்பு. 
ஆடிப்பிறப்பு என்றாலே தமிழர்களை பொறுத்தவரையில் ஆடிக் கூழ் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில் ஆடிட் கூழ் எப்படி செய்யலாம் என பார்ப்போம்: 
 ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்:
 750 கிராம் பனங்கட்டி
 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி
 ½ கப் முழுப் பயறு
 ½ கப் வறுத்த உளுத்தம் மா
 ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு
 செய்முறை: 
 அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). 
மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை 
கொதிக்க விடவும்.
 முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை 
வடித்து விடவும்.
 அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். 
 மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது 
உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். 
அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து
 இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
 ஆடிக் கூழ் தயார்! 
குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். 
சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / 
உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும்.
 என்பதாகும்
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார
 அவர்கள் அதனை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களுடனும் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலினை
 மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட முதன்மை வேலைகளுக்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

சனி, 13 ஜூலை, 2024

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்எப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்பு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே 
குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டாம் என தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகை பரிசோதனை சான்றிதழைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 
மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு 
வருவதாக அவர் கூறினார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

வெள்ளி, 12 ஜூலை, 2024

இலங்கையில் வீசா இன்றி  தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும், வரியில்லா இலங்கைக்கு சிகரெட்டுக்களை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது
 செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக 
கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த
 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
மேலும் 25 தொடக்கம் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் 6 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
 சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

வியாழன், 11 ஜூலை, 2024

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள், பணி செய்யாத நிலை, கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் இல்லாமை, 
கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் 
மேற்கொள்ள முடியும்.
 Senior Assistant Secretary (Flying Squad) Ministry of Health No26, Medi House Building Sri Sangaraja Mawatta. Colombo 10 T.P & Fax 0112 112 706 என்ற முகவரிக்கு 
முறையிடலாம்.
 அவ்வாறு செய்யப்படும் முறைப்பாடுகளின் விசாரணை நிலை, முடிவுகள் தொடர்பாக அறிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தவும்.
 வைத்திய நிபுணர்களில் பெரும்பாலானோர் 4pm to 6pm or 8pm வரை மேலதிக நேரம் கோரிப் பெறுகின்றனர். ஆனால் அந்நேரத்தில் அவர்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர்.
 அதேபோன்று, சத்திரசிகிச்சை கடமை நேரத்தில்/ ச.சிகிச்சை செய்த மறுநாள் Observation கடமை நேரத்தில் தனியாரில் 
பணியாற்றுகின்றனர்.
 இத்தகைய நுணுக்கமான விடயங்களையும் ஆதாரங்களுடன் முறைப்பாடாக பதிவு செய்யமுடியும் என சுகாதார அமைச்சிலிருந்து அறியத்தரப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

புதன், 10 ஜூலை, 2024

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
 குறித்த மின்பிறப்பாக்கியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இதன் படி, 150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, புதிதாக வழங்கப்பட்ட இந்த மின்பிறப்பாக்கியை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.
 இந்த நிலையில், நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் மின்பிறப்பாக்கியொன்றை பெறுவதற்கு 
தற்போது ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் ரயில் தடம் புரண்டதால், கடலோர ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
இன்று (09.07) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதமே கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், 
இதன் காரணமாக கரையோரப் புகையிரதத்தின் இரண்டு தடங்களும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.  
இதன் காரணமாக காலியில் இருந்து இயக்கப்படும் புகையிரதங்கள் கொம்பஞ்சாவீதிய நிலையம் வரை 
மட்டுமே பயணிக்கும்.
எவ்வாறாயினும், இது வரை தடம் புரளும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக ரயில் சேவை வழமைக்கு திரும்ப இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

திங்கள், 8 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் 
வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை
 வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய 
சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்.
 அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
என்பது  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

நாட்டில் தமிழர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் கண்ணை திறந்த அம்மன் சிலை

ஞாயிறு, 7 ஜூலை, 2024

தமிழர் பகுதியில் அம்மன் சிலை தனது ஒற்றை கண்ணை திறந்த அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது. 
முல்லைத்தீவு - முள்ளியவளை, கணுக்கேணி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள 
கண்களையுடைய சிலையாகவே 
காணப்பட்டு வந்தது. 
நேற்றையதினமும் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்திருந்தனர். இந்நிலையில் இன்றையதினம் காலை திடீரென அந்த சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும்,  மற்றைய கண் மூடிய நிலையிலும்  மனித கண்களை ஒத்த நிலையில் காணப்படுகின்றது. 
 இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் தமிழர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் கண்ணை திறந்த அம்மன் சிலை

முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

சனி, 6 ஜூலை, 2024

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியா
 அறிவித்துள்ளது.
அதன்படி, 710 அவுஸ்திரேலிய டொலராக இருந்த விசா கட்டணம் தற்போது 1,600 டொலராக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தலைமையிலான அரசாங்கம், மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இந்த விசா கட்டண உயர்வு, சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும், சிறப்பாகவும் மாற்ற அவுஸ்திரேலியாவிற்கு உதவும் என, அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல என, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழுவின் தலைவர் லூக் ஷீஹி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளை விட அவுஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி, கடந்தாண்டு செப்டம்பர் வரை அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 வீதத்தால் உயர்ந்து 5 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேரை
 எட்டியுள்ளதாகத் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - முக்கிய அறிவித்தல் அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு

இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2024

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் இன்று
 (05-07-24) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு 
செல்லப்பட்டுள்ளன.
நாய்களின் மொத்த மதிப்பு 50 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன.
இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர்நிஹால் தல்துவ கட்டுநாயக்க 
விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு 
வருகை தந்தார்.
 இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய 
அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கைக்கு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோப்ப நாய்கள்

நாட்டில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

வியாழன், 4 ஜூலை, 2024

நாட்டில்  உடன் அமுலாகும் வகையில், சில வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சத்தொச நிறுவனம் 
குறைத்துள்ளது. 
 இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டு, 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 சிவப்பு பருப்பு மொத்தக் கொள்வனவின் போது, 
கிலோ ஒன்று 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 282 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 அதேநேரம் வெள்ளை சீனி மொத்தக் கொள்வனவின் போது கிலோ ஒன்று 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 269 ரூபாவாக நிலவுகிறது.
. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு

நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

புதன், 3 ஜூலை, 2024

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ 
தெரிவித்துள்ளார்.
 நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க 
வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளின் உயிருக்கு 
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி
 அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் 
அவர் தெரிவித்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் சத்திர சிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை நோயாளர்கள் ஆபத்தில்

நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

செவ்வாய், 2 ஜூலை, 2024

நாட்டில் கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை 
பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக 
நடவடிக்கையில் இறங்கின​ர்.
இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர். ஸ்தலத்துக்கு விரைந்த வெடிகுண்டு 
செயலிழப்பு பிரிவு நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்படவில்லை.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கண்டி நீதிமன்றத்தை கதி கலங்கச் செய்தவர் கைது

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.

திங்கள், 1 ஜூலை, 2024

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை, அதனை கொடுக்க மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அம்பது இலட்சம் ரூபாய மோசடிசெய்த பெண் கைது.