இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

புதன், 31 மே, 2023

இந்தியாவின் திருநெல்வேலியில் நகைக்கடை உரமையளாரின் மகனிடமிருந்து 30-05-2023.அன்று  காலை 8 பேர் அடங்கிய திருட்டுக்கும்பல் ஒன்று காரில் வந்து அவரிடமிருந்து 1.5 கோடி ரூபாயை மிளகாய்ப் பொடி துாவி, தாக்கி எடுத்துச் சென்றுள்ளது.
உரிமையாளரின் மகன் வழக்கம் போல் காரில் தனது நகைக்கடைக்கு செல்கையில் அவரைப் பின்தொடர்ந்த கொள்ளையர் காரில் வந்த அவரையும் அவருடைய சகவாளையும் தமது காரினால் மோதி, பின்னர் 
தாக்கியவிட்டு பணத்தை கொள்ளையிட்டு வேகமாக 
சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நான்கு தனிப்படை கொண்ட பொலிஸ் இதனை விசாரித்துவருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இந்தியாவின் திருநெல்வேலியில் மிளகாய்ப்பொடி துாவி 1.5கோடி ரூபா பணம் கொள்ளை

கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

செவ்வாய், 30 மே, 2023

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்ததன் காரணமாக இருதய நோயாளர்களின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 கண்டி தேசிய வைத்தியசாலையில் இவ்வாறான இரண்டு இயந்திரங்கள் உள்ளதாகவும் மற்றைய இயந்திரமும் அடுத்த சில தினங்களில் பழுதடையும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 இந்த ஆபத்தான சூழ்நிலையால், ஆஞ்சியோகிராம் 
பரிசோதனைகள் (இதயத்திற்கு ரத்தம் வழங்கும் கரோனரி தமனிகளில் அடைப்பு கண்டறிதல், ஸ்டென்டிங் சிகிச்சைகள், இதயத்தில்
 ஓட்டைகளைக் கண்டறிதல், இதய வால்வுகளில் 
குறைபாடுகளைக் கண்டறிதல்) முற்றிலுமாக சரிந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. 
 கண்டி தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து புதிய இயந்திரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என சுகாதார வல்லுநர்கள் அறிஞர் சங்கத்தின் உறுப்பினர் திரு.சானக தர்மவிக்ரம
 தெரிவித்தார். 
இந்த இயந்திரத்தின் பராமரிப்புக்காக 26 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், உரிய இயந்திரம் பேணப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுகாதார வல்லுநர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - கண்டி வைத்தியசாலையில் இருதய நோயாளர்கள் பிரிவின் இயந்திரம் முற்றாக செயலிழந்துள்ளன

இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

திங்கள், 29 மே, 2023

இலங்கை சர்வதேச சந்தையில் முனைப்புடன் ஈடுபடாததால் தான் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 கடன்களை திருப்பிச் செலுத்துதல், பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு டொலர் தேவைப்படுகிறது என பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 
போது அவர் தெரிவித்தார்.
 டொலரின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுக்கும் எனவும், இதன் காரணமாக பொதுமக்களின் துன்பங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் எனவும் 
அவர் சுட்டிக்காட்டினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கை சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி குறைவதற்கான காரணம்

நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

ஞாயிறு, 28 மே, 2023


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டு வந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் 
உறுதியளித்தார்.
இக்கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் , விமானப் போக்குவரத்து பணிப்பாளர், சுற்றுலா பணியகம், விமானப்படை, Cinnamon Air,Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாக தெரிவித்தது.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது

நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

சனி, 27 மே, 2023

பாடசாலை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டார்.
 திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
 சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் சமர்ப்பித்து வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.
 பாதிக்கப்பட்ட 6 வயதுடைய சிறுவனின் தாய் அவரைக் கைவிட்டுச் சென்றதாகவும், அவனது தந்தை தீவிர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
 பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் ஆண் குழந்தை, குழந்தையின் தந்தையின் நண்பர்கள் இருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

வெள்ளி, 26 மே, 2023

யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் ஒன்றில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர்  தெல்லிப்பழைப் பொலிஸாரால்26-05-2023.. இன்றைய தினம்  கைது 
செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆசிரியர் 3 மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கில் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் மயக்கமுற்ற நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலையை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரை மிரட்டும் 
வகையில் செயற்பட்டுள்ளனர்.
அதாவது, பாதிக்கப்பட்ட மாணவனின் அண்ணன் அதே பாடசாலையில் கல்வி கற்றுவரும் நிலையில் குறித்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்ற 
விடமாட்டோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த விடையம் தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு 
செய்யப்படவுள்ளது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - தெல்லிப்பளையில் மூன்று மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை குறைப்பா

வியாழன், 25 மே, 2023


இலங்கையில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும் அதன் சில்லறை விலை குறையாததால் நுகர்வோர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் விலை குறைந்தாலும், சந்தையில் ஒரு கிலோ அரிசி 180 ரூபா தொடக்கம் 220 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை 
செய்யப்படுகிறது.
அரிசி ஆலைகளில் நெல் அரிசி கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போக்குவரத்துக் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பால் அரிசி விலையும் உயர்ந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் 
கூறுகின்றனர்.
இதேவேளை ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை குறைந்துள்ளதுடன், ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 232 ரூபாவாகும்.
ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 315 ரூபாவாகும். எனினும், சில்லறை விற்பனை சந்தையில் வெள்ளை சீனி 240 முதல் 250 ரூபா வரையிலும், சிவப்பு சீனி 370 ரூபாவிலும், கோதுமை மா 230 ரூபாவிலும், பருப்பு 330 முதல் 340 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை குறைப்பா

இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா கிழக்கு மாகாணதில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

புதன், 24 மே, 2023

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 25வது ஆண்டு விழாவும் அலுவலக கட்டிட திறப்பு விழாவும் நாளைய தினம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக இந்துக்குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே, அவ் அமைப்பினர்
 குறிப்பிட்டனர்..என்பது குறிப்பிடத்தக்கது.


 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா கிழக்கு மாகாணதில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

பழுதடைந்த உணவு விற்ற யாழ் உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

செவ்வாய், 23 மே, 2023

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்…
யாழ்நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களிற்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி அவர்களிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்றையதினம் 23.05.2023 அன்று வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை மற்றும் மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20kg உணவு பொருட்களும் பழுதடைந்த பழங்களும் 
பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினமே யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 
15ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - பழுதடைந்த உணவு விற்ற யாழ் உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

நாட்டில் யூரியா உர மூடையின் விலை மேலும் குறைக்கப்படும்! விவசாய அமைச்சு

திங்கள், 22 மே, 2023

தற்போது 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 
 யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 எவ்வாறாயினும், விலை குறையும் வரை விவசாயிகள் தேவையான யூரியா உரத்தை தாமதமின்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,22-05-2023. 
இன்றுமுதல் 
வழங்கப்படும் உர மானியச் சீட்டுக்கள் மூலம் பண்டி உரத்தை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு  அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் யூரியா உர மூடையின் விலை மேலும் குறைக்கப்படும்! விவசாய அமைச்சு

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 21 மே, 2023

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மேல் மாகாணத்தில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

சனி, 20 மே, 2023

நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை, பேலியகொட பொலிஸார் 19-05-2023.அன்றிரவு    கைது 
செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

நாட்டில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

வெள்ளி, 19 மே, 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை(20) கொழும்பில் நடைபெறவுள்ளது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
 இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ மற்றும் சமந்த தொடன்வல உள்ளிட்டோர் தலைவர் பதவிக்காகவும் தற்போதைய செயலாளர் மொஹான் டி சில்வா, ரொஷான் இத்தமல்கொட, நலின் அபோன்ஸ் உள்ளிட்டவர்கள் செயலாளர் பதவிக்காகவும் போட்டியிடவுள்ளனர்.
 நாளைய வாக்கெடுப்பின் போது இரண்டு உப தலைவர்கள், உப செயலாளர், உப பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.

நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க முடியும் என்கிறது ஆணைக்குழு

வியாழன், 18 மே, 2023

மின்சாரக் கட்டணத்தை 27 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
 தலைவர் ஜனக ரத்நாயக்க, 3 வீதத்தால் குறைக்கும்
 இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், போலியான தரவுகளைக் காண்பித்து 66 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. உண்மையில் அப்போது, 35 சதவீதம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும்.
அன்று, இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவையானது, 16 ஆயிரத்து 550 ஜிகாவாட். இந்த ஆண்டு மின்சாரத் 
தேவை 15 ஆயிரத்து
50 ஜிகாவாட் மணிநேரமாக மட்டுமே இருக்கும் என்பது எமது 
மதிப்பீடாக இருந்தது.
ஏப்ரல் மாதம், எமது மதிப்பீடு சரியானது மின்சார சபை எதிர்வரும் ஆண்டுக்கான தேவை 15,264 ஜிகாவாட் மணிநேரமாக இருக்கும் என்று மின்சாரசபை எழுத்துப்பூர்வமாகத்
 தெரிவித்தனர்.
ஆணைக்குழுவின் மதிப்பீட்டின்படி மின்சாரக் கட்டணங்களை நிர்ணயித்து அமுல்படுத்தியிருந்தால் இன்று மின்சார பாவனையாளர்கள் எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.
மின்சார கட்டண திருத்தத்தில், இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறையின் படி முன்மொழிவுகள் ச
மர்ப்பிக்கப்பட வேண்டும்.
அந்த முறையின்படி, மின்சாரம் வழங்குவதற்கான நியாயமான செலவை மட்டுமே மின்சார நுகர்வோரிடமிருந்து வசூலிக்க முடியும். எவ்வாறாயினும், மின்சார நுகர்வோர்களிடம் இருந்து மின்சார சபை பெற்ற கடனை மீளப்பெறுவதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு பதிலாக இம்முறையும் கட்டண திருத்த யோசனையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகிறது-
எரிபொருள். மின்சாரத்திற்காக அதிக சுமை சுமக்க நேரிட்டால், அது சாதாரண நுகர்வோர் மட்டுமின்றி தொழிலதிபரையும் 
பாதிக்கிறது.
எரிபொருள் விலை உயர்வால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. அதிக மின் கட்டணத்தால் மின் தேவை குறைந்துள்ளது. எரிசக்தி நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்திற்கு வரம்பற்ற ஆற்றலை வழங்க வேண்டும். விலையை நியாயமாக குறைக்க வேண்டும். அதை உடனடியாக 
செய்ய வேண்டும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட மாற்று விகிதம் சிறப்பாக உள்ளது. அதற்கு பதில் நியாயமான முறையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், உண்மையான செலவின் அடிப்படையில் எரிசக்தி விலை 
குறைக்கப்பட வேண்டும்.
மின்சாரசபை முன்வைத்துள்ள கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தேவையான தகவல்களை சமர்ப்பித்த பின்னர், கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொது கலந்தாய்வு நடத்தி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவீதத்தால் குறைக்க முடியும் என்கிறது ஆணைக்குழு

இலங்கையில் குடிவரவு நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது

புதன், 17 மே, 2023

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விசா நிபந்தனைகளை மீறி சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றிய பலஸ்தீன பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ, வேவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
 32 வயதான வெளிநாட்டவருக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் குடிவரவு நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர் கைது

இலங்கையில் புகையிரத கடவையில் திருத்தப் பணியினால் 02 நாட்கள் மூடப்படும் வீதி

செவ்வாய், 16 மே, 2023

ஹிகுரக்கொட மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கல்வல புகையிரத கடவையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் 02 நாட்கள் குறித்த 
வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
 இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி காலை 8 மணி முதல் 21ஆம் திகதி மாலை 4.30 மணி வரை இந்த வீதி முற்றாக மூடப்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் புகையிரத கடவையில் திருத்தப் பணியினால் 02 நாட்கள் மூடப்படும் வீதி

நாட்டில் வடக்கு ரயில் சேவைகள் தடம்புரள்வு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

திங்கள், 15 மே, 2023

மரமொன்று விழுந்தமையால் பயணித்துக்கொண்டிருந்த ரயில்பஸ்.15-05-2023. இன்று தடம்புரண்டதால் வடக்குக்காக ரயில் சேவைகள் 
பாதிக்கப்பட்டுள்ளது.
பொல்ஹாவெல மற்றும் பொத்துஹேர ஆகிய ரயில் நிலைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் மரம் விழுந்துள்ளது.
இதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் கோட்டையில் இருந்து பொத்துஹேர மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வடக்கு ரயில் சேவைகள் தடம்புரள்வு; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ரொராண்டோ பொலிஸாரால் மலைப்பாம்பை தாக்கிய நபர் கைது

ஞாயிறு, 14 மே, 2023

மலைப்பாம்பை தாக்கியதாக கூறப்படும் நபரை ரொராண்டோ பொலிஸார் கைது செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.புதன் கிழமை அன்று  நள்ளிரவுக்கு முன்னதாக டுண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் மானிங் அவென்யூவின் டிரினிட்டி-பெல்வுட்ஸ் சுற்றுப்புறத்தில் மலைப்பாம்பு பாம்பைக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் நபர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
ஒரு நபர் உண்மையான மலைப்பாம்பைப் பிடித்துக் கொண்டு தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, அவர் பாம்புடன் பாதிக்கப்பட்டவரை அணுகியதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
உடல் ரீதியான தகராறு ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரை தாக்க அந்த நபர் மலைப்பாம்பைப் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஒருவரை
 கைது செய்தனர்.
 தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது என்றும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர்
 தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோவைச் சேர்ந்த 45 வயதான லாரேனியோ அவிலா என அடையாளம் காணப்பட்டார். அவர் மீது ஆயுதம் மற்றும் தேவையற்ற வலி மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - ரொராண்டோ பொலிஸாரால் மலைப்பாம்பை தாக்கிய நபர் கைது

தங்கத்தின் விலையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

சனி, 13 மே, 2023


 

இலங்கையில் தங்கத்தின் விலை.13-05-2023. இன்று சற்று குறைந்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்.13-05-2023. இன்று  ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக 
குறைந்துள்ளது.
மேலும் நேற்று.12-05-2023. 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது 171,500 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தங்கத்தின் விலையில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு ஜப்பானில் விருது

வெள்ளி, 12 மே, 2023

ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து 
கவனத்தை ஈர்த்தது.
 அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை
 காப்பாற்றப்பட்டார்.
 இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு ஜப்பானில் விருது

இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து வெளுத்து வாங்கிய

வியாழன், 11 மே, 2023

இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் சிரிப்பு, கோபம் , அழுகை என பலவிதமான காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
கண்ணீர் விட்ட மாப்பிள்ளை
அதன் வரிசையில், தற்போது மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறித்த திருமணம் முடிந்தவுடன் தனக்கு வரதட்சணையாக பைக் வழங்க வேண்டும் என்றும், 
இல்லையெனில் மணப்பெண்ணை அழைத்துச் செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
மணமகள் வீட்டார் மணமகனிடம் எவ்வளவு கேட்டுக்கொண்டாலும் அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து அசைவதாக இல்லை.
இதனையடுத்து நின்றிருந்த மணப்பென்ணின் தந்தை ஆத்திரமடைந்து தனது செருப்பைக் கழற்றி மாப்பிள்ளையை அடிக்க மணமகனின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது. அதோடு , தன்னை விட்டுவிடுமாறு அந்த மாப்பிள்ளை தன் மாமனாரிடம் கெஞ்சுவதையும் காண 
முடிகின்றது..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இந்தியாவில் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் மணவறையில் வைத்து வெளுத்து வாங்கிய

தலவாக்கல பகுதியில்மனிதர்கள் தொட்டதால் குட்டியை ஏற்கமறுத்த தாய்

புதன், 10 மே, 2023

பிறந்து ஒரு மாதமேயான சிறுத்தைக் குட்டியொன்று தோட்டத் தொழிலாளர்கள் சிலரால் தலவாக்கல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பலவீனமடைந்திருந்த சிறுத்தைக் குட்டியை தொழிலாளர்கள் ரந்தெனிகல கால்நடை மருத்துவமனையில்
 ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குட்டியை மனிதர்கள் தொட்டதால் அதன் மேல் ஏற்பட்ட மனித வாசனையால் தாய் சிறுத்தை அதை நிராகரித்திருக்கலாம் என ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலை மருத்துவர் அகலநக பிந்தெனிய 
தெரிவித்துள்ளார்
தாயுடன் குட்டியை சேர்த்து வைக்க அவர்கள் முயற்சித்த போதும் தாய் சிறுத்தை அதற்கு ஆர்வம் காட்டவில்லை என 
கூறப்படுகின்றது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தலவாக்கல பகுதியில்மனிதர்கள் தொட்டதால் குட்டியை ஏற்கமறுத்த தாய்

மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்

செவ்வாய், 9 மே, 2023

மஞ்சளில் பல மருத்துவக் குணங்கள் அதிகளவில் உள்ளது. இருந்தப் போதும் பித்தப்பை பிரச்சனைகள், நீரழிவு நோயாளிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் போன்ற உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என 
கூறப்படுகின்றது.
சைவம், அசைவம் என எந்த சமையலிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கப்படும்.
இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு இருப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் பாலில் அல்லது சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
சுகாதார ஆய்வறிக்கையின் படி ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மல்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை 
உபயோகிக்கலாம்.
இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. 
மஞ்சள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
மஞ்சளில் பல்வேறு நோயெதிர்ப்பு பண்புகள் மட்டுமில்லாது தொடர்ச்சியாக மஞ்சளை நாம் சாப்பிட்டு வரும் போது இதில் உள்ள குர்குமினால் டிமென்சியா என்ற நினைவாற்றல் இழப்பு செயல்திறனை மேம்படுத்த 
உதவியாக உள்ளது.
இருந்தப்போதும் சில நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய நிலையும் உள்ளது.பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். 
நீரிழிவு நோயாளிகள்
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
ஒருவேளை நீங்கள் அதிகளவு உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
இரப்பை பிரச்சனை உள்ளவர்கள்
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு அல்லது GERD உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்களது உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடும்.மஞ்சளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள இரும்புச்சத்துக்களை குறைக்க நேரிடுகிறது.
ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மஞ்சள் உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்.
கல்லீரல் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவும்
உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால், மஞ்சளை உட்கொள்வது சில கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வயிற்று வலி, வயிற்றுக்கோளாறு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் மஞ்சள் அதிகளவு சாப்பிடுவதால் நேரிடும்.
என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மஞ்சள் தூளை அதிகளவில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பயன்படுத்த கூடாதாம்