உங்கள் கருத்தை கூறுங்கள் படித்ததில் பிடித்தது,பிடித்தால் பகிருங்கள்,

புதன், 30 நவம்பர், 2022

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்
கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம் பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்
நான் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்னவாகும். உனக்கும் கை, கால் இருக்கு உழைச்சு சம்பாதிச்சு 
வாங்குனு சொல்லிட்டா
இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒருவகையில் கடவுள் தான்...
கடவுளை கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கி தேடு

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உங்கள் கருத்தை கூறுங்கள் படித்ததில் பிடித்தது,பிடித்தால் பகிருங்கள்,

புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

செவ்வாய், 29 நவம்பர், 2022

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் திருடுவதற்காக இவர்கள் வருகை தந்து வீடு ஒன்றினை உடைக்க முற்பட்டபோது அந்த வீட்டுக்காரர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் ஒன்று 
கூடிய அப்பகுதி
 மக்கள் மற்றும் இளைஞர்களால் மூன்று பேர் பிடிக்கப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் தொடர்ச்சியாக தேடி மாலை வேளை ஒருவரையும், தற்போது ஒருவரையும் 
பிடித்துள்ளனர்.
இறுதியாக பிடிக்கப்பட்ட நபரை புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு அழைத்து, வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்த இடம்பெறும் திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கக்கு இனி வரும் காலங்களில் மக்கள் இவ்வாறான தண்டனைகளையே வழங்குவார்கள் என அப்பகுதி இளைஞர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - புதுக்குடியிருப்பு மந்திகை பகுதியில் திருடர்கள் ஐவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

திங்கள், 28 நவம்பர், 2022

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.
2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.
244 வகையான பறவைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பறவை இனங்களை பாதுகாப்பதில் முழு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என பத்மா அபேகோன் மேலும் 
தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில்

கண் பார்வையற்ற ஹிமாஷா காவிந்தியா பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்லார்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

பிறப்பிலேயே பார்வையிழந்த காவிந்தியா 9A பெறுபேறு பெற்றுள்ளார். 
பெற்றோர் பெருமிதம். 
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாணவி ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்று 
சாதனை படைத்துள்ளார்.
ஹிமாஷா காவிந்தியா என்ற இந்த மாணவி பிறப்பிலேயே கண் பார்வையிழந்தவர். அனுராதபுரத்தில் பிறந்த இந்த மாணவி 
சிறுவயதிலேயே எதனையும் புரிந்துக்கொள்ளும் 
திறமை பெற்றவராக இருந்தார் எனவும் திறமையாக சவாலை வெற்றிக்கொள்வார் 
என உணர்ந்து அவரது பெற்றோர், அவரை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் குருணாகல் சந்தகட விசேட பாடசாலையில் பயின்று வந்த காவிந்தியா, 2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதுடன் 173 புள்ளிகளை பெற்றார். 
இதனையடுத்து பெற்றோர் அவரை குருணாகல் மகிந்த கல்லூரியில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள காவிந்தயாவின் தாய் கீதானி, “எனது மகள் சாதாரண தரத்தில் படிக்க மிகவும் ஆர்வம் 
காட்டினார். 
அது மாத்திரமல்ல பாடசாலையில் சங்கீதமும் கற்றாள். பாடுவதில் அவர் திறமையானவள். பல சான்றிதழ்களை பெற்றுள்ளாள்” 
எனக் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - கண் பார்வையற்ற ஹிமாஷா காவிந்தியா பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்லார்

சீனாவில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சனி, 26 நவம்பர், 2022

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தீவிர கட்டுப்பாடுகளுக்கு தற்போது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலால் உலக நாடுகளில் இதுவரை 64.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.இந்த நிலையில், உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக புதிய தகவல் வெளியாகிவருகிறது.
சீனாவில் தினசரி 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் 
விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையைத் தொடும்வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் இந்த தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்களிடம் கடும் 
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த வாரம் காங்சாவோ நகரத்தில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சாலையில் போராட்டம் நடத்தினர். எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இறக்கவும் தயார் என்று சீன அரசை நோக்கி எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.ஆனால், மக்களின் போராட்டத்துக்கு இதுவரை சீன அரசின் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை
 என்றே கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - சீனாவில் கொரோனா பரவல் தீவிரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்க இலங்கை பேச்சுவார்த்தை

வெள்ளி, 25 நவம்பர், 2022

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த 
பேட்டியின் போது, 
சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சட்டங்களை மீறாமல் மானிய விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் இருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை எந்த நாடும் அகற்ற விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது இந்தியா ஊடாகவோ ரஷ்ய கச்சா எண்ணெயை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அங்கு தெரிவித்துள்ளார்.

உக்ரேனில் இடம்பெற்ற யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள முடிந்தால், இலங்கை அதற்காக பாடுபடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையால் தற்போதைய எண்ணெய் விலையை தாங்க முடியாது, எனவே சர்வதேச சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை மீறாமல் இருந்தால், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை பெற முடியும் என்று அமைச்சர் அலி சப்ரி மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்க இலங்கை பேச்சுவார்த்தை

நாட்டில் வேகமாக பரவும் புதிய வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வியாழன், 24 நவம்பர், 2022

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் 
தெரிவித்துள்ளார்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால் முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில், இன்புளுவன்சா போன்ற அதே அறிகுறிகளுடன் ஒரு நோய் பரவுகிறது. கொரோனா போலவே, இது இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் தொடங்கி நிமோனியா வரை செல்லும். எனினும் அந்த நிலைமை மிக அரிதாகவே அதிகரிக்கும்.
கொரோனாவுடன் ஒப்பிடும்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றினால் இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்
 கொள்ளலாம்.
முகக் கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற முறைகள் மூலம் இந்த நோயைக் குறைக்கலாம். நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள
 வேண்டும்.
இது போன்ற விடயங்களில் மிக முக்கியமானது, மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதுதான். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, சுடுநீரை குடித்துவிட்டு பாரம்பரிய விடயங்களை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்தால், போதும். வேறு மருந்து எதுவும் தேவையில்லை.
காய்ச்சல் உள்ளதென்றல் பாராசிட்டமால் பயன்படுத்தலாம். காய்ச்சல் குறையவே இல்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்” என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வேகமாக பரவும் புதிய வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவுக்கு யாழ்.இளைஞர்களை அனுப்புவதாக பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி

புதன், 23 நவம்பர், 2022

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு ப
திவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் எம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் எம்மை வெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை,
அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் எம்மிடம் தெரிவிக்கின்றார்.
நாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே காவல் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர். சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் , மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக  காவல்துறையினா் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - கனடாவுக்கு யாழ்.இளைஞர்களை அனுப்புவதாக பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி

யாழ் வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

 யாழ் அச்சுவேலி  காவல்துறைபபிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் லக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில்.22-11-2022.அன்றயதினம் செவ்வாய்க்கிழமை 
மாலை வேளையில் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.  அதன் போது இளைஞன் 
பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலிகாவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - யாழ் வல்லை பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்தவரை தேடும் பணிகள் தொடர்கின்றன

சாமிமலை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தல்

செவ்வாய், 22 நவம்பர், 2022

மஸ்கெலியா - சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு கவரவில்லை தோட்டத்தில் .22-11-2022.இன்று  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு சிறு காணிகளில் காணப்பட்ட வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 1997 முதல் 2021 ஆண்டு காலப் பகுதியில் 125 வீடுகள் அமைக்கப்பட்ட வீடுகளில் உள்ள தரிசு நிலத்தில் வீட்டு தோட்டம் உருவாக்கி அதில் அன்றாட தேவைகளுக்கு மரக்கறி உற்பத்தி செய்வதை உடன் அகற்றும் படி தோட்ட நிர்வாகம் பொலிஸ் மூலம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
இதனை எதிர்த்து இன்று மதியம் அத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அக் குடியிருப்பு பகுதிகள் வாழும் தொழிலாளரின் பிள்ளைகள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்
இன்றைய அரசு மற்றும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil Wickremesinghe) உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ள போது ஏன் இந்த நிலை தோன்றியுள்ளது என அந்த மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
விவசாய தோட்டத்தை அழித்து குடியிருப்பு பகுதிகளில் டேப்பன்டைன் மர கன்றுகள் நடும் திட்டம் உருவாக்கபட்டு உள்ளது என தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
தேயிலை தோட்ட பகுதியில் பல ஹெக்டயர் தேயிலை செடிகளில் காடாக உள்ளது. அதில் அந்த மரக் கன்றுகள் நடும் திட்டம் உருவாக்க வேண்டும் என தொழிலாளர்கள் கூறுவதுடன் பல வருடங்களாக செய்து கொண்டு உள்ள விவசாயத்தை அகற்ற முடியாது என தொழிலாளர்கள் 
தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மற்றும் ஜீவன் தொண்டமானும் (Jeevan Thondaman) ஆராய்ந்து வருவதாகவும் குறித்த பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு பெற்றுத் தருவார்கள் என நம்புவதாகவும் தோட்ட தொழிலாளர்கள் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - சாமிமலை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் வீட்டு தோட்டத்தை அகற்றுமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்தல்

கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது

திங்கள், 21 நவம்பர், 2022

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம்21-11-2022  இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
வேறொரு விசாரணைக்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றவேளை கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதன்போது அவர் 10 போத்தல் கசிப்புடன் குறித்த பெண் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணினை நாளையதினம் (21-11-2022) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
அந்த பிரதேசத்தில் நீண்ட காலமாக குறித்த பெண் கசிப்பு விற்று வந்ததாகவும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குறித்த பெண் பலமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் கசிப்பு தொழிலை கைவிடவில்லை என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது

நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

நாட்டில் எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் நேற்று கலந்துக்கொண்ட எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தகவல்களை 
வெளியிட்டுள்ளார்.
விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி கூறியிருந்தோம். அப்படியான சந்தர்ப்பத்தில் தாங்கள் பொருளாதார இழப்பை சமாளிக்க 14 ஆம் திகதி அல்லது 13ம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள். 
அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
இது தொடர்பான பிரேரணை திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு எரிபொருள் விலை அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து அறிவிக்கப்படும்.
இதேவேளை எதிர்வரும் மாதத்தில் இருந்து இந்தப் புதிய முறையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம் என 
அவர் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

சனி, 19 நவம்பர், 2022

மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது.
வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் 
கூறப்பட்டுள்ளது.
வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள்
 பற்றி தெரியுமா?
வேப்ப இலைகள் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்த நீரை கலந்தோ, வேப்பிலை போட்டு ஊற வைத்த தண்ணீரில் குளித்தால், தோல் தொடர்பான எந்த வகையான ஒவ்வாமையையும் போக்கிவிடலாம் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேப்பிலை, மஞ்சளைப் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது இறந்த சரும செல்கள் மற்றும் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது.
மஞ்சளில் கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், ஆற்றல், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
வேம்புக்கு ஆன்டி-செப்டிக், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டால், வைரஸ் காய்ச்சலில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.
இது தவிர, இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்து, பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேம்பு மற்றும் மஞ்சளை பயன்படுத்தலாம்.
வேம்பு மற்றும் மஞ்சள் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை 
பலப்படுத்துகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உங்கள் உடலில் இவ்வாறான பிரச்சனை இருக்கிறதா இதனை பயன்படுத்தி பாருங்கள்

நாட்டில் பாடசாலை உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு இருந்தால் மாற்றியமைக்கவும்

வெள்ளி, 18 நவம்பர், 2022

நாட்டில் செஸ் வரி (CESS) திருத்தம் காரணமாக அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் செஸ் வரி மாற்றத்தால் பாடசாலை உபகரணங்களின் விலை உயர்வு குறித்து, சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பாடசாலை உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு இருந்தால் மாற்றியமைக்கவும்

நாட்டில் கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

வியாழன், 17 நவம்பர், 2022

டவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று(17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள
அறிவித்தல் பின்வருமாறு


 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         


 

READ MORE - நாட்டில் கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

நாட்டில் ஜனவரி மாதம் முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய நேர உணவு

புதன், 16 நவம்பர், 2022


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இனி மதிய நேர உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையை போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் நாடாளுமன்றில் முன்னதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் ஜனவரி மாதம் முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய நேர உணவு

நாட்டில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் தகவல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

நாட்டில் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வருட வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
 தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், அரசாங்கம் பணவியல் கொள்கைகளை கடுமையாக்காமல், வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளை அதிகரிக்கவில்லை என்றால், நாட்டில் பணவீக்கம் 100% ஐ 
தாண்டியிருக்கும்.
பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க நாம் இருந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்தோமோ அதைச் செய்ய வேண்டும். பணக் கொள்கையை கடுமையாக்காவிட்டால், வட்டி விகிதங்கள், அதிகரிக்கவில்லை என்றால், அரசு வரியை அதிகரிக்கவில்லை என்றால், இன்னும் காத்திருந்திருந்தால், பணவீக்கம் 100ஐ தாண்டியிருக்கும்.
இந்த நெருக்கடி நிலவியிருக்காது.நாம் எடுத்த முடிவுகளால் இந்த நிலைமையில் இருக்கின்றோம், ஆனால் இப்போது 100 சதவீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையில் இருக்கிறோம்.
சில தொழில்கள் துறைகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் சில துறைகள் இன்னும் அந்த செல்வாக்கைக் அடையவில்லை. இருப்பினும் நாங்கள் தற்போது ஒரு நிலையான நிலையில் 
இருக்கின்றோம்.
இதனை வேறு விதமாக செய்திருக்கலாம் என்று சொல்பவர்களிடம் சிறந்த வழி எது என கேள்வியெழுப்புகின்றேன். இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் முன்னேறுவதற்கும் இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் தகவல்

நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

திங்கள், 14 நவம்பர், 2022


நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நாட்டில் சதொசவின் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

ஞாயிறு, 13 நவம்பர், 2022

நாட்டில் தற்போது கட்டுப்பாட்டு விலையில் உள்ள பொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பேணுமாறு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ். டி. கொடிகார 
தெரிவித்தார்.
ஏற்கனவே உணவு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள விலையை விட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிந்தால் அந்தச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கொடிகார
 தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் கொடிகார மேலும் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் சதொசவின் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணை

சனி, 12 நவம்பர், 2022

நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 
வெளியிட்டுள்ளது.
இதன்படி,1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 
அறிவித்துள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையான காலப் பகுதியில் 1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை,  14 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணித்தியாலங்கள் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு 
தெரிவித்துள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நாட்டில் நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணை

நாட்டில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

வெள்ளி, 11 நவம்பர், 2022

இலங்கையில் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. 
தோல் மருத்து நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 
வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையினால் நச்சு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் இந்த நச்சு அழகுசாதனப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் (NMRA) பதிவு செய்யப்படாத தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் 
ஏராளமான தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அவர் பொதுமக்களை 
பரிந்துரைத்துள்ளார்.
மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் நுழைவதை நிர்வகிக்கும் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  
பல பொருட்களால் தோலை அதிகமாக கழுவினால், நல்ல பக்டீரியாக்கள் அழிக்கப்படும் என்றும் வைத்தியர் 
வலியுறுத்தினார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நாட்டில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

உயரமான பெண்ணின் முதல் விமானப் பயண அனுபவம்

வியாழன், 10 நவம்பர், 2022

உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் 
செய்திருக்கிறார். 
உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே அமைவதை 
நாமும் பார்த்திருப்போம். அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் ருமேசா கெல்கி. உலகின் உயரமான பெண்ணாக அறியப்படுகிறார் துருக்கியின் ருமேசா கெல்கி .இவரது
 உயரம் 7 அடி 7 அங்குலம்.
தனது உயரம் காரணமாக ருமேசா வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று ருமேசா கெல்கிக்காக தங்களது விமானத்தில் 
மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது. இதன் மூலம், 13 நேர பயணத்திற்குப் பிறகு துருக்கியிலிருந்து அமெரிக்காவுக்கு ருமேசா கெல்கி சென்றடைந்திருக்கிறார்.
தனது முதல் விமானப் பயணம் குறித்து ருமேசா கெல்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆரம்பம் முதல் முடிவு வரை குறையற்ற பயணமாக இது அமைந்தது. இது எனது முதல் விமானம், ஆனால், இது நிச்சயமாக கடைசி விமானப் பயணமாக இருக்காது” என்று 
பதிவிட்டுள்ளார்.
25 வயதான ருமேசா கெல்கி அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியவுள்ளார். தனது வேலைக்காக இந்தப் பயணத்தை ருமேசா கெல்கி மேற்கொண்டிருக்கிறார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - உயரமான பெண்ணின் முதல் விமானப் பயண அனுபவம்

இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாளர் உதவி காலை உணவு

புதன், 9 நவம்பர், 2022

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நன்கொடையாளர் உதவி
இந்த வேலைத்திட்டம் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 26% பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவு வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு நன்கொடையாளர் உதவி காலை உணவு