நாட்டில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நாட்டில்.31-12-2023. இன்றுஎரிபொருள் நிலையங்களில் நீண்ட  வரிசையொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை உயரும் என்ற நம்பிக்கையில் வாகன உரிமையாளர்கள் தற்போதைய விலைக்கே எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக கூறப்படுகிறது. 
திருத்தியமைக்கப்பட்ட VAT விகிதங்கள்-31-12-2023. இன்று முதல் எரிபொருளைப் பாதிக்கும் என்பதால் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயரும் என எரிபொருள் விநியோகஸ்தர்களும் எதிர்பார்க்கின்றனர்
.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் திறந்து விடப்பட்டது பராக்கிரம சமுத்திரம் மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதி மூடப்பட்டது.

சனி, 30 டிசம்பர், 2023

நாட்டில் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் நேற்று இரவு 10.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு -
 பொலன்னறுவை 
பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல ரயில் நிலையத்தில் இருந்து மன்னம்பிட்டி நோக்கி விசேட ரயில் சேவை காலை 10.30 மணி முதல் இடம்பெறும் என கதுருவெல ரயில் நிலைய 
அதிபர் தெரிவித்தார்.
மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் திறந்து விடப்பட்டது பராக்கிரம சமுத்திரம் மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதி மூடப்பட்டது.

ஊடகவியலாளர்களினால் யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

வெள்ளி, 29 டிசம்பர், 2023

யாழ்.ஊடக அமையத்தின் "மக்களுக்காக நாம்" செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம்.29-12-2023. இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலில் பரவல் தீவிரமடைந்துள்ளதை கருத்தில் கொண்டு யாழ்.ஊடக அமையத்தின் சமூக பணிகளுக்கான "மக்களுக்காக நாம்" செயற்றிட்டத்தின் ஊடாக இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 ஆரம்ப நாளான இன்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமாரிடம் இருந்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை பெற்று செயற்றிட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
மேலும் ஊடகவியலாளர்களின் சமூக பொறுப்புமிக்க விழிப்புணர்வு பணிக்கு பாராட்டுக்களை தெரிவித்த பணிப்பாளர், அனைத்து மட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என 
வலியுறுத்தினார்.
 தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.மத்திய பேருந்து நிலையம், வர்த்தகநிலைய தொகுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு டெங்கு அபாய வலயங்களில் .முன்னெடுக்கப்டுள்னா 
 ஆரம்ப நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி நித்தியானந்தா, யாழ்.போதனா வைத்தியசாலை பிரதம தாதி சந்திர மெளலிஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - ஊடகவியலாளர்களினால் யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வியாழன், 28 டிசம்பர், 2023

இங்கைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் 
தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை அதிகமாக இருப்பதால் விரைவாக அவை விற்பனை நிலையங்களில் தீர்ந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சதொச ஊடக 35 ரூபாவிற்கு முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
   என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதன், 27 டிசம்பர், 2023

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என இலங்கை மின்சார சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தின்போது இலங்கை மின்சார சபையின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்ததாக
 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் தீடீரென ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் திரிபோஷாவில் உள்ள இரசாயனத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

செவ்வாய், 26 டிசம்பர், 2023

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை 
இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக முன்னிலை 
சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் பிரகாரம் திரிபோஷ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் இருக்கக்கூடிய ‘அப்லடொக்சின்’ அளவை இரட்டிப்பாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
‘அஃப்லாடெக்சின்’ என்ற வேதிப்பொருளை உட்கொள்வதால் கல்லீரல் சேதப்படுத்தும் என்பதால், அந்த இரசாயனம் புற்றுநோயாக மாறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் திரிபோஷாவில் உள்ள இரசாயனத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இணைய மோசடிகள் யாழ்ப் பாணத்தில் அதிகரிதுள்ளன

திங்கள், 25 டிசம்பர், 2023

யாழில் இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
 யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். 
 இது குறித்து தெரியவருவதாவது, இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்கின்றனர். 
 அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோருக்கு முதலில் சிறு தொகை பணத்தினை அவர்கள் சொல்லும் கணக்குக்கு இணையம் (online) ஊடாக பணத்தினை செலுத்த சொல்லுவார்கள். முதலில் சிறு
 தொகை பணத்தினை செலுத்த சொல்வதானால், இவர்கள் எதுவும் யோசிக்காமல் பணத்தினை செலுத்தி விடுவார்கள். பணம்
 செலுத்தப்பட்டதும், அதொரு முதலீடு எனவும், அதனால் வந்த வருமானம் என ஒரு தொகையை இவர்களுக்கு வைப்பு செய்து ஆசையை 
மேலும் தூண்டுவார்கள். 
 இவ்வாறாக பெரும் தொகை பணத்தினை வைப்பிலிட்ட வைத்த பின்னர், அந்த பணத்துடன் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் இவர்களுக்கு தெரியவரும். 
ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த பின்னர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்வார்கள்.
 அதில் யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது , அவர்களின் விபரங்கள் என எதுவும் இருக்காது. அதனால் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - இணைய மோசடிகள் யாழ்ப் பாணத்தில் அதிகரிதுள்ளன

எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

எக்ஸ் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.
எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று
 தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:- எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
 இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் 
எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞர் கைது

சனி, 23 டிசம்பர், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் .23-12-2023. இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
பிரான்ஸ் கடவுச்சீட்டில் சந்தேகம் கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணம் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதிக்கு வந்த போது அவரது இலங்கை கடவுச்சீட்டை அங்கிருந்த தரகர்கள் இருவர் பெற்றுக்கொண்டு இந்த பிரான்ஸ் கடவுச்சீட்டை கொடுத்ததாக
 சந்தேக நபர் தெரிவித்துள்ளார். 
 சர்வதேச பொலிஸாரின்தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட கடவுச் சீட்டு பட்டியலில் இந்த கடவுச்சீட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி, சந்தேக நபரை கைதுசெய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞர் கைது

நாட்டில் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி அறவிடப்படவுள்ளது

வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் வங்கியில் பணம்சேமிப்பில் வைத்திருப்பவர்கள் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்துதல் வேண்டும்.  இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. 
இந்த வட்டிக்கும் பொருட்கள் சேவைகள் (VAT TAX) வரி 18 வீதம் விதிக்கப்பட உள்ளது. உதாரணமாக மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வட்டி கிடைத்தால் 1800ரூபாவை (VAT TAX ) வற் வரியாக அரசாங்கத்திற்கு
 செலுத்த வேண்டும். 
பெரும்பாலான ஓய்வூதியக்காரர்கள் வங்கிகளில் நிலையான வைப்பை செய்து அதில் வரும் வட்டி வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகிறார்கள். வெளிநாட்டில் இருந்த ஒருவர் தனது ஓய்வு காலப்பணம் ஒரு
 கோடி ரூபாவை இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நிலையான வைப்பிலிட்டு ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாவை மாதம்
 வட்டிப்பணத்தை எடுத்து இலங்கையில் வசித்து வருகிறார் என்றால் அவர் இனிமேல் மாதம் 27ஆயிரம் ரூபாவை வற் வரியாக இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>READ MORE - நாட்டில் வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி அறவிடப்படவுள்ளது

அவசரமாக தரையிறக்கம் கொழும்பில் இருந்து மாலைதீவு சென்ற விமானம்

வியாழன், 21 டிசம்பர், 2023

மாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக  20.12.2023.அன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான 
நிலையத்திற்கு 
திரும்பியுள்ளது.காலை 7:30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட UL 101 என்ற விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்து
 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் விமான
 நிலையத்தில்
 பாதுகாப்பாக தரையிறங்கியது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தீபால் பெரேரா, இந்தச் சம்பவத்தை உறுதி செய்ததுடன், 
தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம்
 எனத் தெரிவித்தார்.
பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்று விமானங்களை 
ஏற்பாடு செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - அவசரமாக தரையிறக்கம் கொழும்பில் இருந்து மாலைதீவு சென்ற விமானம்

மருத்துவ துறை தொடர்பில் இலங்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

புதன், 20 டிசம்பர், 2023

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
 மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க 
தெரிவித்துள்ளார்.
 வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக தற்போது 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - மருத்துவ துறை தொடர்பில் இலங்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என அறிவிப்பு

செவ்வாய், 19 டிசம்பர், 2023

நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க முடியும் என அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

திங்கள், 18 டிசம்பர், 2023

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற 
நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 
 முத்துஐயன் கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது. 
முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் 18.12.2023.இன்று  அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 111 குடும்பங்களை சேர்ந்த 355 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 
மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். இதேபோன்று 
குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற 
நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் 
அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு
 வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர்
 இடம்பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது. இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை
 ஏற்பட்டுள்ளது. 
இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் 
வழங்கி வருகின்றனர்.  
மே லும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ்நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. திலீபன் அறிவித்தார்.
 பாலியாறு, பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் போது மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றமையினால் அவ்யூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலை மக்கள் இடப்பெயர்வு

நாட்டில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

சனி, 16 டிசம்பர், 2023


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சுகாதார அறிக்கைகளின்படி, நாட்டில் உள்ள 13,000 குழந்தைகளில் 267,267,249 பேர் போதிய 
போஷாக்கு இன்மையால் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என கல்விக்கான துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் 
குழு உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன 
தெரிவித்துள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட்ட 18 இலட்சம் குழந்தைகளில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 84 பேர் எடை குறைவாக இருப்பதாவும் குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ரோஹினி குமாரி விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

டெஸ்லா நிறுவனம் புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்கின்றது

வெள்ளி, 15 டிசம்பர், 2023

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக 
வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்டிமஸ் ஜென் 2 எனப் பெயரிடப்பட்டுள்ள
இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 
தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென நடக்கும் காணொளி பலரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. முட்டை ஒன்றினை மிருதுவாகக் கையாளும் திறனையும் அந்தக் காணொளியில் 
காண முடிகிறது.
இப்போது வெளியிட்டுள்ள இந்தக் காணொளியில் அனைத்து கிண்டல்களையும் விமர்சனங்களையும் வாயடைக்கச் செய்துள்ளது டெஸ்லா. 
எலான் மஸ்க் தனது ரோபோ தொழில்நுட்பம்
 முழுமையாக 
வெற்றியடைந்த பின்னர், மனிதர்கள் செய்ய விரும்பாத எல்லா வேலைகளையும் இந்த ரோபோ திறப்பட செய்யும் எனத் தெரிவித்துள்ளார். காணொளியின் இறுதியில் ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோ நடமாடுவது அனைவர் மனதிலும் டெஸ்லா ரோபோ மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது.
  என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - டெஸ்லா நிறுவனம் புதிய மனித ரோபோவை அறிமுகம் செய்கின்றது

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் கனமழை காரணமாக திறக்கப்படவுள்ளன

வியாழன், 14 டிசம்பர், 2023

நாட்டில் தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்குமாக இருந்தால் நீர்மட்டம் உயர்ந்து வான் கதவுகள் திறக்கவேண்டி ஏற்படும் என இரணைமடு பகுதி நீர்ப்பாசன பொறியியளாளர் செந்தில்குமரன் அறியத்தந்தார் 
இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் 
தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
அப்பகுதி கமக்காரர் அமைப்பினர் மக்களிற்கு உரிய தகவல் கிடைக்க ஆவன செய்ய வேண்டுவதோடு நீர்செல்லும் வழிகளில் தடைகள் இருப்பின் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். தகவல்: இரணைமடு கமக்காரர் அமைப்பு சம்மேளனம்.அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இரணைமடு குளத்தின் வான்கதவுகள் கனமழை காரணமாக திறக்கப்படவுள்ளன

மலேசியாவை சேர்ந்த மூதாட்டி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும்

புதன், 13 டிசம்பர், 2023


மலேசியாவை சேர்ந்த 112 வயதுப் பாட்டி ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
ஏற்கனவே 7 மூறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹுஸினுக்கு 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள். இப்போதும் வரன் வந்தால் நிராகரிக்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தமது கணவர்களில் சிலர் காலமாகிவிட்டதாகும் சிலரை விவாகரத்துச் செய்ததாகவும் கூறினார். சித்தி ஹவ்வா தமது ஆக இளைய மகனுடன் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.

 உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வதும் சோற்றில் குழம்பைச் சேர்த்துக் கொள்ளாததும் தான் தனது நீண்ட ஆரோக்கியமான வாழ்வின் ரகசியம் என குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை உணவைக்கூட சித்தி ஹவ்வா தவறவிடுவதில்லை. தினமும் 5 வேளை தொழுகிறார். சுறுசுறுப்பாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - மலேசியாவை சேர்ந்த மூதாட்டி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும்

நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றம்

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நாட்டில்சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 
.12-12-2023இன்று  முதல் உயர்த்த கோழி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை  30-50 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
புதிய விலையின் கீழ் ஒரு கிலோ கோழி இறைச்சியானது 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றவாறு வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது                  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மாற்றம்

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது ஆயிரத்தைக் கடந்ததுள்ளது

திங்கள், 11 டிசம்பர், 2023

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 
தெரிவித்துள்ளது. 
நேற்றைய நிலைவரப்படி 10-12-2023.அன்று  80,192 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 3,704 டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக மேல் மாகாணத்தில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
    .என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது ஆயிரத்தைக் கடந்ததுள்ளது

நீர்வேலியில் தரகர்களால் இறைச்சிக்காக விற்கப்படும் பசு மாடுகள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

யாழ் நீர்வேலியில் உள்ள சந்தனப்பொட்டு கால்நடை தரகர் ஒருவர் நீங்கள் கொடுக்கும் பால் கறக்கிற, கறக்காத (வயது போன) மாடுகளை
 இறைச்சிக்காக கொண்டு போய் கொடுப்பதாக
 நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் உலகியல் கருதுகோள்களுக்குச் சரி.
ஆனால், நாங்கள் (இந்துக்கள்) சமய ரீதியாக பசுவை .. மாடுகளை வெட்டுவதை எவ்வகையிலும் ஏற்க இயலாது. சமய சாஸ்திரங்களிலும், ஏன் திருமுறைகளிலும் பசுப்பாதுகாப்பு சிறப்பாக 
பேசப்பட்டுள்ளது. 
ஞானசம்பந்தப்பெருமான் "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்" என்கிறார். எனவே, நம் பெரியோர் பசுவை கோமாதா 
என்று போற்றினர். 
பசுவிலிருந்து கிடைக்கும் கோசலம், கோமயம், பால், தயிர், நெய் கலந்தே பஞ்சகவ்யம் வருகிறது. பசுவின் சாணியில் பிள்ளையார் பிடித்து வணங்குகிறோம். 
அந்த சாணியை சுட்டே விபூதி பூசுகிறோம். எனவே, சமய வாழ்வியலை கைக்கொள்வோர் அறிவியல் பூர்வமான எண்ணங்களுக்கு அப்பால் சமய கோட்பாடுகள் வழி தான் செயற்பட முடியும். ஆக, பசு என்பது பணம் ஈன்று தரும் உயிர் அல்ல. 
அது சைவர்களின் வாழ்வியல். அதனாலேயே நம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் போர்த்துக்கேயர் உண்ண பசு 
கொடுக்கேன் என்று இரவோடிரவாக தமிழகத்திற்கு ஓடினார். ஆகவே " கோ ப்ராம்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து" என்று பிரார்த்திப்போம்.எனக்கூறியுள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீர்வேலியில் தரகர்களால் இறைச்சிக்காக விற்கப்படும் பசு மாடுகள்