யாழ் நீர்வேலியில் உள்ள சந்தனப்பொட்டு கால்நடை தரகர் ஒருவர் நீங்கள் கொடுக்கும் பால் கறக்கிற, கறக்காத (வயது போன) மாடுகளை
இறைச்சிக்காக கொண்டு போய் கொடுப்பதாக
நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் உலகியல் கருதுகோள்களுக்குச் சரி.
ஆனால், நாங்கள் (இந்துக்கள்) சமய ரீதியாக பசுவை .. மாடுகளை வெட்டுவதை எவ்வகையிலும் ஏற்க இயலாது. சமய சாஸ்திரங்களிலும், ஏன் திருமுறைகளிலும் பசுப்பாதுகாப்பு சிறப்பாக
பேசப்பட்டுள்ளது.
ஞானசம்பந்தப்பெருமான் "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்" என்கிறார். எனவே, நம் பெரியோர் பசுவை கோமாதா
என்று போற்றினர்.
பசுவிலிருந்து கிடைக்கும் கோசலம், கோமயம், பால், தயிர், நெய் கலந்தே பஞ்சகவ்யம் வருகிறது. பசுவின் சாணியில் பிள்ளையார் பிடித்து வணங்குகிறோம்.
அந்த சாணியை சுட்டே விபூதி பூசுகிறோம். எனவே, சமய வாழ்வியலை கைக்கொள்வோர் அறிவியல் பூர்வமான எண்ணங்களுக்கு அப்பால் சமய கோட்பாடுகள் வழி தான் செயற்பட முடியும். ஆக, பசு என்பது பணம் ஈன்று தரும் உயிர் அல்ல.
அது சைவர்களின் வாழ்வியல். அதனாலேயே நம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர் போர்த்துக்கேயர் உண்ண பசு
கொடுக்கேன் என்று இரவோடிரவாக தமிழகத்திற்கு ஓடினார். ஆகவே " கோ ப்ராம்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து" என்று பிரார்த்திப்போம்.எனக்கூறியுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக