போதனா வைத்தியசாலையில் நடந்த வரலாற்று சாதனை

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு மைல்கல்.பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் “டாக்டர்.டீபாலின்” 
வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் 
சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது.யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனை.
வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - போதனா வைத்தியசாலையில் நடந்த வரலாற்று சாதனை

நாட்டில் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புதிய சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது

திங்கள், 27 பிப்ரவரி, 2023

இலங்கைக்கு சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மாநில நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டியா கூறுகிறார்.
இலங்கைக்குள் அந்த பொருட்களுக்கு தேவை இருப்பதால், 
சில ஒப்பனை பொருட்களை மீண்டும் ஒரு முறை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதாக டெஹியோவிடாவில் உள்ள ஊடகங்களுடன் பேசிய மாநில அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனால் அதன் மீது கட்டுப்பாடு இருக்க வேண்டும்", என்று அ
வர் மேலும் கூறினார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்.எம்.ஆர்.ஏ) அல்லது இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (எஸ்.எல்.டி.டி.ஏ) ஒப்புதலுடன் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புவதாக சுட்டிக்காட்டிய மாநில மந்திரி சியாம்பலபிதியா, ஒப்புதல் பெற முடியாத ஒரு பகுதியினர் இருப்பதை முன்னிலைப்படுத்தினர் அந்த இரண்டு 
நிறுவனங்களிலிருந்தும்.
"இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் ஒப்புதல் பெற முடியாத ஒரு குழு இந்த சிக்கலை எதிர்கொண்டது என்பதை நாங்கள் நடைமுறையில் அனுபவித்திருக்கிறோம். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம், அதனால்தான் ஒரு சுற்றறிக்கையை வெளியிட நாங்கள் தயாராக 
இருக்கிறோம், இதனால் இந்த மக்கள் குழு அழகுசாதனப் பொருட்களை சில ஒழுங்குமுறைகளுடன் இறக்குமதி செய்ய முடியும் ”என்று மாநில 
அமைச்சர் கூறினார்.
மேலும், அழகுசாதனப் பொருட்களின் தேவையான பங்குகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பொருட்டு தற்போது ஒரு சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதை அவர் வலியுறுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த மாநில அமைச்சர், இலங்கை சுங்க 04 கொள்கலன்களை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்களை அனுமதியின்றி இறக்குமதி செய்துள்ளதாகக் 
குறிப்பிட்டுள்ளார்.
“சுமார் ரூ. இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், துபாய் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செயப்பட்ட 50 மில்லியன் மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்கள் ”என்று 
அவர் கூறினார்.
புதிய சுற்றறிக்கை வழங்கப்படும் வரை அந்த பங்குகளை போட்டி விலையில் சந்தைக்கு வெளியிடுவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு ஓரளவிற்கு பெறப்படலாம் என்றும் மாநில 
அமைச்சர் தெரிவித்தார்.
*
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புதிய சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது

ரோட்டில் வாழைப்பழம் விற்ற வயதான ஐயாவின் மனவலி.தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ரோட்டில் ஒரு வயதானவர் வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்.ஒரு பெண் காரில் இறங்கி வாழைப்பழம் 3 என்ன விலை என்று கேட்டாள்?அதற்கு வயதானவர் ஒரு பழம் 5 ரூபாய் என்றார்.அந்த பெண் 6 வாழைப்பழம் 25 க்கு கொடுப்பிங்களா என கேட்டாள்.
வயதானவர் சரிம்மா நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க காலையிலிருந்து நீ தான் முதல் போணி செய்கிற கடவுள் உன்னை நல்லா வைக்கட்டும் என்று சொல்லித் தந்தார்.தான் கேட்ட விலைக்கு கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்துடன் அந்த பெண் வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியே அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றால்.இருவரும்,பேசிக்கொண்டே தாங்கள் விரும்பியதே வாங்கி சாப்பிட்டார்கள்.சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம் பில் தொகை 1200 ரூபாய் அவர் 1300ஜ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மிகுதி ரூபாய் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றால்.ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணமான விஷயம்.
ஆனால் வாழைப்பழம் விற்ற பெரியவருக்கு வலி மிகுந்த விஷயம்.”இதில் உற்று நோக்க வேண்டியது”.நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும் போது நம் பலத்தை காட்டுகிறோம்.பணக்காரர்களிடமும் தேவைகளை இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்.நாம் மாறுவோம்.நல்ல மாற்றத்தினே 
உருவாக்குவோம்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - ரோட்டில் வாழைப்பழம் விற்ற வயதான ஐயாவின் மனவலி.தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்

மீண்டும் இலங்கையில் நீண்டநேர மின்தடை தொடர்பில் வெளியான செய்தி

சனி, 25 பிப்ரவரி, 2023

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் 
என்றும் அவர் கூறினார்.இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - மீண்டும் இலங்கையில் நீண்டநேர மின்தடை தொடர்பில் வெளியான செய்தி

நீரிழிவு நோயாளர் இலங்கையிலேயே அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள 
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு 
நடத்தப்பட்டுள்ளது.
 பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இலங்கையிலுள்ள பெரியவர்களில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், மூன்றில் ஒருவருக்கு உயர் சர்க்கரை அளவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
புவியியல் ரீதியாக, அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு பாதிப்புக்கள் இலங்கையின் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. மூன்றில் ஒன்று கொழும்பில் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் 
யாழ்ப்பாணம் 
மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகளை கொண்டு ஆசியாவிலேயே சர்க்கரை நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை உருவாகியுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நீரிழிவு நோயாளர் இலங்கையிலேயே அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது

நாட்டில் வெளிநாட்டு பெண்ணை செருப்பால் அடித்தவராய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவரை செருப்பால் தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால் தாக்கும் காணொளி.22-02-2023. அன்று  சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது.
சந்தேக நபர்.23-02-2023. இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் வெளிநாட்டு பெண்ணை செருப்பால் அடித்தவராய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிகவும் தரமான முறையில் யாழில் மிக்க குறைந்த விலையில் செருப்புக்கள் உற்பத்தி

புதன், 22 பிப்ரவரி, 2023

யாழ்ப்பாணத்துச் செருப்பு.பார்ப்பதற்கு அழகானதும், தரமானதுமான செருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகின்றன என்றால், நீங்கள் நம்புவீர்களா? ‘அந்திரான்’ என்று ஒரு யாழ்ப்பாணத்துச்
 சிறு கிராமம்.
அங்குதான் இந்த செருப்புத் தொழிற்சாலை இருக்கிறது. கொழும்பில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பித்து, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் ஏற்ற, அழகிய செருப்புக்களை இங்கே 
உற்பத்தி செய்கிறார்கள்.
பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட ஐந்து பெண்கள் இங்கே வேலை செய்கிறார்கள். செருப்புக்களில் போடப்படும் அழகிய வேலைப்பாடுகளை வடிவமைப்பது, அவற்றை அச்சுப் பதிப்பது, பொதிசெய்வது எல்லாமே இவர்கள்தான்.
பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது இவர்களின் உழைப்பு. இவர்களின் இந்தத் தொழில் மேலும் பெருகுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இனிமேல் உங்கள் பாதங்களை இந்த யாழ்ப்பாணத்துச் செருப்புக்கள் அலங்கரிக்கட்டும்.
arp’ எனும் பெயரில் உருவாகிவரும் ‘அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்தின்’ செருப்புக்களை வாங்கி அணியுங்கள். உங்கள் சகோதரிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்..!!


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - மிகவும் தரமான முறையில் யாழில் மிக்க குறைந்த விலையில் செருப்புக்கள் உற்பத்தி

எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனத்திடம் இருந்து ¨வாங்க முடிவு செய்துள்ள uber நிறுவனம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

uber நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவரான பிரப்ஜீத் சிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
இந்த தகவல் யாதெனில் “tata நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை uber நிறுவனம் வாங்க முடிவு 
செய்துள்ளது.
இது அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும். இதற்கு காரணம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனத்திடம் இருந்து ¨வாங்க முடிவு செய்துள்ள uber நிறுவனம்

அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் பேருந்து மற்றும் கார் மீது ரயில் மோதி விபத்து.

திங்கள், 20 பிப்ரவரி, 2023

 

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ராணி புகையிரதம் கிளிநொச்சி அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் இன்று (20) பேருந்து மற்றும் காருடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
யாழ்ராணி புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து வவுனியா வரை இயங்கும் போது கிளிநொச்சி அரவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது. 
யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் குழுவொன்று புகையிரத கடவையை அருகில் இருந்த பேரூந்து ஒன்றின் மூலம் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் ரயிலுடன் மோதியதை அடுத்து பஸ் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்த கிளிநொச்சி பொறியியல் துறைக்கு சொந்தமான கார் 
மீது மோதியது.
பஸ் சாரதியும், காரில் பயணித்த ஒருவரும், காரில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத கடவைக்கு கேட் இல்லை எனவும், புகையிரத சமிக்ஞைகள் மாத்திரம் பொருத்தப்படுவதால் பல விபத்துக்கள் 
ஏற்படுவதாகவும், எனவே புகையிரத கடவைக்கு உடனடியாக கேட் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் ரயில்வே அதிகாரிகளிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

                             

READ MORE - அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் பேருந்து மற்றும் கார் மீது ரயில் மோதி விபத்து.

நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இலங்கை சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை
 கோரியுள்ளது.
19-02-2023.இன்று பிற்பகல் 1.30 மணி முதல்.19-02-2023. இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் என திணைக்களம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் 12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு.

சனி, 18 பிப்ரவரி, 2023

இவ்வருடம் இதுவரை நாடளாவிய ரீதியில் 3500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது தவிர மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இந்த 12 மாவட்டங்களையும் டெங்கு அபாயம் உள்ள மாவட்டங்களாக சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.2023 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் 
எண்ணிக்கை 3637 ஆகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் 12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு.

முற்றுமுழுதாக மீண்டும் முடங்கப்போகுமா இலங்கை..வெளியான அதிர்ச்சி செய்தி

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் அழைப்பு 
விடுத்துள்ளார்.அத்துடன், நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடுசெய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள 
உத்தேசித்துள்ளது.
கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாகச் 
செயற்படுவதில்லை.
தன்னிச்சையாகச் செயற்படும் அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது.மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம்,
பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம். தொழிற்சங்கப் போராட்டத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - முற்றுமுழுதாக மீண்டும் முடங்கப்போகுமா இலங்கை..வெளியான அதிர்ச்சி செய்தி

இலங்கையில் ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு

வியாழன், 16 பிப்ரவரி, 2023

நாட்டில் மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும் அதிகாரவர்க்கத்தையே குற்றம் சுமத்த வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு

நாட்டில் மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

புதன், 15 பிப்ரவரி, 2023

இலங்கையும் இந்தியாவும் தங்களது மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை கோடிட்டு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு, நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இந்தியா அதன் தெற்கு அண்டை நாடான இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் டாலர் உதவியை 
வழங்கியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த முற்படுகிறது என்று என்று உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியைப் பொறுத்த வரையில், இந்தியா அந்த வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகிறது. 
எனவே அதை இலங்கை தொடர வேண்டும். இந்தியாவில் இருந்து சுற்றுலா, இந்தியாவில் இருந்து முதலீடு, இந்தியாவுடன் ஒருங்கிணைப்பு என்பவற்றை இலங்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் மொரகொட 
குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பங்கு,  வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி 
செய்வதில் தங்கியுள்ளது. 
இதன் மூலம், இலங்கையில் இருந்து எல்லை தாண்டிய கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும்.
அந்த வகையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த கேபிள் பாதையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை நம்புவதாக மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

நாட்டில் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சங்கத்தின் உறுப்பினர் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்
மருந்து இறக்குமதி
தடுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எமுன்னதாக, இலங்கை சந்தைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கையால் அங்கீகரிக்கப்படாத இந்திய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
னினும் இந்த தவறை சரி செய்யுமாறு அரசை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை வைத்தியர் விமானத்தில் வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்

திங்கள், 13 பிப்ரவரி, 2023


மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே 
 காப்பாற்றியுள்ளார்.            
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 85 வயதுடைய வயோதிப் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது, ​​மருத்துவர் அல்லது மருத்துவ உதவி வழங்கக்கூடிய நபர் இருந்தால், தங்கள் குழுவினருக்குத் தெரிவிக்குமாறு விமானப் பணியாளர்கள் 
அறிவித்துள்ளனர்.
அதன்போது இந்த விமானத்தில் பயணித்த  வைத்தியர் மனோரி கமகே  முன் வந்தார்.  மூச்சு விடுவதில் சிரமப்பட்ட வயோதிப பெண்ணுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார்.  
அதன்படி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலமுறை   ஒக்சிஜன் வழங்கவும், Inhaler மூலம்  மருந்து வழங்கவும் 
நடவடிக்கை எடுத்துள்ளார். 
விமானத்தில் ரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எதுவும் இல்லை, இதன்போது அங்கு  ஒரு பயணியின்  smart watch மூலம் வயதான பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டார், மற்றொரு பயணியிடம் இருந்த ஆஸ்பிரின் மருந்தை நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார். 
நோயாளியிடம் இருந்த இன்ஹேலர் பலமுறை செலுத்தப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை.
மேலும்  prednisolone syrup இனையும் கொடுத்து வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்.  வயோதிபப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த  இலங்கை வைத்தியருக்கு விமானத்தில் இருந்த பயணிகள் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - இலங்கை வைத்தியர் விமானத்தில் வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்

யாழ் பலாலி விமான நிலையத்தில் Duty Free shop திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ் – பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக
 வளாகத்தின் முதலாவது தொகுதி .11-02-2023. அன்று 
 திறந்து வைக்கப்பட்டது. சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி 
தலைமையில் 
இந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கும்
 சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - யாழ் பலாலி விமான நிலையத்தில் Duty Free shop திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சனி, 11 பிப்ரவரி, 2023

வைத்தியசாலை அமைப்பில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட நூற்றைம்பது வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதய நோயாளர்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள் அதிகம் இல்லை எனவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹதாராச்சி
  10-0    1-2023. அன்று தெரிவித்தார்.
இதயம், சர்க்கரை நோய், சிறுநீரகம், புற்றுநோய், குழந்தை சுவாசம் மற்றும் மாதவிடாய் இரத்த நோயாளிகளுக்கான அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை கடுமையாக மோசமடைந்துள்ளதாகவும் 
அவர் கூறினார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை வெளியில் இருந்து பெற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் சிறுநீரக நோயாளர்கள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பல வைத்தியசாலைகளில் இருதய நோயாளர்களுக்கான மருந்துகள் இல்லை எனவும்
 அவர் தெரிவித்தார்.
இதய நோய் பரிசோதனைகளுக்கு (என்ஜிஓ கிராம்) பயன்படுத்தப்படும் சாய வகையிலும் பற்றாக்குறை உள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மாவட்டங்களின் வைத்தியசாலை அமைப்பில் ஈ.சி.ஜி.  தட்டுப்பாடும் உள்ளது.
  டெங்கு போன்ற நோய்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ரியாஜெண்டுகளின் பற்றாக்குறையும் 
மோசமடைந்துள்ளது.
இவ்வாறான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை முன் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு தேவையான 
வினைத்திறன்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும் 
கூறப்பட்டது.
இவ்வாறான நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து நோயறிதலுக்கு உட்படுத்த வேண்டிய நிலையில், வைத்தியசாலையின் வார்டு அமைப்பின் நோயாளிகளின் திறன் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்றார்.
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை அமைப்பில் மருந்துகள் இல்லாமைக்கு ஊழல், மோசடி, முறைசாரா திட்டமிடல் மற்றும் தவறான முகாமைத்துவமே காரணம் எனவும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை மாத்திரம் காரணமல்ல எனவும் தலைவர் தெரிவித்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கை மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கனடாவில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கனடாவில் லொட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது மாணவி.ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த மாணவிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த மாணவி, தனது பிறந்தநாளுக்கு தனித்துவமான ஒன்றைப் பெறுவதற்காக ஷொப்பிங் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட யோசனைக்கு 
பிறகும், அவரது தாத்தாவின் அறிவுரையின் பேரிலும், 
அவர் ஒரு லொட்டரி சீட்டை வாங்க முடிவு செய்தார். அது தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது அவருக்குத் 
தெரியவில்லை
ஜூலியட், அந்த லொட்டரி டிக்கெட் வாங்கியது குறித்து மறந்தே போயுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் திகதி லொட்டரியில் தனது அயல் வீட்டுக்காரர் பரிசு வென்றதை அறிந்ததும், தானும் ஒரு டிக்கெட்டை
 வாங்கியிருப்பது அப்போதுதான் அவருக்கு நியாபகம் வந்தது. அந்தப் பெண் தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா என்று 
பார்ப்பதற்காக அந்த லொட்டரியின் செயலியை திறந்தாள். லொட்டரியில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.290 கோடி கிடைத்துள்ளது.
ரூ. 290 கோடி சம்பாதித்தது, அவருக்கே ஆச்சரியத்தை 
ஏற்படுத்தியுள்ளது. மாணவி திகைத்துப் போனார். ஜூலியட் தனது குடும்பத்தாரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட பிறகு, 
தலா ரூ.2 கோடி மதிப்பிலான ஐந்து மெர்சிடிஸ் கார்களை
 உடனடியாக விலைக்கு வாங்கினார். கூடுதலாக, அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தை ரூ. 100 கோடிக்கும், லண்டன் வில்லாவுக்கு ரூ. 40 கோடியும் செலவிட்டுள்ளார்.
மேலும், புத்திசாலித்தனமான பெண் தனது எதிர்காலத்திற்காக சுமார் 150 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மருத்துவராக ஆசைப்படும் ஜூலியட், தனது தந்தையின் உதவியோடு அந்த பணத்தை 
நிர்வகித்து வருகிறார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கனடாவில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி.

நாட்டில் வீதியின் குறுக்கே புகையிரத தண்டவாளங்கள் காணப்படின் வாகன சாரதிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை

வியாழன், 9 பிப்ரவரி, 2023

தூரத்தில் ரயில் வரும்போது ரயில்பாதையை கடக்கும் வாகனங்களின் இன்ஜின்கள் திடீரென ரயில்பாதையின் நடுவில் நின்று, இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் ரயிலில் சிக்கிக் கொள்ளும் விபத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் ஏன் அப்படி நடக்கிறது??வாருங்கள் இப்போது அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
இதுபோன்ற விபத்து நடக்கும் இடத்தில் இருந்த பலர், இன்ஜினில் இருந்து வெளிவரும் காந்தப்புலத்தால்,(magnetic field) வாகனங்களின் இன்ஜின்கள் செயலிழந்ததாக கருதுகின்றனர்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??.ஆனால், இதைப் பற்றி பேசுவதற்கு முன், ஒரு ரயில் என்ஜின் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ரயிலின் எஞ்சின் ஒரு நடமாடும் மின் உற்பத்தி நிலையம் போன்றது. ஏனென்றால் அதற்குள் ஒரு இன்ஜினைத் தாண்டி இன்னும் பல அம்சங்கள் உள்ளன.சாதாரண இன்ஜின் மற்றும் கியர் சிஸ்டம் ரயிலுக்கு இல்லை. அதிக rpm இல் இன்ஜின் கூட சில வேளை வெடிக்கலாம்.எனவே ரயில் சக்கரங்கள் எலெக்ட்ரிக் மூலமாகவே திருப்ப வேண்டும். அதாவது
 மோட்டர்கள் மூலம்.
ரயிலின் locomotive அல்லது பொதுவான மொழியில், இன்ஜின் பெட்டிக்குள் ஒரு பெரிய உள் எரிப்பு இயந்திரம் உள்ளது.இது டீசலில் வேலை செய்கிறது.1 கிமீ செல்ல சுமார் 5 லிட்டர் டீசல் தேவை.அந்த எஞ்சினுடன் ஒரு பெரிய ஜெனரேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரால் உற்பத்தி செய்யப்படும் AC மின்சாரம் அடுத்ததாக ஒரு மின்மாற்றிக்கு 
செல்கிறது. மின்மாற்றி தேவையான மின்னழுத்தத்தை உருவாக்கியதும், அது rectifiers க்கு செல்கிறது. அங்குதான் இந்த AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றப்படுகிறது.
அடுத்து இந்த DC மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் மீண்டும் AC யாக மாற்றி ரயில் சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டிராக்ஷன் மோட்டார்ஸ்(Traction Motors) எனப்படும் மோட்டார்களுக்கு கொடுக்கப்படுகிறது… அந்த மோட்டார்களில் இருந்துதான் ரயிலின் சக்கரங்கள் சுழன்று ரயில் 
முன்னோக்கி நகர்கிறது.. . இந்த உள் பாகங்கள் ஒரு பெரிய ரேடியேட்டர் சிஸ்டம் மூலம் குளிர்விக்கப்படுகிறது. எனவே, டீசல் ரயில் என்று நினைத்தாலும், உண்மையில் பார்த்தால், இது ஒரு வகையான 
மின்சார ரயில் தான்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வீதியின் குறுக்கே புகையிரத தண்டவாளங்கள் காணப்படின் வாகன சாரதிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை

அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின

புதன், 8 பிப்ரவரி, 2023

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு 
காயம் ஏற்பட்டது.
அவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவர் கரிஷ்மா, மருத்துவ ஆய்வாளர் உமா ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சைகள் 
அளித்தனர். 
மாடு முட்டியதில் குடியாத்தத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின

நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம்.
நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அதை அபசுகுணம் என்று சொல்வோம் நாம் செய்யும் வேலையை நிறுத்தி விடுவோம் மீண்டும் வீட்டிற்கு வந்து சில நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துட்டு பின் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின்பு நாம் செய்ய வேண்டிய வேலையை
 தொடர்வோம்.
இதன் இதன்பின் ஒரு சுவாரசியமான பின்னணி கதை தான் நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்குமா வாங்க கீழ படிப்போம்.
அக்காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நாம் செல்ல முடியும் என்றால் அது மாட்டு வண்டியில் அல்லது குதிரை வண்டிகோ பயணம் செய்ய வேண்டும் அப்படி நம்ம பயணம் செய்யும் பொழுது இடையில் ஒரு சில பிரச்சனைகள் வரும் அதில் ஒன்றுதான் நம் இருட்டில் செல்லும் போது இடையில் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பூனையினுடைய விழிகள் ரேடியம் போல் மின்னும்
எதிரில் பூனை தான் என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது அந்த நிலையில் மாடும் குதிரையும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள் பூனை எதிரே வந்தால் சிறிது நேரம் மண்டே ஓரமா நிறுத்திவிட்டு குதிரை க்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துட்டு செல்வார்கள்.
குதிரை ஊட்டி செல்பவர்கள் சிறிதாக ஓய்வெடுத்து விட்டு தண்ணீர் பருகி விட்டு அதன் பின்பு தன்னுடைய பயணத்தை தொடருவார்கள் இப்பழகு காலப்போக்கில் மாறி பூனைக்குறிக்க வந்தால் அபசகுணம் தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய மக்கள் மத்தியில் வந்துருச்சு.
மூடப்பழக்க பழக்கவழக்கங்கள் மீது நம்பிக்கை இருந்தால் இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ஒரு காரியம் 
கொழுப்பத்தோடு செய்யும்போது அதில் பிரச்சனைகள்
 வரத்தான் செய்யும் பூனை குறுக்கே வந்தாலும் சரி பூனை குறுக்கே வரவில்லை என்றாலும் சரி மனதிருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் 
வெற்றியில் முடியும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

திங்கள், 6 பிப்ரவரி, 2023

இலங்கையில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 
அண்மைய நாட்களாக நாட்டின் ஒரு சில பாகங்களில் உள்ள வயல் நிலங்களில் நெற்கதிர்கள் மஞ்சல் நிறத்தில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெற்கதிர்களில் ஏற்படும் பொற்றாசியம் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நோய் நிலமைகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, உரிய முறையில் சரியான நேரத்தில் உரமிடப்படுவது கட்டாயமாகும். எனினும், உரம் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தாமதம் நிலவுவதால், இவ்வாறான நோய் நிலமைகள் எற்படுவதாக விவசாயிகள் 
குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை நாட்டில் தற்பொழுது பெய்த கடும் மழையின் காரணமாக வட பகுதி உட்பட பல பிரதேசங்களில் நெல் அறுவடை செய்யாமல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை
 தெரிவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்