பண்டாரிக்குளத்தில் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி தீக்கிரை

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியின் வீடொன்றில்
 நிறுத்திவைக்கப்பட்டிருந்த 
முச்சகரவண்டியை .30-08-2020.  அன்று,இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - பண்டாரிக்குளத்தில் இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டி தீக்கிரை

இலங்கையில் மதுபானப் பிரியர்களுக்கு மிக விரைவில் அமுலாகும் தடை.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

 

இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை 
அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.எதிர்வரும் வாரம் உரிய மதுபான நிறுவனங்களை 
அழைத்து கால் போத்தலை மாற்றியமைக்குமாறு ஆலோசனை வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அவ்வாறு மாற்றம் ஏற்படவில்லை என்றால், கால்
 போத்தல் மதுபான விற்பனையை 
தடை செய்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது சந்தையில் உணவு பொருட்கள் அல்லாத ஷெஷே பக்கட்களை தடை செய்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர 
தெரிவித்துள்ளார்.

READ MORE - இலங்கையில் மதுபானப் பிரியர்களுக்கு மிக விரைவில் அமுலாகும் தடை.

நாடு முழுவதும் மனிதப் பிழையே மின் தடைக்கு காரணம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

நாடு முழுவதும் அண்மையில்  ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு மனிதப் பிழையே காரணம் என்று விசாரணை குழு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதனை மின்சக்தி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
மின் தடை தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (25) மின்சக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இன்று (26) அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாடு முழுவதும் மனிதப் பிழையே மின் தடைக்கு காரணம்

நெளுங்குளத்தில் காணாமல் போன பசுக்கள் இறைச்சிக் கடைக்கு அருகாமையில் மீட்பு

 

வவுனியாவில் பல நாட்களாக காணாமல் போயிருந்த இரு பசுக்கள் இறைச்சிக் கடை ஒன்றுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெளுங்குளம் பகுதியில் ஒருவரது
 வீட்டில் இருந்து காணாமல் போன பசுக்களை தேடும் நடவடிக்கையினை உரிமையாளர் மேற்கொண்ட போது, இவ்வாறு இரு பசுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பசுக்களை மீட்டு, இறைச்சி கடையின் விற்பனையாளரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.READ MORE - நெளுங்குளத்தில் காணாமல் போன பசுக்கள் இறைச்சிக் கடைக்கு அருகாமையில் மீட்பு

மத்திய வங்கியின் தங்கநகை கடன், கடனட்டை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தங்கக்கடன் அடகு, கடனட்டை என்பவற்றுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை.20-08-20. நேற்றுக் கூடிய போது இந்த தீர்மானம் 
எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கும், தங்கக்கடன் அடகு வட்டியை 10 வீதமாக குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வங்கி 
மேலதிக பற்றுக்கான வட்டி 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மத்திய வங்கியின் தங்கநகை கடன், கடனட்டை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

புஹூரிய புகையிரத கடவையில் பாட்டுக் கேட்டுக் கொண்டே ரயிலுடன் காரைமோதிய சாரதி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

இலங்கை பொல்கஹாவெல, புஹூரிய புகையிரத கடவையில், புகையிரதத்துடன் மோதிய காரொன்று பலத்த சேதமடைந்துள்ளது.
14-08-20.இன்று காலை 8.30 மணியளவில்
 கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன், கார் மோதியது. இந்த விபத்தில் கார் சாரதி பலத்த காயமடைந்து பொல்கஹாவெல மருத்துவமனைக்கு பிரதேசவாசிகளால் கொண்டு 
செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காயமடைந்த சாரதி அந்த பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர், காருக்குள் பலத்த சத்தமான பாடலை ஒலிக்கவிட்டு கவனக்குறைவாக வாகனம் 
ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.பொல்கஹாவெல பொலிசார் மேலதிக 
விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - புஹூரிய புகையிரத கடவையில் பாட்டுக் கேட்டுக் கொண்டே ரயிலுடன் காரைமோதிய சாரதி

சிங்கப்பூரில் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரில் விவசாயம்

 
வெளிநாட்டில் செய்து வந்த மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்துக்கு 
திரும்பிய இயற்கை விவசாயி, தனக்கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபா லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.விருதுநகர் அருகே மல்லாங்கிணறு 
கிராமத்தில் வசித்து வரும் ஆதிமூலம், சிங்கப்பூரில் செய்து வந்த மருத்துவர் தொழில்நுட்பவியலாளர் பணியை 
விட்டுவிட்டு விவசாய தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். இவர் தேவையான
 விவசாய இயந்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய சொந்த முதலீட்டில் இருந்து வாங்கி வந்து, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பிரதான விவசாயமாக கொய்யாப்பழம் பயிரிட்டு வளர்த்து 
வருகிறார்.வெறும் இரண்டு ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்று வருவதாக மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். 
மேலும் கூடுதல் விவசாய பயிர்களாக தற்போது மாமரம், நெல்லிக்காய், பப்பாளி ஆகியவற்றையும் வளர்த்து வருவதாக 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - சிங்கப்பூரில் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரில் விவசாயம்

யாழ் திருநெல்வேலியில் பாரிய தீ விபத்து பற்றி எரியும் வர்த்தக நிலையம்

 யாழ் திருநெல்வேலியில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது .
யாழ் பலாலி வீதி திருநெல்வேலிச் சந்தியில் சற்று முன்னர் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீரென தீப் பற்றிக் கொண்டது .
இதனை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வீதியால் சென்று கொண்டிருந்தவர்களும் இணைந்து தீயை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . சேத விபரங்கள் குறித்து 
தெரியவரவில்லை…
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ் திருநெல்வேலியில் பாரிய தீ விபத்து பற்றி எரியும் வர்த்தக நிலையம்