நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரியொன்று

ஞாயிறு, 31 மார்ச், 2024

நாட்டில் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 விசேட பண்டங்கள் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுவதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இராஜாங்க 
அமைச்சர் கூறியுள்ளார்.
 எவ்வாறாயினும், வரி அமுல்படுத்தப்படும் காலத்தில் நாட்டில் காணப்படும் பொருட்களுக்கு அதிக பெறுமதி வழங்கப்படுவதால், மக்களுக்கான நிவாரணம் கிடைக்காமல் போகலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
என்பது  குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரியொன்று

நாட்டில் கரைச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

சனி, 30 மார்ச், 2024

நாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை விடுத்துள்ளனர்.
குறித்த சந்தையில் நீண்ட நாட்களாக நீர் வசதியின்மை காரணமாக பெரிதளவில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது வணிகத்திற்கு வருகை தரும் நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் கிளிநொச்சி சந்தைப் பகுதியில் உள்ள பொது மலசல கூடம் தூய்மையின்றி காணப்படுவதாகவும், இது தொடர்பாக பல தடவைகள் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவித்தும் இதுவரையில் எந்தவொரு
 நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்தை வளாக வடிகால்களும் நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பெரிதளவில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் நோய்வாய்பட அதிக சாத்தியங்கள் உள்தாகவும் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக விரைந்து தமக்கான நீர் வசதியையும், துப்பரவு பணியையும் மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள்
 தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தை பகுதிக்குள் அமைந்துள்ள மலசல கூடம் மற்றும் மீன் விற்பனை செய்யப்படும் பகுதிகளிற்கு உட்செல்ல முடியாதவாறு துர்நாற்றம் விசுவதாகவும், தண்ணீரின்மையால் பெரிதும் சிரமப்படுவதாகும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்த ஜீவனோபாயத்தை பெறுவதற்காகவே இது அனைத்தையும் சகித்துக் கொண்டு இப்பகுதியில் பணிபுரிவதாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கரைச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

வெள்ளி, 29 மார்ச், 2024

 இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் 
ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க 
இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. 
உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.
கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறுவயிற்றில் கிரின் டீ குடிப்பதால் அது வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தகூடும். இதனால் நெஞ்செரிச்சல், அமிலச்சுரப்பு, செரிமானப்பிரச்சனை போன்றவை வரலாம்.
எனவே கிரின் டீ அருந்தவதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு கிரின் டீ குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். அதிகமாக கிரீன் டி குடித்தால் அது எமக்கு தலைவலியை ஏற்படுத்துவதோடு தலைசுற்றும் 
ஏற்படுத்தலாம்.
இதில் காணப்படும் ஒரு வகை ரசாயனம் எமது உறக்கத்தை இல்லாமல் செய்யும். கிரீன் டீ குடிக்க குடிக்க எமது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து கொண்டே செல்லும்.
இது புரதத்தின் அளவை குறைத்து எமக்கு ரத்த போக்கை ஏற்படுத்தும். இதிலுள்ள காபின் கல்லீரலுக்கு கூடிய அழுத்தத்தை 
கொடுக்கும்.
இதை அதிகமாக குடிப்பவர்கள் ஒரு வகை எலும்பு நோயால் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம்.
கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த டீ குடித்தால் கருச்சிதைவு ஏற்படலாம். குழந்தையின் வளர்சிதை பாதிக்கப்படலாம்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா

உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

வியாழன், 28 மார்ச், 2024

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 
.28-03-2024.கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 குறித்த நிகழ்வு.28-03-2024 இன்று காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது. உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில்
 பெறுமதி சேர்த்தனர்.
குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உட்சாகப்படுத்தினர். தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி 
விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உழவு இயந்திரம் செலுத்தி கிளிநொச்சியில் கொண்டாடிய பெண்கள்

நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

புதன், 27 மார்ச், 2024

நாட்டில்  ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி.27-03-2024. இன்று  முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03-03-2024. ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் அரிசி விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

செவ்வாய், 26 மார்ச், 2024

நாட்டில் விவசாயத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என 
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதற்கு வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது 
அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதியை 
வடக்கு, கிழக்கு
 மாகாண மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார். 
 வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை. எனவே வடமாகாண 
விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை 
விடுத்துள்ளனர். 
 அதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணம் குறைக்கப்படுமாம்

இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

திங்கள், 25 மார்ச், 2024

இலங்கையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி 
செய்யப்படுகின்றன.
 இந்தியா விதித்துள்ள இந்த தடையால் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே இலங்கை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 600 முதல் 700 ரூபா வரையில் விற்பனை 
செய்யப்படுகிறது.
 எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் நுகர்வோருக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் வெங்காய ஏற்றுமதி தடை:யால் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் அபாயம்

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

ஞாயிறு, 24 மார்ச், 2024

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க தீர்மானம்

தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

சனி, 23 மார்ச், 2024

தைவானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஆட்ரி டாங், சீனாவை தளமாக கொண்டு இயங்கும் TikTok ஐ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளார்.
வெளிநாட்டு எதிரிகளுடனான தளத்தின் தொடர்பு அமெரிக்காவின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது என்று டாங் 
வலியுறுத்தினார்.
தைவானின் தரநிலைகளின்படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு
 தயாரிப்பும் தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் மேலும் 
கூறியுள்ளார்.
 டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸை குறிவைத்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை சமீபத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தைவானின் டிக்டோக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறியுள்ளார்

யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

வெள்ளி, 22 மார்ச், 2024


கனடாவிற்கு அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால், இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 
முறைப்பாடு செய்தார்.
 முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில்
 முற்படுத்தினர்.
நீதிமன்றில் தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள இளைஞனிடம் கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்ச ரூபாய் பணத்தினை இளைஞனிடம் குறித்த பெண் மீள் அளித்தார். அதனை 
அடுத்து பெண்ணை 06 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்தது..என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - யாழில் கனடா அனுப்புவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது

பணவீக்கத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 மார்ச், 2024

இந்த நாட்டில் 2024 ஜனவரியில் 6.5% ஆகப் பதிவாகியிருந்த பணவீக்கம் 2024 பிப்ரவரி மாதத்தில் 5.1% ஆகக் குறைந்துள்ளது.  
ஜனவரி 2024 இல் 4.1% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் பிப்ரவரி 2024 இல் 5.0% ஆக அதிகரித்துள்ளது. 
மேலும், 2024 ஜனவரியில் 8.5% ஆக இருந்த உணவு அல்லாத வகையின்  பணவீக்கம் பிப்ரவரி 2024 இல் 5.1% ஆகக் குறைந்துள்ளது.
 என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - பணவீக்கத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மகிழ்ச்சியில் பின்தங்கி உளத்தக்க வெளியான அறிக்கை

புதன், 20 மார்ச், 2024

மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் 
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் முறன்பாடுகள், இயற்கை 
பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாகவே இலங்கை தொடர்ந்து குறைந்த தரவரிசையில் உள்ளது.
 பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளது. மாறாக முதல் ஐந்து மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து முறையே இடம்பிடித்துள்ளன.
 இலங்கையில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் அமைதியின்மை பரவலான வன்முறை மற்றும் இடப்பெயர்ச்சியை விளைவித்துள்ளன. இதனால் சமூக ஸ்த்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய 
ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிகளை எதிர்க்கொண்டிருந்தது.
 இதன்விளைவாக கடன் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சவால்கள், 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனநலப் பிரச்சினைகளும் 
அதிகரித்துள்ளன.
 நாட்டு மக்களின் வருமானத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக வசதியானவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே கணிசமான செல்வப்
 பிளவு ஏற்படுகிறது.
 இது ஏழைகள் மத்தியில் பெரும் அதிருப்தி மனநிலையை உருவாக்கியுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தீவிர வானிலை போன்ற
 இயற்கை பேரிடர்களால் நம் நாடு அடிக்கடி பாதிக்கப்படுகிறது. உதாரணமாக இந்த ஆண்டு, நாடுமுழுவதும் அதிக வெப்பமான காலநிலை
 நிலவுகின்றது. 
 மேலும் கடந்த ஆண்டில் மண்சரிவுபோன் பேரழிவுகளால் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதோடு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டு குடிமக்கள் மத்தியில் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தி மற்றும் மகிழ்ச்சி குறைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கை மகிழ்ச்சியில் பின்தங்கி உளத்தக்க வெளியான அறிக்கை

நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உச்சம் தொடும் வெப்பநிலை மக்களுக்கு எச்சரிக்கை

செவ்வாய், 19 மார்ச், 2024

மனித உடலால் உணரப்படும் வெப்பம், நாளை (20.03) நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில்  அவதானத்திற்கு உரிய மட்டத்தில் 
இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை,
 இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா  ஆகிய மாவட்டங்களில்
 எச்சரிக்கை நிலையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 
அண்மைக்காலமாக இலங்கையில் மிதமிஞ்சிய வெப்பநிலை நிலவி வருகிறது. குறிப்பாக இந்த வெப்பநிலையானது வடக்கு, கிழக்கு, மற்றும் மேல் மாகாணங்களை அதிகளவில் பாதித்துள்ளது. 
இந்நிலையில் இந்த காலப்பகுதியில் இடம்பெறும் இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதேபோல் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பும்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி 
வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவிலான தண்ணீர் பருகுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் வெளியில் செல்பவர்கள் சன்ஸ்கிரீன் போன்ற க்ரீம்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுகிறது. மேலும் தண்ணீர் அதிகளவில் உள்ள உணவு, பானங்களை எடுத்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உச்சம் தொடும் வெப்பநிலை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

திங்கள், 18 மார்ச், 2024

இலங்கையில்  நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள்
 எச்சரித்துள்ளனர்.  
இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை தவிர்த்துக்கொள்ள முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர மேற்படி 
அறிவுறுத்தியுள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு 
தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 
தீவிரமடைந்துள்ளது. 
ஆகவே சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில்வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை.18-03-2024. நாளை கவனத்திற்குரிய மட்டத்திற்கு 
மேலும் அதிகரிக்கும்.  
இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா 
மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் 
தெரிவித்துள்ளது.  
இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளியில் கடுமையான நடவடிக்கைகளை 
மேற்கொள்ளுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வடக்கு, கிழக்கு பகுதிவாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

சனி, 16 மார்ச், 2024

தற்போது  இலங்கையில் நிலவிவரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் தோலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு தோல் எரியும் தன்மையை இங்கு காணலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை ஏற்படுவதாக வைத்தியர்கள்
 குறிப்பிட்டுள்ளனர்.
கூடுதலாக, தற்போதுள்ள தோல் ஒவ்வாமை அதிகரிப்பு வெப்பமான காலநிலையால்  ஏற்படலாம் என்று நிபுணர்கள் 
சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக இளம் பிள்ளைகள் இந்த நோயினால்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயம் என்றும் தோல் நோய் நிபுணர் டாக்டர் இந்திரா கஹவிட்ட தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தோல் நோய் இலங்கையர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

வெள்ளி, 15 மார்ச், 2024

 நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் 15-03-2024.இன்று வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை 
அவதானமாக 
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை
 அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை 
ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
 மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை காணப்படும்

நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

வியாழன், 14 மார்ச், 2024

யாழ் வலி வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன் , வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்கின்றனர். 
கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 67 ஏக்கர் காணி அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள 
கையளிக்கப்பட்டது . 
விடுவிக்கப்பட்ட தமது காணிகளுக்குள் உடனே சென்று மீள் குடியேற முடியாத நிலையில் காணி உரிமையாளர்கள் சில நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதனால் , விடுவிக்கப்பட்ட தமது காணிகள் , வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு திரும்புகின்றனர். 
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் காணிகள்  வீடுகளில் யாரும் இல்லாத நிலைமையை பயன்படுத்தி , திருடர்கள் அப்பகுதிகளுக்குள் புகுந்து , பயன்தரு மரங்களை வெட்டுவதுடன் , வீட்டில் காணப்படும் ஜன்னல் , கதவுகளின் நிலைகள் , இரும்புக்கம்பிகள் உள்ளிட்டவற்றை 
களவாடி செல்கின்றனர். 
கதவுகள் ஜன்னல் நிலைகளை களவாடும் போது , வீடுகளையும் சேதமாக்குகின்றனர். 
திருடர்களிடம் இருந்து தமது வீடுகளையும் , காணிகளுக்குள் உள்ள பொருட்களையும் ஒரு சில வாரங்களுக்கு பாதுகாத்து தருமாறு இராணுவத்தினர் மற்றும் பொலிசாரிடம் தாம் கோரிய 
போதிலும் , அவர்கள் திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பின்னடிப்பதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வலி.வடக்கில் விடுக்கப்பட்ட காணிகளுக்குள் திருட்டுக்கள் அதிகரிப்பு

துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

புதன், 13 மார்ச், 2024

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான 
மக்கள் பிரேசிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு
 பயணம் செய்கின்றனர். 
அங்கிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது கையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் பேருந்தில் ஏறியுள்ளார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை துப்பாக்கி 
முனையில் மிரட்டி பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். 
அந்த பேருந்தில் குழந்தைகள், முதியவர்கள் உள்பட பலர் இருந்துள்ளனர். அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது.
 இதனிடையே துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் பேருந்து நிலையம் முழுவதும் மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு 
ஓடத் தொடங்கினர். 
இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து, பயணிகளை பிடித்து வைத்திருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர் பேருந்தில் இருந்த பயணிகளை விடுவித்து போலீசிடம் சரணடைந்தார். 
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் சிக்கியிருந்த 17 பேரை
 போலீசார் பத்திரமாக மீட்டனர்.
 காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - துப்பாக்கி முனையில் மிரட்டி பிரேசிலில் கடத்தப்பட்ட பேருந்து

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது

செவ்வாய், 12 மார்ச், 2024

கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​பிரிட்டிஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா
 தடுப்பூசியையும், புரத அடிப்படையிலான நோவாக்ஸ் கோவிட் தடுப்பூசியையும் தயாரித்த இந்தியாவின் புனேவில் உள்ள
 சீரம் இன்ஸ்டிட்யூட்.12-03-2024. இன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது. 
இப்போது அவர்கள் கோவிட் தடுப்பூசிகளைத் தாண்டி மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளனர்.  
அடுத்த சில ஆண்டுகளில் மலேரியா மற்றும் டெங்கு நோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் ஆராய்ச்சியை
 சீரம் இன்ஸ்டிட்யூட் தொடங்கியுள்ளது என்று 
சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். 
புதிய தடுப்பூசிகள் தயாரிப்பில் சீரம் இன்ஸ்டிடியூட் கவனம் செலுத்துவதற்கு மற்றொரு காரணம், தேவை குறைந்ததால் கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைக்க வேண்டியதாயிற்று. 
மேலும் நோய்களுக்கான புதிய தடுப்பூசிகளை தயாரிப்பதன் மூலம், சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசி உற்பத்தி சுமார் 2 1/2 பில்லியன் 
அதிகரிக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி
 பூனாவல்லா கூறுகிறார். 
கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​சீரம் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை
 செலவிட்டது. சீரம் தற்போது ஆண்டுதோறும் சுமார் 1.5 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளை விற்பனை செய்கிறது. அதன் உற்பத்தி திறன் சுமார் 4 பில்லியன் அளவுகள். என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறியுள்ளது

நாட்டில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிப்பு

திங்கள், 11 மார்ச், 2024

நாட்டில்  காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
கடந்த சீசனில் பெருமளவு அதிகரித்திருந்த கேரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை தற்போது கிலோவொன்று500 ரூபாய்க்கும் 
குறைவாக உள்ளது. 
காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிப்பு

நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஞாயிறு, 10 மார்ச், 2024

நாட்டில் நாவலப்பிட்டி மற்றும் இகுரு ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று வீழ்ந்ததால் 
மலையகப் பாதையில் புகையிரத சேவைக்கு 
இடையூறு ஏற்பட்டுள்ளது.  
குறித்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
அதன்படி, மேட்டுப்பாதையில் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

சனி, 9 மார்ச், 2024

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு 
கைவல்யா என்ற பெண் குழந்தை 
பிறந்துள்ளது. இந்த 
குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தனது குழந்தையின் திறமையை வெளி உலகத்திற்குக் கொண்டு வர நினைத்த ஹேமா, தன் குழந்தை அடையாளம் காணும் பொருட்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். 
மேலும், அந்த வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி 
வைத்துள்ளார்.
குழந்தையின் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யா உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு 
செய்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம், 4 மாத குழந்தையான கைவல்யா உலக சாதனை படைத்து 
பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சாதனைக்கு 
பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதில் உலக சாதனை படைத்த நான்கு மாதக் குழந்தை

நாட்டில் கொழும்பு,யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்

வெள்ளி, 8 மார்ச், 2024

நாட்டில் கொழும்பில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி08-03-2024.
 இன்று கொழும்பின் காற்று மாசு 158 ஆக பதிவாகியுள்ளது. மேலும் அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 
பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கொழும்பு,யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்

வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு

வியாழன், 7 மார்ச், 2024

 தங்கத்தின் விலை உலக சந்தையில் வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது.
நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக 
பதிவாகியுள்ளது. பின்னர் அந்த விலை 2,130 டொலராக
 நிர்ணயிக்கப்பட்டது. 
கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களுடன் ஒப்பிடம் போது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் 
அதிகரித்துள்ளது.
ஓராண்டன் ஒப்பிடும் போது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 315 டொர்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக புவிசார் அரசியல் தீவிரநிலை தங்கத்தின் விலையில் இந்த வியத்தகு உயர்வுக்கு 
பங்களித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இந்த வகையான ஏற்ற இறக்கம் இருக்கும்போது தங்கத்தை சேமித்து வைக்க எதிர்பார்கின்றன. மேலும், ஆசிய சந்தைகளில் தங்கப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளமையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகும். 
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அல்லது மத்திய வங்கியின் வட்டி விகிதம், தங்கத்தின் விலையை உயர் மட்டத்தில் பராமரிக்க ஒரு 
முக்கிய காரணியாகும். 
 இந்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 2,300 டொலராக உயரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு