நாட்டில் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

திங்கள், 18 மார்ச், 2024

இலங்கையில்  நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள்
 எச்சரித்துள்ளனர்.  
இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை தவிர்த்துக்கொள்ள முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர மேற்படி 
அறிவுறுத்தியுள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு 
தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் 
தீவிரமடைந்துள்ளது. 
ஆகவே சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக