நாட்டில் தலைதூக்கும் கொரோனா.தற்போது கிடைத்த விசேட செய்தி

சனி, 31 டிசம்பர், 2022

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
 30-12-2022.அன்று  நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறு கோரிக்கை.உலகின் பல நாடுகளில், 
குறிப்பாக சீனா,
இந்தியா மற்றும் பல நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாங்கள் அறிவோம். அந்தச் சூழ்நிலையில், இந்த நோயைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் விழிப்புடன் இருப்பது நமக்கு முக்கியமானதாகிவிட்டது.
கோவிட்-19 நோய் தற்போது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தோன்றவில்லை என்றாலும், அது முடிவுக்கு வராததால் நாட்டில் மீண்டும் தலைதூக்கும் அபாயங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக இதுவரை பின்பற்றப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் தலைதூக்கும் கொரோனா.தற்போது கிடைத்த விசேட செய்தி

நாட்டில் 2023.ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவை கட்டணங்கள் திருத்தம்

வெள்ளி, 30 டிசம்பர், 2022

நாட்டில் நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, வெளிவிவகார அமைச்சின் பிரதான தூதரக அலுவலகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் உள்ளூர் அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் ஆவணங்கள்/சான்றிதழ்கள் சரிபார்ப்பு தொடர்பான கட்டணங்களை எதிர்வரும்.2023. ஜனவரி முதலாம் திகதி முதல் திருத்தியமைக்க நடவடிக்கை 
எடுத்துள்ளன.
அதன்படி,கொழும்பில்  உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை தூதரக அலுவலகம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் 
ஆவணங்கள்/சான்றிதழ்களின் சரிபார்ப்பு தொடர்பான சமீபத்திய கட்டண திருத்தங்கள் பின்வருமாறு.
தூதரக கட்டணம் (ரூ.)
1. பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்- 800.00 

2. ஒரு வெளிநாட்டு குடிமகனுக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த ஆவணமும் - 3000.00
3. எந்த ஏற்றுமதி ஆவணமும் - 8000.00
4. வேறு எந்த ஆவணமும் - 1200.00


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் 2023.ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவை கட்டணங்கள் திருத்தம்

நாட்டிலுள்ள மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வியாழன், 29 டிசம்பர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்சார் உணவுகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன
.இந்நிலையில் வாடிகையாளர்களுக்கு சலுகை 
விலையில் மீனை வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
மெகா ஸ்டார் என்ற சந்தை வலயமைப்பு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இதன் முதலாவது கிளை மினுவாங்கொட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர் பியல் நிஷாந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை லாபமீட்டும் நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்றும் 
வலியுறுத்தினார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டிலுள்ள மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நாட்டில் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

புதன், 28 டிசம்பர், 2022

நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 
எச்சரித்துள்ளது.
கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்துக்கு 
இடம்பெயர தயாராக இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

நாட்டில் பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டுமாம் அமைச்சர்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர
 தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக 
அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டுமாம் அமைச்சர்

நாட்டில் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்துபெண் ஒருவர்

திங்கள், 26 டிசம்பர், 2022

இலங்கையில் கேக் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் கற்ற பெண் ஒருவர் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை 
ஈர்த்துள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண்ணான ஷெஹ்னி கோஷிலா, கண்டிய மணப்பெண் வடிவில் பாரிய கேக்கினை முழுமையான நிர்மாணித்து 
சாதித்துள்ளார்.
இது தொடர்பில் ஷெஹ்னி கோஷிலா கருத்து வெளியிடுகையில்,
“கேக் கலை துறைக்கு வந்த பிறகு 3 வருடமாக இவ்வாறான கேக் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எனது கனவாகும். 
கண்டிய மணப்பெண்கள் நம் நாட்டில் மட்டுமே வடிவமைப்பு ​​செய்யப்படுவார்கள், இதை இப்படியாவது உலகுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
இதுவரை இந்த வடிவில் கேக் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் படித்த படிப்பின் முடிவில் எனது வடிவமைப்பை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இது ஒரு மாதிரி மட்டுமே, உணவுக்காக அல்ல என்பதால் இப்படி வடிவமைப்பு செய்ய நினைத்தேன். எல்லாவற்றையும் முடிந்தவரை யதார்த்தமாக உருவாக்க விரும்பினேன்.
15 நாட்கள் கடின உழைப்பில் முகம், கண், வாய், நகை முடி எப்படி இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது.. இது ஒரு நவீன கண்டிய மணமகள், அவருக்காக நான் ஒரு பாரம்பரிய புடவையை வடிவமைத்தேன்.
இந்த நகைகள் பாரம்பரிய மற்றும் நவீன இரண்டின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் புடவை ஒரு மார்பளவு தெரியும் வகையில் மூடப்பட்டிருக்கும்.
முழுமையாக வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன். எனக்கும் எனக்கு கற்பித்தவரும் இந்த செயற்பாடு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்” என  தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்துபெண் ஒருவர்

நாட்டில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும்

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 மில்லிமீற்றர் அளவில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும்

நாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

சனி, 24 டிசம்பர், 2022

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா  திட்டத்தில் மகிழங்காடு
 கிளிநொச்சியில் வரும் 27.12.2022 காலை 9.00 மணியிலிருந்து மரநடுகை ஆரம்பமாக இருக்கிறது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

நட்டில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

வெள்ளி, 23 டிசம்பர், 2022

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு.23-12-2022. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 185.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)
• பருப்பு – ஒரு கிலோவுக்கு 374.00 ரூபா (11.00 ரூபா குறைக்கப்பட்டது)
• டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)
• மிளகாய் – ஒரு கிலோவுக்கு 1,780.00 ரூபா (15.00 ரூபா குறைக்கப்பட்டது)
• நெத்தலி – ஒரு கிலோவுக்கு 1,100.00 ரூபா (50.00 ரூபா 
குறைக்கப்பட்டது)
• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு 218.00 ரூபா (6.00 ரூபா குறைக்கப்பட்டது)
• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 285.00 ரூபா (5.00 ரூபா 
குறைக்கப்பட்டது)

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நட்டில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

மீண்டும் இலங்கையினை நோக்கி வருகிறது சூறாவளி..வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வியாழன், 22 டிசம்பர், 2022

காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.இதற்கமைய தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்றையதினம் வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை
எனவும் இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டளவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல்,மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த 
காற்றும்வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - மீண்டும் இலங்கையினை நோக்கி வருகிறது சூறாவளி..வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் விவசாய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.அடுத்தவாரம் முதல் இருபதாயிரம் ரூபா

புதன், 21 டிசம்பர், 2022

8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில்
 ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இந்த நிதி 
வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி
 செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.இதேவேளை ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது
மேலும், அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் இந்த பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் விவசாய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.அடுத்தவாரம் முதல் இருபதாயிரம் ரூபா

இலங்கையில் மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சகம்
 முடிவு செய்துள்ளது.
சுற்றுலாத்துறைக்கு தேவையான ஆற்றல் பானங்கள், CCTV கமரா அமைப்பு உபகரணங்கள், தளபாடங்கள் உற்பத்திக்கு தேவையான மெல்லிய பலகைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் அடங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
 தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் பொருட்களால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வசதிகள் கிடைக்குமா என்பது குறித்து ஆராயவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

திங்கள், 19 டிசம்பர், 2022

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக 
நடத்தப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர்
 தெரிவித்துள்ளார்.
இது தவிர மேலும் 6000 கல்வி பீடத்தில் பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - இலங்கையில் புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கும் படகு

சனி, 17 டிசம்பர், 2022

இரண்டாம் யாழ் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்பகுதியில் 100 ற்கும் மேற்பட்ட மக்களுடன் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கட்டைக்காட்டு கடற்பரப்பிலிந்து 5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு கரை ஒதுங்கி வந்த நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு
 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த படகிலிருந்தவர்களை மீட்க்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை குறித்த படகில் அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் சிறிலங்கா கடற்படை 
தெரிவித்துள்ளது.
அத்துடன் படகிலுள்ள மக்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கும் படகு

நாட்டில் நுளம்புகளை விரட்ட இரசாயனமற்ற, இயற்கை முறைகள்

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மழைக்காலம் என்றால் வீடுகளுக்குள் நுளம்புகளின் படையெடுப்பு வந்துவிடும். நுளம்புளை விரட்டுவதற்கு பெரும்பாலானோர் நுளம்பு சுருள், நுளம்பு விரட்டி ஸ்பிரே, நுளம்பு விரட்டி திரவங்கள் ஆகியவற்றை 
பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் பெரும்பாலானவை அதிக செறிவு கொண்ட இரசாயனங்கள். இவை மனித சுவாசத்திற்கு ஆரோக்கியமற்றதாக 
காணப்படும்.
மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்களை பரப்பும் நுளம்புகள் கடிப்பதை தவிர்க்க எளிய வழிமுறைகள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
ஜன்னலை மூடுங்கள்
நுளம்புகள் வீட்டுக்குள் நுழைவதை தடுப்பதன் மூலம் இவைகளை தடுக்கலாம்.  ஜன்னல் கதவுகளில் நுளம்பு வலைகளை பொருத்துவது சிறப்பானது. நுளம்பு வலை இல்லாவிட்டால்  மாலையில் சூரியன் மறைந்ததும் எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் இறுக்கமாக மூடிவிடவேண்டும்.  மாலை நேரத்திற்கு பிறகு நுளம்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். மற்ற வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் வீட்டுக்குள் சர்வ சாதாரணமாக ஊடுருவி தொந்தரவு செய்யும்.

கொசு விரட்டி செடிகளை வளருங்கள்
வீட்டிற்குள் நுளம்புகள் நுழைவதை தடுப்பதற்கு செடி வளர்ப்பும் உதவும். சில செடிகளின் வாசம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. சாமந்தி, துளசி, சிட்ரோனெல்லா, புதினா, லெமன் கிராஸ், ரோஸ்மேரி, லாவண்டர் போன்ற செடி வகைகள் நுளம்புகளை விரட்டும் தன்மை கொண்டவை. சில செடி வகைகள் கொசுக்களை மட்டுமின்றி சில பூச்சி இனங்களையும் விரட்டக்கூடியவை.

பூண்டு சாறு உபயோகியுங்கள்
இரசாயனம் நிறைந்த ஸ்பிரே இல்லாவிட்டால் பூண்டுவை மாற்றுப் பொருளாக தேர்ந்தெடுக்கலாம். பூண்டுவை தோல் நீக்கி சில பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். ஓரளவு சூடு ஆறிய பிறகு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டின் அறை முழுவதும் ஸ்பிரே செய்யவும். பூண்டின் வாசம் கடுமையாக இருக்கும். அது நுளம்புகளை நெருங்க விடாது.
நுளம்பு உற்பத்தியை கட்டுப்படுத்துங்கள்
வீட்டிற்குள் எங்காவது நுளம்புகள் பெருகுவதற்கான சூழலை இல்லாது செய்வது மூலம் இவை பெருகுவதை தடுக்கலாம்.  ஏ.சி., குளிர்சாதனப் பெட்டியின் பின் பகுதியில் தேங்கும் தண்ணீரை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். அவை நுளம்புகள் உற்பத்தி செய்வதற்கான 
சூழலை உருவாக்கும்.
மேலும் வீட்டிற்குள் பழைய பொருட்களை அடுக்கி வைக்கும் அறை, மாடி, செடிகள் வளர்க்கும் இடம் போன்ற பகுதிகளில் நுளம்புகள் பெருக்கம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதால், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள வடிகால்களையும் மூடி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
எலுமிச்சை துண்டு – கிராம்பு பயன்படுத்துங்கள்
நுளம்புகளை விரட்டுவதற்கு எலுமிச்சை பழத்தையும், கிராம்பையும் உபயோகிக்கலாம். இவை இரண்டின் வாசனையும் கொசுக்களுக்கு பிடிக்காது. எலுமிச்சை பழத்தை இரு துண்டுகளாக வெட்டி அதனுள்
 கிராம்புகளை சொருகி வைத்தால் போதுமானது. அவற்றின் வாசம் காற்றில் கலந்து நுளம்புகளை விரட்டி யடித்துவிடும். இரண்டு எலுமிச்சை பழங்களை வெட்டி அதனுள் கிராம்பு சொருகி வீட்டின் ஒவ்வொரு அறைகளிலும் வைக்கலாம்.
சவர்க்கார நீரை உபயோகியுங்கள்
சவர்க்காரம் கலந்த நீரும் கொசு விரட்டியாக செயல்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அகன்ற பாத்திரத்தில் சவர்க்கார நீரை ஊற்றி வைக்க வேண்டும். அதற்கு பாத்திரம் துலக்க பயன்படுத்தும் 
சவர்காரம் அல்லது 
துணி துவைக்க உபயோகப்படுத்தும் திரவ சவர்காரத்தை 
 பயன்படுத்தலாம். தண்ணீரில் சிறிதளவு சோப்பை கரைத்தால் போதுமானது. அந்த சோப்பு தண்ணீர் கொசுக்களை எளிதில் ஈர்த்துவிடும். வேகமாக வந்து சோப்பு தண்ணீரின் மீது அமரும். பின்பு அதனால் பறக்க முடியாமல் நீரிலேயே சிக்கி மடிந்துவிடும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நாட்டில் நுளம்புகளை விரட்ட இரசாயனமற்ற, இயற்கை முறைகள்

நாட்டில் புதிய விலைக்கு உடன்படவில்லை: முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

வியாழன், 15 டிசம்பர், 2022

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முட்டைக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலையில் உடன்பட முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பிரசாந்த டி சில்வா மற்றும் கேமா ஸ்வர்ணதிபி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அது
 இடம்பெற்றுள்ளது.
அப்போது, ​​நேற்று கூடிய வாடிக்கையாளர் சேவை கவுன்சில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயம் செய்ய தீர்மானித்ததாக வாடிக்கையாளர் சேவை அதிகார சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது, ​​முட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா, இந்த விலைகளுக்கு தமது வாடிக்கையாளர்கள் உடன்படவில்லை என நீதிமன்றில்
 அறிவித்தார்.
வர்த்தமானி அறிவிப்பில் தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைகளை விட புதிய விலைகள் குறைந்துள்ளதாகவும் அதனை திருப்திப்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த மனுவை 
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறு
 கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
அத்துடன், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 
பிறப்பித்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் புதிய விலைக்கு உடன்படவில்லை: முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய பாதிப்பு

புதன், 14 டிசம்பர், 2022

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல 
நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காற்று மாசடைதல் காரணமாக குறிப்பாக கொழும்பு நகரில் வாழும், குறைந்த வருமானம்கொண்ட மற்றும் கூலித்தொழிலில் ஈடுபடுவர்களின் வாழ்வில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய பாதிப்பு

நாட்டில் திடீரென காலநிலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும் மாற்றம் சுவாச கோளாறுகளை கொண்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருகை தர ஆரம்பித்தன.இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற 
நிலையை எட்டியது.
இந்நிலையான தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் ஊடாக அறியமுடிகிறது.நாட்டின் முக்கிய நகரங்களின் காற்று தரச்சுட்டெண்ணின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி காற்று தரச்சுட்டெண், யாழ்ப்பாணத்தில் 97 ஆகவும்,தம்புள்ளையில் 86 ஆகவும், கம்பஹாவில் 82 ஆகவும், நீர்கொழும்பில் 78 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 72 ஆகவும், கொழும்பில் 70 ஆகவும், கண்டியில் 70 ஆகவும், இரத்தினபுரியில் 53 ஆகவும், நுவரெலியாவில் 29 ஆகவும் பதிவாகியுள்ளது
இதேவேளை 101 முதல் 150 வரையிலான காற்றுத் தரச்சுட்டெண், சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினருக்கு ஆரோக்கியமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 151-200 முழுவதுமாக 
ஆரோக்கியமற்றது என்றும் இதனால் முககவசத்தை அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் திடீரென காலநிலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

திங்கள், 12 டிசம்பர், 2022

ரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 
இதன்படி, பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.  
இதற்காக,  34,000 மெட்ரிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். 
மேலும், இன்று முதல் 90,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன், மற்றுமொரு எரிவாயு கப்பலொன்று நாளையதினம்  நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தலைவர் 
தொடர்ந்தும் கூறினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

நாட்டில் தரமற்ற கோதுமை மாவு குறித்து பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இலங்கை சந்தையில் கிடைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் பல இருப்புக்கள் தரமற்றவை என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் இந்த கோதுமை மாவை பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தி உணவு பொருட்களை தயாரிக்க முடியாது என அதன் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் பிரச்சினை காரணமாக 450 கிராம் எடையுள்ள ரொட்டி ரொட்டியை 190 ரூபாவிற்கு வழங்க முடியாதுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் தரமற்ற கோதுமை மாவு குறித்து பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

நாட்டில் குளிரா – மாசு பட்ட காற்றோ தெரியவில்லை கால் நடைகள் பல இறந்து விட்டது

சனி, 10 டிசம்பர், 2022

இலங்கையில் 09-12-2022.அன்று ஏற்பட்ட அசாதாரண குளிர் காரணமாக இல்லையேல் மாசுபட்ட காற்று காரணமாக பல கால் நடைகள் 
பல இடங்களில் இறந்துள்ளது. இதில் கிளிநொச்சியில் தான் 
பல கால்நடைகள் இறந்துள்ளதாக அறியப்படுகிறது இவற்றை விவசாயிகள், எடுத்து எரித்த காட்சிகள் நெஞ்சை உருக்குகிறது.
இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துள்ள இந்த மாசுபட்ட காற்றில் உள்ள தூசிகள் சூரிய ஒளியை தெறிப்படையச் செய்வதால் இலங்கையில் குளிர் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் குளிரா – மாசு பட்ட காற்றோ தெரியவில்லை கால் நடைகள் பல இறந்து விட்டது

நாட்டில் 41 இடங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக அறிவிப்பு

வெள்ளி, 9 டிசம்பர், 2022

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 
தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.
கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், கம்பஹா மாவட்டத்தில் 390 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, கொழும்பு பிராந்தியத்தில் 272 டெங்கு நோயாளர்கள் 
பதிவாகியுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
2021 இல் கண்டறியப்பட்ட 27,844 பேருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் உள்ள 41 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் 41 இடங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக அறிவிப்பு

யாழ் மக்களுக்கு எரிவாயுவின் விலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி. வெளியான அட்டவனை

வியாழன், 8 டிசம்பர், 2022

வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி இது 4,610 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் 4,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களுடன் பொருந்தக்கூடிய விலைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தையும் படியுங்கள். மாண்டஸ் சூறாவளி தொடர்பில் 
தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை காலை அதிதீவிர சூறாவளியாகவே மாண்டஸ் கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் சூறாவளியானது,சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - யாழ் மக்களுக்கு எரிவாயுவின் விலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி. வெளியான அட்டவனை