யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

புதன், 29 டிசம்பர், 2021

யாழில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்க இறக்குமதியும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - யாழில் தங்கப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.

இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

செவ்வாய், 28 டிசம்பர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.28-12-2021- இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்
 காணப்படுகின்றது.
மேற்படி பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

திங்கள், 27 டிசம்பர், 2021

இலங்கை எதிர்வரும் ஜனவரி மாதம் திட்டமிட்ட மின்வெட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளது என்றும், இது தொடர்பில் இலங்கை மின்சார சபை, அரசுக்கு எச்சரித்துள்ளது என்றும், தெரியவருகின்றது.அனல் மின் உற்பத்திக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மின் துண்டிப்பை தவிர்க்க முடியாது என்று மின்சார சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
அனல் மின் நிலையத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. டொலர் கையிருப்பு இல்லாமையால் தேவைப்படும் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது உள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்பார்க்கபட்டுள்ள எரிபொருள் ஆகியவை எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானது என்ற நிலையில், எரிபொருள் இறக்குமதியே தற்போதுள்ள வழி என்று தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இருப்புக்களைப் பேணுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஜனவரி மாதம் முதல் இலங்கை கடுமையாக மின் துண்டிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தி சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டில் கடும் மின்வெட்டு

நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மாவுக்கான தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மாவை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு நிலவுவதால், வங்கிகள் ஊடாக கடன் கடிதங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க, உள்நாட்டு பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு வெளியான செய்தி

வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

வியாழன், 16 டிசம்பர், 2021

யாழ்.வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி  இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தேவாலயத்திற்கு நேற்றய தினம் வருகைதந்திருந்த குடும்பம் ஒன்று அங்கேயே தங்கியிருந்த நிலையில்16-12-2021. இன்று வியாழன் அதிகாலை 5.30 மணியளவில்
தேவாலயத்தின் முகப்பு பகுதி திடீரென இடிந்து விழுந்திருக்கின்றது. இதன்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தசம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் 
சேதமடைந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





READ MORE - வடமராட்சியில் திடீரென இடிந்து விழுந்த தேவாலய முகப்பு இளைஞன் படுகாயம்

நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 6 டிசம்பர், 2021

இலங்கையில் 08-12-2021.எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை முழுமையாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதிக மின்சார கோரிக்கை இல்லாமையினால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என அதன் கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க (MR Ranatunga) தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

செவ்வாய், 30 நவம்பர், 2021

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில்.30.11.2021இன்று மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று 
ஏற்பட்டுள்ளது.வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் ரெகுலேட்டரின் துண்டுகளையேனும் காண முடியவில்லை மேலும் அதற்கான 
இறப்பர் குழாயும் 
முழுமையாக எரிந்துள்ளது.தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு 
சமையல் அறையில்
 இருந்த கேஸ் குக்கரை பற்றவைத்து விட்டு வீட்டினுல் இருந்த பொழுது பாரிய சத்தத்துடன் கேஸ் குக்கர் வெடித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - கொட்டகலை பத்தனையில் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்:

நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

திங்கள், 29 நவம்பர், 2021

ஹட்டன் – மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவமொன்று
 பதிவாகியுள்ளது.
இன்று காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றதாகக் குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாய் உடைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 
அறியமுடிந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மல்லியப்பூ சந்தியில் உணவகம் ஒன்றில் வெடித்தது எரிவாயு!

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சனி, 27 நவம்பர், 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் நீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும் , மாவட்டத்திற்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் 
விடுக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிவுவதால், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிவாயு விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் 
காத்து நிற்கின்றனர்.
அதோடு ஒருபக்கம் சடுதியாக அதிகரிக்கும் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, எரிவாயு தட்டுப்பாட்டினால் மின் அடுப்பு மற்றும் மண்ணெண்ணை அடுப்பு என்பவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் ரைஸ் குக்கர் மூலம் சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறப்படுகின்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் 
வைரலாகியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு அவலம் வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மீண்டும் தெரிவித்துள்ளார்.நேற்று (13) நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் முக்கிய தகவல்

கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்

செவ்வாய், 2 நவம்பர், 2021

வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி 
வருகின்றது.
அந்த வகையில், வவுனியாவில் கடும் மழை பெய்தது. மழை காரணமாக வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தின் நீர் வரத்து அதிகரித்த நிலையில் குளத்தில் காணப்பட்ட உமை காரணமாக குளத்தின் கட்டு கீழ் இறங்கி உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் இராணுவத்தினர், நகர சபையின் தீயணைப்பு பிரிவு, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து குளக்கட்டில் மண் பைகளை இட்டு குளம் உடைப்பெடுக்காமல் தடுக்கும் நடவடிக்கையை 
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குளம் உடைப்பெடுத்தால் அதன் கீழ் உள்ள 98 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிவடைவதுடன், பல குடிமனைகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும். உடைபெடுப்பதை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கடும் மழையால் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில்

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இலங்கையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை 
செய்யப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது.இதனையடுத்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, சந்தையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு 
காரணமாக அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டதோடு ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபா எனவும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபா எனவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது
எவ்வாறாயினும் குறித்த விலையை மீறி அதிக விலைகளில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி
 செய்வதற்கு 
நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதோச ஊடாக விற்பனை செய்யப்படுவதோடு, நுகர்வோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

வெள்ளி, 29 அக்டோபர், 2021

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என
 எதிர்பார்க்கப்படுகின்றது .
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். .
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

புதன், 27 அக்டோபர், 2021

தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த22-10-2021.அன்று இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது. 
திடீரென வானில் இருந்து கல் போன்ற ஒன்று பூமியில் 
விழுந்துள்ளது. விழுந்தவுடன் அவை நொருங்கியுள்ளதுடன், வெள்ளை நிறத்திலான தூள் போன்று 
காட்சியளித்துள்ளது.
இந்த சம்பவத்தை அவதானித்த குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாராருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.இரவு 7 மணியளவில் வானில் இருந்து கல் ஒன்று விழுவதனை சிறுவர்கள் இருவர் 
அவதானித்துள்ளதுடன் அதில் ஒரு பகுதியை எடுத்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளனர்.
அதனை கையில் பிடிக்கும் போது சூடாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதனை ஒரு பையில் போட்டு வைத்ததாகவும், பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பையில் இருந்த கல் போன்ற 
குறித்த பொருள் சிறிது நேரத்தில் தூள் போன்று 
மாறியுள்ளது.இதனை மழையின் போது வானில் இருந்த விழுந்த விண்கற்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் அதனை ஆராய்வதற்காக 
கொண்டு சென்றுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

செவ்வாய், 26 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.இதனால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இலங்கை முழுவதும்  சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.      
25-10-2021.நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்ப பாடசாலைகளுக்கு கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக 22-10-2021.அன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 அதனைத் தொடர்ந்து ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலை மாத்திரம் ஆரம்பிக்கப்படவுள்ளதா அல்லது சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா என்பது தொடர்பில் காணப்பட்ட தெளிவின்மைக்கு விளக்கமளிக்கும் போதே மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன மேற்கண்டவாறு தெரிவித்தார் 
 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 
இலங்கையில்  சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் கடந்த 21-10-2021. ஆம் திகதி 
ஆரம்பிக்கப்பட்டன. 
 அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவிற்கான கற்பித்தலை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதற்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக மாகாண ஆளுனர்கள் , மாகாண செயலாளர்கள் , மாகாண கல்வி பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் , அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். 
 நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசிரல் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது
 பதிலளித்த அவர் , 
 இந்த தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முறையாக கற்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்களுக்களின் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் அன்றி இந்த பரீட்சைகள் பிற்போடக்படக் கூடிய வாய்ப்புக்கள்
 அதிகமுள்ளன என்றார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

சனி, 23 அக்டோபர், 2021

ஆம் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் 
விற்று சம்பாதிப்பது.
ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.தற்போது உங்களிடம் சும்மா இருக்கும் 1 ரூபாய் நாணயம் கூட உங்களை கோடீஸ்வரராக்கும் 
வல்லமை கொண்டது.
எனினும், உங்களிடம் இருக்கும் 1 ரூபாய் நாணயம் சில கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் ஆன்லைனில் விற்பனை செய்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.உங்களை கோடீஸ்வரராக்கும் 1 ரூபாய் நாணயம் இந்த ஒரு ரூபாய் காசு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமாக 
இருக்க வேண்டும்.
மேலும் அதில் 1885ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அதை ஆன்லைனில் ஏலம் விட வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் 10 கோடி ரூபாய் வரை பெற முடியும்.நாணயங்களை எங்கே விற்க வேண்டும் இந்த நாணயத்தை நீங்கள் ஏலம் விடலாம் அதன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் ரூ .9 கோடியே 99 லட்சம் வரை பெற முடியும்.
அதே சமயம் இந்த நாணயத்தை நீங்கள் OLX, Indiamart உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் விற்பனை அல்லது ஏலத்துக்கு விட முடியும். பழைய அரிய நாணயங்களை சேகரிக்கும் ஏராளமானவர்கள் இவற்றை நல்ல விலைக்கு வாங்க தயாராக இருக்கின்றனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 அக்டோபர், 2021

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனியின் நிர்ணய விலையை  25 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

புதன், 20 அக்டோபர், 2021

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி கோரலானது இவ்வாண்டு குறையும் போதும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக 
தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி