கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

சனி, 25 மார்ச், 2023

வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை 
வந்தடைந்துள்ளது.
900 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த சொகுசு கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கொழும்பு 900 சுற்றுலா பயணிகளுடன் பிரம்மாண்ட சொகுசு கப்பல் வந்தடைந்துள்ளது

நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

வெள்ளி, 24 மார்ச், 2023

 

ஐரோப்பிய மக்கள் உட்பட வெளிநாட்டவர் அதிகமான பயன்படுத்தும்  கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கழிவு நீரிலும் மண்ணிலும் இந்த செயற்கை இரசாயனப் பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளன
இவ்வாறு நிலைத்திருக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்களைச் (Forever chemicals or PFAS) சுற்றுச் சூழலில் சேர்க்கின்ற மற்றொரு மனிதபாவனைப் பொருளை அறிவியலாளர்கள் அண்மையில் அடையாளம் 
கண்டுள்ளனர்.
அதுதான் கழிப்பறைக் காகிதம் (toilet paper) சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு மையங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதனை செய்துபார்த்ததில் அந்த நீரில் PFAS இரசாயனங்களின் செறிவைக் கழிப்பறைக் காகிதங்களே ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக ஜெர்மனி, வட அமெரிக்கா, லத்தீன் 
அமெரிக்கா, ஆபிரிக்கா. மேற்கு ஐரோப்பாப் பகுதிகளில் 
விற்பனையாகின்ற கழிப்பறைக் காகிதங்கள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய கழிப்பறைக் காகிதங்கள் மரக்கூழை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
அவ்வாறு மரத்தை மரக் கூழாக மாற்றும் தொழில்நுட்ப முறைமையில் (converting wood into pulp) இந்த நிலைத்திருக்கக் கூடிய இரசாயனப் பொருள்கள் (PFAS) அதிகம் சேர்க்கப்படுகின்றன. அவை இறுதியில் கழிப்பறைக் காகிதத்துடன் தண்ணீரில் கலந்து நிலத்தையும் சூழலையும் 
சென்றடைகின்றது.
மனித குலத்துக்கு ஆபத்தான இந்தத் தகவலைச் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்களுக்கான இதழ் (Environmental Science and Technology Letters journal) என்னும் சஞ்சிகை கடந்த புதன்க்கிழமை 
வெளியிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீங்கள் பயன்படுத்தும் கழிப்பறைக் காகிதத்தால் ஏற்படும் ஆபத்து: எச்சரிக்கை

நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

வியாழன், 23 மார்ச், 2023

தேவையான பொருட்கள்:
1 KG மீன் முள் இல்லாதது 
125 கிராம் இஞ்சி 
125 கிராம் பூண்டு 
60 கிராம் கடுகு
1 Tbsp தூள் 
1 Tbsp சர்க்கரை 
400 கிராம் வினிகர் 
2 Tbsp உப்பு 
1 1/2 Tbsp மிளகாய் தூள் 
60 கிராம் மிளகாய் வற்றல் 
35 கிராம் சீரகம் 
1/2 கிராம் கடலை எண்ணெய்
செய்முறை:
முதலில் நாம் வைத்திருக்கும் மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள முட்களை நீக்கி விட்டு ஒரு அங்குல துண்டுகளாக
 வெட்டிக் கொள்ளவும்.
அதன் பின் நாம் வெட்டி வைத்திருக்கும் மீனில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தடவி 1 மணி நேரம் நன்கு
 ஊர வைக்கவும்.
அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த மீன் துண்டுகளை நாம் பொறித்தெடுக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் 
கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதில் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மீன், பிரியும் 
வரை வதக்கவும்.
பின் வதக்கிய ஊறுகாயை ஈரப்பதம் இல்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான 
மீன் ஊறுகாய் தயார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

புதன், 22 மார்ச், 2023

இலங்கையில்  கட்டுப்பாட்டு விலையக் கருத்திற்கொள்ளாமல், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கே இவ்வாறு , 12 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதிக்க விதிக்க நீதிமன்றம்
 உத்தரவிட்டுள்ளது.
42 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள வெள்ளை முட்டையை, 52 ரூபாவுக்கு நான்கு வர்த்தகள் விற்பனை 
செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, போகுந்தர மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களே அதிக விலைக்கு முட்டையை விற்பனை
 செய்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கெஸ்பேவ நீதவான் முட்டை வியாபாரிகளுக்கு 12 இலட்சம் அபராதம் விதிப்பு

ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

செவ்வாய், 21 மார்ச், 2023

கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது.
பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது.
Professor’s Lake and Duncan Valley Foster South ஆகிய பகுதிகளில் இவ்வாறு பறவை காய்ச்சலுடனான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
பறவை காய்ச்சல் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் சாத்தியம் மிக குறைவு என தெரிவிக்கப்படுகிறது.¨
இந்த பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்கு தற்போதைக்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக டொரன்டோ மிருகக்காட்சி சாலையின் பறவைகள் காட்சி பிரிவு அண்மையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


READ MORE - ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல்

நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

திங்கள், 20 மார்ச், 2023

இலங்கையில் வாகன சாரதிகளில் தொண்ணூறு வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட கண் பார்வை நிபுணர் நரேஷ் பிரதான் 
தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளின் பார்வை குறித்து நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, பல சாரதிகளுக்கு தொலைநோக்கு மற்றும் கிட்டப்பார்வை, கண்புரை,குளுகோமா (கண் அழுத்தம்) போன்ற கண் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது தற்போதைய கறுப்பு வெள்ளை இலக்கத் தகடு பார்வைப் பரிசோதனை போதாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை மூலம் வாகன ஓட்டிகளின் நிறக்குருடு மற்றும் பக்க பார்வை குறைபாடுகளை கண்டறிய முடியாது என்றும், இந்த கண் குறைபாடுகளே பல போக்குவரத்து விபத்துகளுக்கு காரணம் என்றும் 
அவர் கூறினார்.
குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோன்றும் அதிக ஆபத்துள்ள குளுகோமாவால் பக்க பார்வை பலவீனம் மற்றும் நிற குருட்டுத்தன்மை ஏற்படுவதாக குறிப்பிட்ட நரேஷ் பிரதான், இந்த நோயினால் குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயமும் அதிகம் 
என்றும் கூறினார்.
எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது முழுமையான கண் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் வாகன விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி இலங்கையில் ஒவ்வொரு பத்து வினாடிகளுக்கும் ஒரு வாகன விபத்து
 இடம்பெறுவதாகவும், நாளொன்றுக்கு பத்து மரணமான வாகன விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் சிரேஷ்ட கண் மருத்துவ நிபுணர் 
மேலும் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் 90% சாரதிகளுக்கு கண் பிரச்சனைகள்: ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு விபத்து

நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு

ஞாயிறு, 19 மார்ச், 2023

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரம் பாரிய ஆபத்தில் இருந்து 
தப்பியுள்ளது.
திடீரென நேற்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று முன்தினம் மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரதம் நேற்று காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு 20 நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரத இயந்திர பகுதியில் 
தீ பிடித்துள்ளது.
இதை புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததை அடுத்து புகையிரதத்தை நிறுத்தி பாரிய விபத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி 
தெரிவித்தார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் 3 இலட்சம் லீற்றர் எரிபொருளுடன் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு

தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

சனி, 18 மார்ச், 2023

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தின் படிக்கட்டுக்களில் பெண் ஒருவரை தள்ளி விட்டு அவரது தொலைபேசி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் 13-03-2023.அன்று 
 திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் மெற்றோ நிலையத்தின் சுரங்கத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இளம் பெண் ஒருவரது தொலைபேசியை பறித்த திருடன் ஒருவன் அப்பெண்ணை படிக்கட்டில் தள்ளி விழுத்தியுள்ளான். படிக்கட்டில் உருண்டு விழுந்த அப்பெண், பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தலையிட்டு குறித்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் 
சேர்த்தனர்.
மேலும் திருடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளான். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

வெள்ளி, 17 மார்ச், 2023

நாகரீகம் வளர வளர புதுப்புது மின்னணு சாதங்கள் வந்துள்ளன. அதனால் உணவை சமைத்து உண்ணுதல் குறைவடைந்து வருகிறது. மொத்தமாக உணவை சமைத்து மீஞ்சுவதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு 
செய்தல் ஆகாது. 
அப்படிச் செய்வதனால் உணவு விஷமாகிவிடுகிறது. இன்றைய ஆரோக்கியம் பதிவில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
சோறு
நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு தான் சாதம். நாம் வடித்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. சோற்றை சூடுபடுத்துவதால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து அது விஷமாக மாறுகிறது. இதனால் குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுகிறது. 
முட்டை:
முட்டையில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இருந்தாலும் முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்துவதால் அது விஷமாக மாறுகிறது. இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உருளைக்கிழங்கு:
நாம் சமைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடுகின்றன. இதனால் உருளைக்கிழங்கில் நச்சுத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
கீரை: 
கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. நாம் கீரையை சூடுபடுத்தும் போது நைட்ரேட்ஸ் சத்துக்கள் நைட்ரைட்டாக மாறுகின்றன. இதனால் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கோழியிறைச்சி
பொதுவாக கோழி இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். அதேபோல சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரதச்சத்து அதிகரித்து விஷமாக மாறுகிறது. அதனால் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்:
பீட்ரூட்டையும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது. கீரை வகைகளைப் போலவே பீட்ரூட்டிலும் அதிகளவு நைட்ரேட்கள் உள்ளன. அதனால் பீட்ரூட்டை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறுகிறது.
எனவே நாம் முடிந்தளவு உணவை சமைத்து உண்ணுதலே சிறந்தது. எவ்வளவு நெருக்கடியானலும் அதனை தகுந்த விதத்தில் கையாண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுதல் உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா

டிக்டாக் செயலிகளை பிரிட்டன் அரசு அலுவலக தொலைபேசிகளில் பயன்படுத்த தடை

வியாழன், 16 மார்ச், 2023

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன. அதாவது, அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அந்த வரிசையில் பிரிட்டனிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு அலுவலக செல்போன்களில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 
இந்த தடை உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக பாராளுமன்றத்தில் மந்திரி ஆலிவர் டவ்டன் கூறினார். 
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள செயலிகளை மட்டுமே அரசு அலுவலக செல்போன்களில் பயன்படுத்த 
அனுமதிக்கப்படும்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - டிக்டாக் செயலிகளை பிரிட்டன் அரசு அலுவலக தொலைபேசிகளில் பயன்படுத்த தடை

நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

புதன், 15 மார்ச், 2023

நாம் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் ஸ்மார்ட் போன் பாவிப்பது வழக்கம். அது ஒரு புறம் இருக்க, எங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமையால் கணனிப்பாவனையின்றி வேலை செய்வோர் இல்லை என்றே கூறலாம்.
இப்படி நாம் இருப்பதனால் உடலில் உஷ்ணங்கள் ஏற்படுகிறது. இன்று  உடல் சூட்டின் விளைவாக உடலுக்கு ஏற்படுத்தப்படும் விளைவுகளையே நாம் பார்க்கப் போகிறோம்.
:உடல் சூடு காரணமாக
உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது பித்தப்பையில் பாதிப்புகள் ஏற்பட்டு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. 
உடலில்  சூடு அதிகரிக்கும் பொழுது கண்களில் எரிச்சல், வாய்ப்புண், தூக்கமின்மை, வயிற்று வலி, குமட்டல் இது போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுதே சரி 
செய்துகொள்வது நல்லது.
மேலும் உடல் சூடு இன்னும் அதிகமாக அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், சிறுநீரக தாரை எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் 
போன்றவை ஏற்படும்.
பெண்களில் மாதவிலக்கு நாட்களில் உடல் சூடு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது, இல்லையன்றால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள்:
உடலில் சூட்டை அதிகரிக்கும் புளிப்பு, உப்பு, காரம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிடும் பொழுது உடலில் அதிக அளவு உஷ்ணங்களும் 
ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி டீ, காபி, கருவாடு, புளித்த மோர்,வினிகர், ஊறுகாய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் 
சூடு ஏற்படுகிறது.
மது பழக்கம், புகை பழக்கம் போன்றவற்றாலும் உடலில் அதிக சூடுகள் ஏற்படுகிறது.
உடல் சூட்டை குறைக்க 
நம் உடலில் அதிகமாக சூடு ஏற்படும் பொழுது நீர் சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளான புடலங்காய், வெள்ளரிக்காய், வெண்பூசணி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி இளநீர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
கீரை வகைகளான மணத்தக்காளி கீரை, பொன்னாக்கண்ணி கீரை போன்றவை  உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் உள்ள உஷ்ணகளை கட்டுப்படுத்த உதவிக்கிறது.
உடல் சூட்டை தணிக்க சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தம்பழம் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.
உடல் முழுவது ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எனவே, இவற்றை நாம் நமது வேலைகளுடன் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் தோன்றும் உஷ்ணத்தை குறைத்து 
ஆரோக்கியமாக வாழலாம்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நீங்கள் கணனி, போன் பாவிப்பதனால் உண்டாகும் உடற் சூட்டை தணித்து பாதுகாக்க வேண்டியவை

நாட்டி பூரணை நாட்களில் நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யும் யோசனையை

செவ்வாய், 14 மார்ச், 2023

பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும்
 குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.மேலும் பூரணை நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை என்று அவர் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மதுபானசாலைகளை 24 மணி நேரமும் 
திறக்க வேண்டும் என்று முன்னர் அவர் தெரிவித்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டி பூரணை நாட்களில் நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யும் யோசனையை

பீஜிங்கில் அண்மையில் திடீரென பெய்த புழு மழையால் பரபரப்பு

திங்கள், 13 மார்ச், 2023

சீனா தலைநகரமான பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ
 பரவி வருகிறது.
இந்நிலையில் புழுக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் செல்வதுடன் சாலையோரம் நிற்கவைக்கப்பட்டுள்ள கார்கள், வாகனங்களில் தண்ணீருடன் 
புழுக்களும் மிதக்கின்றன.
இந்த வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் 
குழப்பத்தில் உள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - பீஜிங்கில் அண்மையில் திடீரென பெய்த புழு மழையால் பரபரப்பு

யாழ் மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அடிக்கடி வீதிகளில் கொட்டிக் காணப்படும் மணல் மண்

ஞாயிறு, 12 மார்ச், 2023

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் கடந்த சில நாட்களாக குடத்தனை சந்திக்கும் வல்லிபுரம் மாவடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் மணல் மண் இரவு வேளைகளில்  
வீதியில் கொட்டப்பட்டு காணப்படுவதால் விபத்துக்கள்
 ஏற்பட்டுள்ளதுடன் இரவு நேர பயணிகள் பல அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்குள் இவாவாறு மூன்று தடவைகள் இடம் பெற்றுள்ளது.
இதில் ஒருநாள் மட்டும் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியில் கொட்டப்பட்டு காணப்பட்ட மணல் மண்ணை சேகரித்து   
தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதை அவதானிக்க முடந்தது. மிகுதி நாட்களில் வீதியில்  மணல் கொட்டப்பட்ட மறுநாள் இரவே காணாமல்
 போகின்றன.
இதேவேளை இது தொடர்பாக பொலீசாரை வினாவியபோது அவர்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது  என 
குறிப்பிடுகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அடிக்கடி வீதிகளில் கொட்டிக் காணப்படும் மணல் மண்

பெல்ஜியம் அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது

சனி, 11 மார்ச், 2023

இளைஞர்கள் இடையே பிரபலமான டிக்-டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் 
தடை விதித்தன. 
அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. 
அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பெல்ஜியம் அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது

நாட்டில் விமான டிக்கட்டுகளின் விலை நாளைமுதல் ஏற்படவுள்ள மாற்றம்

வெள்ளி, 10 மார்ச், 2023

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என
 அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் விமான டிக்கட்டுகளின் விலை நாளைமுதல் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வேகமாக சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை

வியாழன், 9 மார்ச், 2023

தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாகவும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.
இந்த ஆண்டின் அதிகபட்ச தங்க விலை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவாகி இருந்தது.
24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாகும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 178,500 ரூபாவாகும் பதிவாகி இருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இலங்கையில் வேகமாக சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை

நாட்டில் திடீர் திடீரென குறைக்கப்படும் பொருட்களின் விலை..புதிய விலைப்பட்டியல்

புதன், 8 மார்ச், 2023

நாட்டில் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும்
மொத்த விற்பனையாளர்கள் மேலும் கூறுகின்றனர்.இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளமையின் பயனை இந்நாட்டு நுகர்வோர் பெற்றுக்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் திடீர் திடீரென குறைக்கப்படும் பொருட்களின் விலை..புதிய விலைப்பட்டியல்

இலங்கையில் கட்டுப்பாட்டு விலைக்கு கட்டுப்படாத முட்டை

செவ்வாய், 7 மார்ச், 2023

நாட்டில் கட்டுப்பாட்டு விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படாததால் அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 46 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 
நிலையில், முட்டை விற்பனையாளர்கள் 54 ரூபா முதல் 65 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்து 
வருகின்றனர்.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதால் நாட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - இலங்கையில் கட்டுப்பாட்டு விலைக்கு கட்டுப்படாத முட்டை

நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும்:

திங்கள், 6 மார்ச், 2023

நாட்டில் பாண் பணிஸ்கள்  உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும்,     குறைந்தபட்சம் ஒரு இறாத்தல் பாண்  100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர்  என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்றும், பாண்  பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் 
என்றும் அவர் கூறினார்.
தற்போது ஒரு இராத்தல்  பாண்  150, 160, 170 எனவும் சில பகுதிகளில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த  ஜெயவர்தன, அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும் அதனால் தான் பாண்  பன்களின் விற்பனை 20 முதல் 25 வரை குறைந்துள்ளதாகவும் 
தெரிவித்தார்.  
மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பேக்கரி தொழிலை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு, 7000 பேக்கரிகளில் 5000 
மூடப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும்:

யாழ் விக்ரோறியா கல்லூரியில் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயதுப் பாட்டி

ஞாயிறு, 5 மார்ச், 2023

 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான  விக்ரோறியா கல்லூரியில்  03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று  இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டியில்  பழைய மாணவர்களிற்கான ஓட்டப் பந்தய நிகழ்வு இடம்பெற்றது.
அந்த  ஓட்டப்பந்தய நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தார்கள்.
ஆயினும் அதில் சிறப்பு யாதெனில் அந்த பழையமாணவர் ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த  75 வயதுடைய  புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு அதற்கான முதல் பரிசினை 
தட்டி சென்றுள்ளார்.
இவ்வாறாக இளம் பழைய மாணவிகளுடன் போட்டி போட்டு ஓடி தனது திறமையினையும், சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதனையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதி பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - யாழ் விக்ரோறியா கல்லூரியில் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயதுப் பாட்டி

நாட்டில் வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

சனி, 4 மார்ச், 2023

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது.அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் மக்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.இதற்கிடையில், வழக்கமான வைப்பு வசதி விகிதம் மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை உயர்த்தவும் மத்திய வங்கி முடிவு செய்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

துபாயில் 82 லட்சம் வாடகை பெறும் உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதி

வெள்ளி, 3 மார்ச், 2023

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகிறது. 
இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில்
 உலகின் உயரமான
 கட்டிடம் என கூறப்படும் புர்ஜ் கலீபாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது 'அட்லாண்டிஸ் தி ராயல்' என்ற நட்சத்திர விடுதியும் சேர்ந்துள்ளது. 
இந்த விடுதியின் நுழைவாயில் முதல் குளியல் அறையில் உள்ள சோப்பு வரை எல்லாமே உலகிலேயே விலை உயர்ந்தவை ஆகும். இந்த நட்சத்திர விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகையாக 1,000 டாலர் ( சுமார் ரூ.82 ஆயிரம்) முதல் 1 லட்சம் டாலர்( ரூ.82 லட்சம்) வரை
 வசூலிக்கப்படுகிறது. 
தற்போது இதுவே உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - துபாயில் 82 லட்சம் வாடகை பெறும் உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதி

தமிழ் சகோதரர்களுக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்

வியாழன், 2 மார்ச், 2023

லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர்.யோகராஜ் பொன்னுத்துரை, தவராஜா பொன்னுத்துரை மற்றும் அருள்வதனி உதயகுமார் ஆகிய சகோதர 
சகோதரிகளே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகையை வென்று உள்ளனர்.
பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டமை பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தவராஜா தெரிவிக்கின்றார்.உடனடியாக தனது சகோதரிக்கு இது தொடர்பில் அறிவித்த போதிலும் அவர் அதனை நம்பவில்லை என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு தம்மால் செயற்பட முடியவில்லை என அருள்வதனி தெரிவிக்கின்றார்.சகோதரர் பரிசு பற்றி அறிவித்த போது அழுது அதிர்ச்சியில் கீழே வீழ்ந்து விட்டதாக யோகராஜா தெரிவிக்கின்றார்.
புதிய கார் ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதாகவும் 
பிள்ளைகளுக்கு நிதி வழங்க உள்ளதாகவும், மகனின் கல்விக்கு ஒதுக்க உள்ளதாகவும் அருள்வதனி தெரிவிக்கின்றார்.வீடு மற்றும் கார் என்பனவற்றை கொள்வனவு செய்ய உள்ளதாகவும் பிள்ளைகளின் 
கல்விக்காக செலவிட உள்ளதாகவும் தவராஜா மற்றும் யோகராஜா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.இவ்வளவு பாரிய பரிசுத் தொகை வென்றெடுக்க முடியும் என தாம் நினைத்துப் பார்க்கவில்லை என தவராஜா
 தெரிவிக்கின்றார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - தமிழ் சகோதரர்களுக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்