நீங்கள் காரசாரமான மீன் ஊறுகாய் செய்வதற்கு Fish pickle) தேவையான பொருட்கள்:

வியாழன், 23 மார்ச், 2023

தேவையான பொருட்கள்:
1 KG மீன் முள் இல்லாதது 
125 கிராம் இஞ்சி 
125 கிராம் பூண்டு 
60 கிராம் கடுகு
1 Tbsp தூள் 
1 Tbsp சர்க்கரை 
400 கிராம் வினிகர் 
2 Tbsp உப்பு 
1 1/2 Tbsp மிளகாய் தூள் 
60 கிராம் மிளகாய் வற்றல் 
35 கிராம் சீரகம் 
1/2 கிராம் கடலை எண்ணெய்
செய்முறை:
முதலில் நாம் வைத்திருக்கும் மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள முட்களை நீக்கி விட்டு ஒரு அங்குல துண்டுகளாக
 வெட்டிக் கொள்ளவும்.
அதன் பின் நாம் வெட்டி வைத்திருக்கும் மீனில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தடவி 1 மணி நேரம் நன்கு
 ஊர வைக்கவும்.
அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த மீன் துண்டுகளை நாம் பொறித்தெடுக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் 
கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதில் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மீன், பிரியும் 
வரை வதக்கவும்.
பின் வதக்கிய ஊறுகாயை ஈரப்பதம் இல்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான 
மீன் ஊறுகாய் தயார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக