தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தில் ரயிலுக்காக நின்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்

சனி, 18 மார்ச், 2023

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெற்றோ சுரங்கத்தின் படிக்கட்டுக்களில் பெண் ஒருவரை தள்ளி விட்டு அவரது தொலைபேசி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் 13-03-2023.அன்று 
 திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் மெற்றோ நிலையத்தின் சுரங்கத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இளம் பெண் ஒருவரது தொலைபேசியை பறித்த திருடன் ஒருவன் அப்பெண்ணை படிக்கட்டில் தள்ளி விழுத்தியுள்ளான். படிக்கட்டில் உருண்டு விழுந்த அப்பெண், பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தலையிட்டு குறித்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் 
சேர்த்தனர்.
மேலும் திருடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளான். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக