அதிர்ச்சி பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் வட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு

திங்கள், 20 ஜனவரி, 2020

2020 பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வட்ஸ் ஆப் இயங்காது என்று வட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. வட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள்.வட்ஸ் ஆப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது வட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல 
ஸ்மார்ட்போன்களில் வட்ஸ் ஆப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு 
மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.சமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட 
ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் உங்கள் வட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.கணக்குகளை உருவாக்க முடியாது மேலும், இந்த
 அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ 
அல்லது பழைய  கணக்குகளை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ் ஆப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. அதேபோல் KaiOS 2.5.1 பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வட்ஸ் ஆப் சேவை 
தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றுமுதல் மேலே வழங்கப்பட்டுள்ள போன்களில் வட்ஸ் ஆப் சேவை செயல்படாது.வட்ஸ் ஆப்பிற்கான 
ஆதரவு ஆனது, ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கும் முடிவடையும் என்றும் வட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. சாஃப்ட்வேர் வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய ஓஎஸ் கொண்டு அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் பிப்ரவரி 1 க்குப் பிறகு வட்ஸ்அப்பைப் 
பயன்படுத்த முடியாது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அதிர்ச்சி பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் வட்ஸ் அப் நிறுவனத்தின் அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் கர்ப்பிணித் தாய்மாருக்கு ஓர் கவலையான செய்தி

சனி, 11 ஜனவரி, 2020

கர்ப்பிணி தாய்மாருக்கு கடந்த அரசாங்கம் மாதாந்தம் வழங்கி வந்த போசாக்கு பொதிகளை வழங்குவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கோப்சிட்டி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக சில கோப் சிட்டி வர்த்தக நிலையங்களில் அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த ஆலோசனைக்கு அமைய தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மீண்டும் போசாக்கு பொதிகளை வழங்கும் திகதியை தெரிவிக்க முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய சீருடைக்கான உறுதிச்சீட்டின் பெறுமதியும் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், இதுவரை 
வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் பெறுமதியான உறுதிச்சீட்டின் பெறுமதி 500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.சில தினங்களாக இது சம்பந்தமாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் இதற்கு தெளிவாக பதில் எதனையும் வெளியிடவில்லை 
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் கர்ப்பிணித் தாய்மாருக்கு ஓர் கவலையான செய்தி

அதிசய வாழை மட்டு நகரில் பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்

புதன், 8 ஜனவரி, 2020

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய் 
மாத்திரம் காய்த்துள்ளது.
ஓட்டமாவடி மஜ்மாநகர் முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்தில் அபுல்ஹசன் முஹம்மட் பஸீல் என்பவரது வீட்டுத் தோட்டத்தின் வாழைமரம் ஒன்றே, அதிசயமான முறையில் ஒரு வாழைக் காயுடன் மாத்திரம் காய்த்து காணப்படுகின்றது. இரு வாரத்துக்கு முன் வாழை மரத்தை பார்க்கும் போது சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்தது. அது தற்போது ஒரு வாழைக்காயுடன் காய்த்துள்ளது என்று வீட்டு உரிமையாளர் அபுல்ஹசன்
 முஹம்மட் பஸீல் தெரிவித்தார்.
கோழிக்கூடு வாழை வகையை கொண்ட அதிசய வாழைக் காயினைப் பார்வையிட முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்திற்கு பெருமளவிலான பொதுமக்கள் வருவதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - அதிசய வாழை மட்டு நகரில் பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்