ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய்
மாத்திரம் காய்த்துள்ளது.
ஓட்டமாவடி மஜ்மாநகர் முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்தில் அபுல்ஹசன் முஹம்மட் பஸீல் என்பவரது வீட்டுத் தோட்டத்தின் வாழைமரம் ஒன்றே, அதிசயமான முறையில் ஒரு வாழைக் காயுடன் மாத்திரம் காய்த்து காணப்படுகின்றது. இரு வாரத்துக்கு முன் வாழை மரத்தை பார்க்கும் போது சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்தது. அது தற்போது ஒரு வாழைக்காயுடன் காய்த்துள்ளது என்று வீட்டு உரிமையாளர் அபுல்ஹசன்
முஹம்மட் பஸீல் தெரிவித்தார்.
கோழிக்கூடு வாழை வகையை கொண்ட அதிசய வாழைக் காயினைப் பார்வையிட முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்திற்கு பெருமளவிலான பொதுமக்கள் வருவதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக