உணவுதட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் அபாயம்

திங்கள், 31 ஜூலை, 2023

இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
 இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை காரணமாக தற்போதுள்ள கையிருப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது.
 இதன்காரணமாக விலங்கு உணவுகளிற்கு அரிசியை பயன்படுத்துவதை தடை செய்ய அமைச்சு தெரிவித்துள்ளது.
 சீரற்ற காலநிலை காரணமாக நெல்விளைச்சல் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது தங்கள் வயல்களிற்கான போதிய நீர் இன்மையால் விவசாயிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
 குறிப்பாக உடவலவ நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
 உடவலவபகுதியில் 75000 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது இதில் 65000ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை
 இடம்பெறுகின்றது.
 யால பருவத்திற்கான அறுவடை விரைவில் இடம்பெறவுள்ள நிலையில் குறிப்பிட்டநெல்வயல்கள் போதிய நீரை பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - உணவுதட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் அபாயம்

நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும். வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சு கூறுகிறது.
அதற்குத் தேவையான தொகை 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஒரு முறை கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை 
தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதென தெரியவந்துள்ளது.
எனவே, 5 லட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போது மாதத்திற்கு எண்பத்தைந்தாயிரம் வகை ‘N’ அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

தேங்காய்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

சனி, 29 ஜூலை, 2023

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 
தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தென்னை பயிர் செய்கைக்கு தேவையான உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட  தென்னை ஆராய்ச்சி நிறுவன செய்தி தொடர்பாளர் ​​உரம் இல்லாததால் தென்னை மரங்களின் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், இனி உரமிடப்பட்டாலும், சரியாக அறுவடையை  பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  2019 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி,  தேங்காயின் வருடாந்த தேவை 4.9 பில்லியன்கள் எனவும், ஆனால் தற்போது 3.1 பில்லியன் தேங்காய்களே அறுவடை செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தேங்காய்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

இரண்டு பாடசாலைகளுக்கு மன்னார் மாவட்டத்தில் விற்றமின் மருந்து நன்கொடை

வெள்ளி, 28 ஜூலை, 2023


 

இலங்கையைச் சேர்ந்த நோர்வேயில் வசித்து வரும் வைத்திய கலாநிதியொருவரால் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம்
 பகுதியில் உள்ள இரண்டு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு விற்றமின் மருந்துகள் வழங்கி அவர்களது போசாக்கை மேம்படுத்த உதவியுள்ளார்.
 இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளார்.
 குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள குறித்த இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகளை வழங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் மடு வைத்திய அதிகாரிகள் வைத்தியர் டெனி மற்றும் ஞா.குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - இரண்டு பாடசாலைகளுக்கு மன்னார் மாவட்டத்தில் விற்றமின் மருந்து நன்கொடை

நீதிமன்றம் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

வியாழன், 27 ஜூலை, 2023

14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பயனாளர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை 
பிறப்பித்துள்ளது.
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் செயலி மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சரியான அறிவுறுத்தல்கள் இன்றி சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையத்தால் குறித்த வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டது.
மேலும் இந்த செயலி 271,000 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நீதிமன்றம் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

ஓக்லஹோமா குளத்தில் அமெரிக்காவில் பிடிப்பட்ட அரிய வகை மீன்

புதன், 26 ஜூலை, 2023

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஓக்லஹோமா குளத்தில் மீன்பிடிக்கும்போது மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட அரிய மீனைப் பிடித்துள்ளான். சார்லி கிளிண்டனின் அசாதாரண கண்டுபிடிப்பின் படங்கள்
 ஓக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் சமூக ஊடக கணக்குகளில் பகிரப்பட்டன.
இந்த மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இனங்களின் குழுவான பாகு குடும்பத்தைச் சேர்ந்தது, 
இது பிரன்ஹாக்களுடன் நெருங்கிய தொடர்புடையது. ஒரே மாதிரியான தோற்றம் காரணமாக அவை பெரும்பாலும் “சைவ பிரன்ஹாக்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன மற்றும் பொதுவாக வீட்டு மீன்வள உரிமையாளர்களுக்கு செல்லப்பிராணிகளாக விற்கப்படுகின்றன.
“சார்லி கிளிண்டன் என்ற இளம் மீன் பிடிப்பவர், வார இறுதியில் அருகிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார், அப்போது அவருக்கு அசாதாரணமான கடி ஏற்பட்டது” என்று இரண்டு படங்களுடன் 
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. ‘இந்த மீன்கள் பொதுவாக மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை, ஆனால் தேவையற்ற செல்லப்பிராணிகளை நீர்வழிகளில் கொட்டும் பழக்கம் பூர்வீக வனவிலங்குகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு தீங்கு விளைவிக்கும். 
பாக்கு 3.5 அடி மற்றும் 88 பவுண்டுகள் வரை அளவை எட்டும்,அவை ஒரு கவர்ச்சியான, ஆக்கிரமிப்பு இனங்கள், அவை நமது உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும்,” என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - ஓக்லஹோமா குளத்தில் அமெரிக்காவில் பிடிப்பட்ட அரிய வகை மீன்

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் அள்ளுப்பட்டு வந்த சாமி சிலைகளால் பரபரப்பு

செவ்வாய், 25 ஜூலை, 2023

 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதி ஆற்றங் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர்.
50ற்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகள்
ஆற்றில் கிடைக்கப்பெற்ற விஷ்ணு , சிவலிங்கம் , மற்றும் இரண்டு நந்தி சிலைகள் என்பவற்றை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல , சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதையின் கற்சிலை குவியல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு சென்ற தொல்லியல் நிபுணர்கள் 50ற்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகளை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இநிலையில் மீட்கப்பட்ட சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை எனஆய்வினை 
நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் ஆற்று வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா அல்லது மணலுக்குள் அடியில் இருந்த சாமி சிலைகள் மழை வெள்ளம் காரணமாக மேலே வந்ததா என விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
கோவில்களை இடிக்கும் போது சேதம் அடைந்த சாமி சிலைகளை கிருஷ்ணா நதியில் வீசி சென்றார்களா. அல்லது மழை வெள்ளத்தில் சாமி சிலைகள் அடித்து வரப்பட்டதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றன.
  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் அள்ளுப்பட்டு வந்த சாமி சிலைகளால் பரபரப்பு

எலான் மக்ஸ் ட்விட்டர் நீல பறவைக்கு பதிலாக எக்ஸ் லோகோவை வெளியிட்டார்

திங்கள், 24 ஜூலை, 2023

பிரபஞ்சம் பற்றி புரிந்து கொள்வதற்காக, புதிதாக எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என எலான் மஸ்க்  சமீபத்தில் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன், வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ருவிட்டரின் புதிய லோகோவை அவர் இன்று வெளியிட்டார். அந்த லோகோவில் கறுப்பு பின்னணி நிறத்தில் எக்ஸ் என்ற வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ருவிட்டரின் நீலப்பறவை மாற்றமடையவுள்ளது.
எலன் மாக்ஸ்  ருவிட்டர் பதிவில் லோகோ மாற்றப்பட்டு எக்ஸ்.கொம் (X.com) என்பதைச் சேர்த்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தின் கட்டிடத்தின் பக்கத்தில் புதிய X பிராண்டிங்கின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - எலான் மக்ஸ் ட்விட்டர் நீல பறவைக்கு பதிலாக எக்ஸ் லோகோவை வெளியிட்டார்

நாட்டுக்கு வரவுள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள்

ஞாயிறு, 23 ஜூலை, 2023

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் முதல் இரண்டு எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக குறிப்பிட்டுள்ளார்.
 அதன்படி, எரிபொருள் தாங்கிய இரண்டு கப்பல்களும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டுக்கு வரவுள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள்

நாட்டில் யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்

சனி, 22 ஜூலை, 2023

இலங்கையில் யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து 
அரசாங்கம்
 கவனம் செலுத்தி வருகிறது என இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளார்.
 யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு வைத்தியசாலை நிர்மாணத்துக்கு 
தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - நாட்டில் யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்

நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை குறைந்தது

வெள்ளி, 21 ஜூலை, 2023

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை .
21-07-2023.இன்று சற்று குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.44,880க்கு விற்கப்பட்டது, இன்று சவரன் ரூ.320 குறைந்து ரூ.44,560 க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,610க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.82.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.82-க்கு விற்கப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை குறைந்தது

போஷாக்கு உலருணவு கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

வியாழன், 20 ஜூலை, 2023

உலக உணவுத் திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களிற்கும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெராட் ரெபெல்லா அவர்களிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(20) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 11.30மணியளவில் இடம்பெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்கள் உள்வாங்கப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அதிதீவிர நிறைகுறைவுடைய இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கணவனை இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் 
தாய்மார்கள், குறைந்த பொருளாதார வசதியுடைய குடும்பங்கள் என்ற வகைகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொதிகளை 
வழங்கவுள்ளது.
இதன்போது, குறித்த திட்டம் தொடர்பாக அறிமுக உரையினைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உலக உணவு திட்டத்தின் உலக 
உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜெராட் ரெபெல்லா, உலக உணவுத் திட்ட அரச இணைப்பாளர் நியமத் முஸ்தபா, 
உலக உணவு திட்டம் அதிகாரிகள், நிகழ்ச்சி திட்ட உதவியாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், 
கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கரைச்சி பிரதேச 
செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ராஜ்வினோத், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - போஷாக்கு உலருணவு கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

நாட்டில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்

புதன், 19 ஜூலை, 2023

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக 
வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 குறித்த வைத்தியசாலையில் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற விசேட வைத்தியர்கள் கூட்டத்தில் மருத்துவமனையில் அந்த தடுப்பூசிகளின் 17 டோஸ்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மருத்துவமனையின் தேவைக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
 இதனால், உரிய தடுப்பூசிகள் கிடைக்காததால், சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்துவதுடன், சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களை, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

செவ்வாய், 18 ஜூலை, 2023

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சியின் விலை  ரூபாய் 1100 முதல் ரூபாய் 1200 வரையில் விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இஞ்சியின் விளைச்சல் குறைந்ததால் இஞ்சியின் விலை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான பயணிகள் அவதி

திங்கள், 17 ஜூலை, 2023

இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
 சுற்றுலா பயணிகள் தவிப்பு
இதன் காரணமாக பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறை காலத்தில் 
சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் 
சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இத்தாலியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்
ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் 
மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இத்தாலி போக்குவரத்து துறை மந்திரி கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கோரியுள்ளார்.  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
READ MORE - ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான பயணிகள் அவதி

இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை

ஞாயிறு, 16 ஜூலை, 2023

இலங்கை மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின்
 அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த
 மருந்துத் தொகை
 குறித்த தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்த 
ஜனாதிபதி, இந்த வலையமைப்பு செயற்பாட்டின் உடாக வைத்தியசாலைகளுக்கு இடையில் மருந்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் 14-07-2023.அன்று  வெள்ளிக்கிழமை
 இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை சட்டத்தின் (NMRA) திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு 
பணிப்புரை விடுத்தார்.
தற்போதுள்ள நடைமுறையின் கீழ் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் மறு-அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை 
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) செயல்முறை மூலம் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக நேரடியாக கொள்வனவு
 செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
2024 ஆம் ஆண்டு இறுதி வரை வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிக்கவும், விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் 
தேவைகளுக்கு ஏற்ப அது குறித்து தேவையான தீர்மானங்களை
 எடுப்பதற்கும் 
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உப குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்


தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவில் கல்வி கற்றாலும் தாதியர் பயிற்சியில் உள்வாங்கக் கூடிய வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களின் ஊழியர்களின் அலட்சியத்தால் இடம்பெற்றதாகக் கூறப்படும் அண்மைய சம்பவங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், உரிய நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்தல், வேறு நோக்கங்களுக்கு நிதியை பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிலுவைத் தொகை மற்றும் சேவை ஒப்பந்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நிதி வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு ஆவணங்களில் உரிய அதிகாரிகள் கையொப்பமிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க திறைசேரியின் பிரதிநிதி உள்ளடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை மருத்துவ சபையில் இதுவரை பதிவு செய்யப்படாத வைத்திய அதிகாரிகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் உரிய விதிமுறைகளை மீளாய்வு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு 
பணிப்புரை விடுத்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் 
செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா, திறைசேரியின் 
பிரதி செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் துறைசார் 
அரச நிறுவனங்களின் தலைவர்கள், சுகாதார சேவைகள் 
பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>                                                      


                 


READ MORE - இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை

உலக சுகாதார அமைப்பு செயற்கை இனிப்பு சுவைகள் குறித்து எச்சரிக்கை

சனி, 15 ஜூலை, 2023

1980ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு சுவைகளே புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் செயற்கை இனிப்புகள் குறித்து அபாயமான அறிவிப்பொன்றை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
 அஸ்பார்டேம் (aspartame) மனித உடலில் புற்றுநோய் 
செல்களை வளரச் செய்வதாகவும் கல்லீரல் தொடர்பான புற்றுநோய்கள் அதிகமாக வரலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக, இந்த செயற்கை இனிப்பு இனிப்பு பானங்கள் சூயிங் கம், ஜெலட்டின், ஐஸ்கிரீம், தயிர் போன்ற பால் பொருட்கள், காலை உணவு தானியங்கள், பற்பசை, இருமல் மருந்துகள், மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - உலக சுகாதார அமைப்பு செயற்கை இனிப்பு சுவைகள் குறித்து எச்சரிக்கை

ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் -3

வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:35 மணிக்கு 
விண்ணில் பாய்ந்தது.
40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23 ஆம் திகதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.
தாமதம் ஏற்பட்டால், செப்டம்பர் மாதம் தரையிறங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.
கடந்த ஜூலை 22, 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்தில் சந்திராயன் 2 இல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு 
மட்டுமே உள்ளது.
இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் -3

நாட்டில் புற்றுநோய், நீரிழிவால் அதிகளவு குழந்தைகள் பாதிப்பு

வியாழன், 13 ஜூலை, 2023

இலங்கையில் வருடந்தோறும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மேலும் குறைந்தது 100 குழந்தைகள் 
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
‘ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிவிக்கப்படாத இந்த புள்ளிவிவரங்களுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘நமது குழந்தைகளைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது, துரித உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் உடல் செயற்பாடுகளை அதிகரிப்பது முக்கியம்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் புற்றுநோய், நீரிழிவால் அதிகளவு குழந்தைகள் பாதிப்பு

குறைந்த விலையில் சிங்கப்பூரில் விற்கப்படும் செயற்கை இறைச்சி

புதன், 12 ஜூலை, 2023

சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சியைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, 
அதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக செய்தி
 வெளியாகியுள்ளது.
CREATE அமைப்பு அந்த திட்டங்களையும் நேற்று தொடங்கியது.பல நாடுகளையும் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் கூட்டாக ஆய்வில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்கு மாற்றாகத் தயாரிக்கப்படும் உணவு மேலும் சுவையாக இருப்பதோடு அதிகச் சத்துள்ளதாகவும் இருக்கும் என 
கூறப்படுகின்றது.
 புதிய தேசிய ஆய்வின்படி உற்பத்தியின்போது நுண்கிருமிகள் எளிதில் கண்டறியப்படும். அதனால் இறைச்சி வீணாவது குறைக்கப்படும். செலவு குறையும். மற்றொரு தேசிய ஆய்வு இயந்திரக் கருவிகளோடு சேர்ந்து செயல்படுவதை ஆராய்கிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - குறைந்த விலையில் சிங்கப்பூரில் விற்கப்படும் செயற்கை இறைச்சி

எகிப்தில் 4650 ஆண்டுகளுக்கு முன் பென்சிலின் பயன்படுத்தப்பட்டமை அறிவீர்களா

செவ்வாய், 11 ஜூலை, 2023

பழங்கால எகிப்தியர்கள் பூஞ்சைப் பிடித்த ரொட்டித் துண்டுகளைப் பிழிந்து சில காயங்களை ஆற்றப் பயன்படுத்தினர். அதற்கான காரணம் யாருக்கும் வெகு நாட்களாகப் புரியவில்லை.
 4650 ஆண்டுகளுக்கு பின்னர், 1928 ஆம் ஆண்டில் தான் அறிஞர் அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் பெனிசிலின் என்ற மருந்து பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியது என்று கண்டு பிடித்தார்.
 அழுகிய ரொட்டியின் மீது பெனிசிலியம் என்கிற பூஞ்சை படருகிறது. அதில் இருந்துதான் பெனிசிலியம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னரே ரொட்டித் துண்டுகளை வைத்து பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவம் பார்த்த எகிப்தியர்களை என்ன சொல்வது
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - எகிப்தில் 4650 ஆண்டுகளுக்கு முன் பென்சிலின் பயன்படுத்தப்பட்டமை அறிவீர்களா

தித்தெனிய பிரதேசத்தில் காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர் கைது

திங்கள், 10 ஜூலை, 2023

ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் 08.07.2023 அன்று சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் காரிலிருந்து சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பல்வத்தை பகுதியில் வைத்து கைது 
செய்யப்பட்டார்.
 சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்கும் இடத்தை சரிபார்க்குமாறு உரிமையாளரிடம் கூறிய நபர்ஈ காருடன் 
தப்பியோடிவிட்டார்.
 குறித்த நபர் காதலியின் பிறந்தநாளை ஆச்சரியப்படுத்தும் வகையில் காரை கடத்தியதாக பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கடுவெலஇ கீழ் பொமேரியாவைச் சேர்ந்தவராவார். ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - தித்தெனிய பிரதேசத்தில் காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர் கைது

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பி 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

ஞாயிறு, 9 ஜூலை, 2023

யாழ்  நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து 
மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  கடற்தொழிலாளர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - யாழ் நெடுந்தீவு கடற்பரப்பி 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நாட்டு மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை

சனி, 8 ஜூலை, 2023

நாட்டில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
"பெண்களை தாக்குவது மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டு மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை