பிரபஞ்சம் பற்றி புரிந்து கொள்வதற்காக, புதிதாக எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என எலான் மஸ்க் சமீபத்தில் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன், வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கு விரைவில் நாங்கள் விடை கொடுக்கலாம் எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ருவிட்டரின் புதிய லோகோவை அவர் இன்று வெளியிட்டார். அந்த லோகோவில் கறுப்பு பின்னணி நிறத்தில் எக்ஸ் என்ற வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ருவிட்டரின் நீலப்பறவை மாற்றமடையவுள்ளது.
எலன் மாக்ஸ் ருவிட்டர் பதிவில் லோகோ மாற்றப்பட்டு எக்ஸ்.கொம் (X.com) என்பதைச் சேர்த்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தின் கட்டிடத்தின் பக்கத்தில் புதிய X பிராண்டிங்கின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக