இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இலங்கையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை 
செய்யப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது.இதனையடுத்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, சந்தையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு 
காரணமாக அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டதோடு ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபா எனவும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபா எனவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது
எவ்வாறாயினும் குறித்த விலையை மீறி அதிக விலைகளில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி
 செய்வதற்கு 
நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதோச ஊடாக விற்பனை செய்யப்படுவதோடு, நுகர்வோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

வெள்ளி, 29 அக்டோபர், 2021

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என
 எதிர்பார்க்கப்படுகின்றது .
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். .
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்ப்பட இருக்கும் வானிலையில் பாரிய மாற்றம்

இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

புதன், 27 அக்டோபர், 2021

தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த22-10-2021.அன்று இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது. 
திடீரென வானில் இருந்து கல் போன்ற ஒன்று பூமியில் 
விழுந்துள்ளது. விழுந்தவுடன் அவை நொருங்கியுள்ளதுடன், வெள்ளை நிறத்திலான தூள் போன்று 
காட்சியளித்துள்ளது.
இந்த சம்பவத்தை அவதானித்த குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாராருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.இரவு 7 மணியளவில் வானில் இருந்து கல் ஒன்று விழுவதனை சிறுவர்கள் இருவர் 
அவதானித்துள்ளதுடன் அதில் ஒரு பகுதியை எடுத்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளனர்.
அதனை கையில் பிடிக்கும் போது சூடாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதனை ஒரு பையில் போட்டு வைத்ததாகவும், பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். பையில் இருந்த கல் போன்ற 
குறித்த பொருள் சிறிது நேரத்தில் தூள் போன்று 
மாறியுள்ளது.இதனை மழையின் போது வானில் இருந்த விழுந்த விண்கற்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற நிலையில் அதனை ஆராய்வதற்காக 
கொண்டு சென்றுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருளினால் ஏற்பட்ட பரபரப்பு

நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

செவ்வாய், 26 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.இதனால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - நாட்டில் காலநிலை தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய எச்சரிக்கை

கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - கேகாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இலங்கை முழுவதும்  சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.      
25-10-2021.நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்ப பாடசாலைகளுக்கு கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக 22-10-2021.அன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. 
 அதனைத் தொடர்ந்து ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலை மாத்திரம் ஆரம்பிக்கப்படவுள்ளதா அல்லது சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதா என்பது தொடர்பில் காணப்பட்ட தெளிவின்மைக்கு விளக்கமளிக்கும் போதே மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன மேற்கண்டவாறு தெரிவித்தார் 
 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 
இலங்கையில்  சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் கடந்த 21-10-2021. ஆம் திகதி 
ஆரம்பிக்கப்பட்டன. 
 அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவிற்கான கற்பித்தலை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 அதற்கமைய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக மாகாண ஆளுனர்கள் , மாகாண செயலாளர்கள் , மாகாண கல்வி பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் , அதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். 
 நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசிரல் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வினவிய போது
 பதிலளித்த அவர் , 
 இந்த தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக முறையாக கற்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்களுக்களின் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனவே ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் அன்றி இந்த பரீட்சைகள் பிற்போடக்படக் கூடிய வாய்ப்புக்கள்
 அதிகமுள்ளன என்றார். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

சனி, 23 அக்டோபர், 2021

ஆம் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த மாதிரியே பணம் சம்பாதிப்பதற்கு பல வழிமுறைகள் தற்போது வந்துள்ளது. இதில் ஒன்று தான் தன்னிடம் இருக்கும் அரியவகை நாணயங்களை லட்சங்களில் 
விற்று சம்பாதிப்பது.
ஆம் உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். எப்போதுமே அரிதான பழைய நாணயங்கள் ரூபாய் நோட்டுகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.தற்போது உங்களிடம் சும்மா இருக்கும் 1 ரூபாய் நாணயம் கூட உங்களை கோடீஸ்வரராக்கும் 
வல்லமை கொண்டது.
எனினும், உங்களிடம் இருக்கும் 1 ரூபாய் நாணயம் சில கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி இருந்தால் ஆன்லைனில் விற்பனை செய்து கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.உங்களை கோடீஸ்வரராக்கும் 1 ரூபாய் நாணயம் இந்த ஒரு ரூபாய் காசு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமாக 
இருக்க வேண்டும்.
மேலும் அதில் 1885ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அதை ஆன்லைனில் ஏலம் விட வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் 10 கோடி ரூபாய் வரை பெற முடியும்.நாணயங்களை எங்கே விற்க வேண்டும் இந்த நாணயத்தை நீங்கள் ஏலம் விடலாம் அதன் மூலம் ஆன்லைன் ஏலத்தில் ரூ .9 கோடியே 99 லட்சம் வரை பெற முடியும்.
அதே சமயம் இந்த நாணயத்தை நீங்கள் OLX, Indiamart உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் விற்பனை அல்லது ஏலத்துக்கு விட முடியும். பழைய அரிய நாணயங்களை சேகரிக்கும் ஏராளமானவர்கள் இவற்றை நல்ல விலைக்கு வாங்க தயாராக இருக்கின்றனர் என்பது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இந்த ஒரு ரூபா நாணயம் உங்களுடன் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தானம்

நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வியாழன், 21 அக்டோபர், 2021

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை உடனடியாக நீக்குமாறு நாட்டில் முன்னிலையிலுள்ள 10 சீனி இறக்குமதியாளர்கள் நீதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் விளக்கமளித்து கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனியின் நிர்ணய விலையை  25 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - நாட்டில் சீனியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

புதன், 20 அக்டோபர், 2021

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்று தொடர்பான இடையூறுகள் காரணமாக இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இந்த விடயத்தை உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் தங்கத்தின் கேள்வி கோரலானது இவ்வாண்டு குறையும் போதும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக 
தெரியவருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - உடன் முந்துங்கள் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு முக்கிய செய்தி

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

நாட்டில் நாளாந்தம் விலை அதிகரிப்பு என்ற செய்தியே தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்படி அண்மையில் சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை பெருமளவில் 
உயர்ந்திருந்தன.
அத்துடன் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படுமெனவும் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்தன.இந்தநிலையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் 
விலை மீண்டும்
அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர் விடாப்பிடியாக நிற்கிறார்.இவ்வாறு பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் மீண்டும்
 உயர்ந்துள்ளன.
அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை றோல்ஸ் 65 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பிறைட் ரைஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக 
அறியமுடிகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்.மீண்டும் சில உணவுகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

வியாழன், 14 அக்டோபர், 2021

இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள்.14-10-2021. இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.அதற்கமைய உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - நாட்டில் பால், முட்டையின் விலைகளையும் அதிகரிப்பு தொடர்பன தகவல்

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

செவ்வாய், 12 அக்டோபர், 2021

எரிபொருள் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது..11-10-2021.அன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடைவதாகவும், டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், எரிபொருட்களின்
 விலைகளை உயர்த்த
வேண்டுமெனவும் அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.எனினும் இன்று, நாளை எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதிரடி உத்தரவு.

நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

திங்கள், 11 அக்டோபர், 2021

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு விடப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா வின் விலை 1195 ரூபாயும் 400 கிராம் பால் மாவின் விலை 480 ரூபாய் என்ற புதிய விலையின் கீழ் இன்று சந்தையில்
வெளியிடப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ கிராமிற்கு 350 ரூபாய் அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை
 விடுத்திருந்தோம்.
எனினும் நாட்டு மக்களின் நலனை கருதி அவ்வளவு பெரிய தொகை அதிகரிக்க வேண்டாம் 250 ரூபாய் அதிகரிக்க அனுமதி வழங்குகின்றோம் என அமைச்சர் கூறியுள்ளார்.அமைச்சரின் கருத்திற்கு 
இணங்கி இந்த
விலையில் பால் மா அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று நாட்டிற்கு அவசியமான அளவு பால் மா நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது.அதற்கமைய எவ்வித தட்டுபாடுமின்றி இன்று முதல் பால் மா வழங்கப்படும் என உறுதியாக கூற முடியும் என பால் மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.



நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - நாட்டில் மீண்டும் கடைகளுக்கு வந்துவிட்டது பால்மா முண்டியடிக்கும் மக்கள்

நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்காக அமைச்சரின் அனுமதியை கோரியுள்ளதாகவும் விஜேயசிங்க 
குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்படுமாயின் பொது மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் விரைவில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என அறிவிப்பு

இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வியாழன், 7 அக்டோபர், 2021

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்.07-10-2021. இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த 
காற்றும் வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் 
அறிவுறுத்தப்படுகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

புதன், 6 அக்டோபர், 2021

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக மாற்ற தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட 
அமைச்சரவை பத்திரம்
வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு
 60 வயதாகவும் இந்த
சட்டம் முன்மொழியப்படவுள்ளது.இதேவேளை தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய வயது முன்பு 55ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இலங்கையை சுற்றிய குறைந்த அளவிலான வளிமண்டல குழப்ப நிலைக் காரணமாக இன்றும் நாளையும், இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மிமீக்கு மேல் கனமழையை எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கு மேல் பலத்த மழை
பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - நாட்டில் வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை