நாட்டில் நாளாந்தம் விலை அதிகரிப்பு என்ற செய்தியே தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்படி அண்மையில் சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை பெருமளவில்
உயர்ந்திருந்தன.
அத்துடன் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படுமெனவும் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்தன.இந்தநிலையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்
விலை மீண்டும்
அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர் விடாப்பிடியாக நிற்கிறார்.இவ்வாறு பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் மீண்டும்
உயர்ந்துள்ளன.
அதன்படி தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணிஸ் விலை 50 ரூபா என்றும், முட்டை றோல்ஸ் 65 ரூபாவாகவும் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பிறைட் ரைஸ் விலையும் 200 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக
அறியமுடிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக