யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

திங்கள், 28 அக்டோபர், 2019

யாழ் வல்லைப் பாலத்தில் .28,10.2019. அதிகாலை 
 கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .சம்பவத்தில் தெய்வாதீனமாக
 சாரதி பாய்ந்து உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 இது மழைக்காலம் என்பதால் வாகனங்கள் சறுக்கி தடம் புரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் சாரதிகளே வேகத்தை குறைத்து 
உங்கள் குடும்பம், அம்மா, அப்பா ,மனைவி, பிள்ளைகள் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் உங்கள் உயிரின் பெறுமதியை உணர்ந்தும் செயற்படுங்கள். இது மழைக் காலம். 
அவதானம் தேவை சாரதிகளே தயவு செய்து வாகனங்களின் வேகத்தை குறைத்து செலுத்துங்கள்.. பெறுமதியான உயிரைக் காப்பாற்றிக் 
கொள்ளுங்கள்..!

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் வல்லைப் பாலத்தில் தடம்புரண்ட கார்..மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

செவ்வாய், 22 அக்டோபர், 2019

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.பேஸ்புக் வலைத்தள பயன்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.யார் இந்த ஹிருஷி வர்ஷா?
கம்பஹா பகுதியில் ஆசிரியையாக 
கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.மாணவர்களை மிகவும் கன்னியமான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கல்விப் போதனையினாலும் அழகினாலும் இலங்கையர்களை கவர்ந்த சகோதர மொழி ஆசிரியை

பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை
 படைத்துள்ளார்.
 இந்நிலையில் தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சைவபிரகாசா மகளீர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், 
மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை பளுதூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய மாணவிக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை

நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு
 தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.
தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை பேஸ்புக் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - நாட்டில் சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி


வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் உழவியந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி குடைசாய்ந்தது.
இதன்போது கணவன் தூக்கிவீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அவசர அம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான கணவன் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் பெரியகட்டு பகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பெரியகட்டு பகுதியில் உழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி

இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

இலங்கையிலிருந்து கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்களிடம் வரி ஒன்றை 
அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக நிதி சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் பொருட்கள் கொள்வனவு மற்றும் சேவை பெற்றுக்கொள்வதற்காக க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் 
அனைவருக்கும் இந்த வரி அறிவிடப்படவுள்ளது.அதற்கமைய அட்டைகள் ஊடாக இலங்கையில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு நூற்றுக்கு 3.5 வீதம் வரி அறவிடப்படவுள்ளது.
பணத்தை இலங்கையில் இருந்து அனுப்பும் சந்தர்ப்பத்திலேயே வரிப்பணம் அறவீடு செய்யப்படவுள்ளது.வரி தொடர்பான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

READ MORE - இலங்கையிலிருந்து கடன் அட்டைகள், டெபிட் அட்டை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

வியாழன், 17 அக்டோபர், 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில், தேசிய கீதம் 
பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
தேசியக் கீதத்தைப் பாடுவதற்காக, நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த போதும், 
அவர்களால் தேசிய கீதம் பாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் விழா சம்பிர​தாயபூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE - யாழ் பலாலி விமான நிலையத் திறப்பு விழாவில் பாடப்படாத தேசியகீதம்

காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தெரணியகலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தரம் 9இல் கல்விப் பயிலும் கே.கிஸ்ணதேவி என்ற மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தெரணியகலை உடயங்கந்த தோட்டத்தை சேர்ந்த 14 வயதான குறித்த 
மாணவி கடந்த 8ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா பூஜை மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்குப்பற்றி வீடு திரும்பும்போதே மாயமாகியுள்ளார்.வாணிவிழா கலை
 நிகழ்ச்சிகள் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றதைத் தொடர்ந்து பாடசாலையில் இருந்து பஸ்சில் தனது உறவுமுறை சகோதரியுடன் மாணவி வீட்டுக்கு வரும் வழியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆடுபாலம் வரை இரண்டு மாணவிகளும்
 சென்றுள்ளனர்.
ஆடுபாலத்தை அண்மித்தவுடன் உடன்சென்ற உறவுமுறை சகோதரி தனது வீட்டுக்கு வந்ததாகவும் காணமல்போன மாணவி ஆடுபாலத்தை கடக்கும்வரை தான் அவரை
 பார்த்துக்கொண்டிருந்ததாகவும், பாலத்தை கடந்த மாணவி உறவுமுறை சகோதரிக்கு தான் சென்று
வருவதாக சமிக்ஞை காட்டியதாகவும், உறவுமுறை சகோதரி வாக்குமூலம் அளித்ததாக தெரணியகலை பொலிசாரின் முதற்கட்ட
 விசாரணையில் தெரியவந்துள்ளது. அன்றையதினம் மாலை 6 மணியாகியும் வீடு திரும்பாத காணாமல் போயுள்ள மாணவியின் தாய் உறவு சகோதரியின் வீட்டுக்கு சென்று விடயங்களை 
ஆராய்ந்துள்ளார். அச்சந்தரப்பத்திலேயே தனது
 மகள் காணாமல் போனதாக மாணவியின் பெற்றோர் தெரணியகலை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.மறுநாள் 9ஆம் திகதி காலை 
பொலிசார் மோப்ப நாய் கொண்டு சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது சிறுமியை கண்டறியமுடியவில்லை.தொடர்ந்து மறுநாள் 10ஆம் திகதி வெள்ளத்தில் ஏதும் அகப்பட்டிருக்கலாமா
 என சந்தேகம் கொண்டு சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அதன்போதும் 
கண்டறியப்படவில்லை.
இன்று நான்கு நாட்கள் கடந்தும் குறித்த சிறுமிக்கு என்ன நடந்தது எனத் தெரியாது பொலிசாரும், பாடசாலை
 ஆசிரியர்களும், ஊர்மக்களும் குடும்பத்தாரும் தொடர்ந்து தேடலில் ஈடுப்பட்டுள்ளனர்.அத்தோடு, சிறுமியை கண்டறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். 0773216751,0713998028

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - காணாமல் போன பாடசாலை மாணவி. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

புதன், 9 அக்டோபர், 2019

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரிதவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும்;யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவர் தனது 4 வயது பெண்குழந்தையுடன் இருசக்கரவாகனத்தில் யாழ்ப்பாணம் நகர்ப்புற கடையொன்றிற்கு சென்றுள்ளார்.அங்கு
 சென்று ஆடையொன்றை வாங்குவதற்கு ஆடைகளை தேர்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென குழந்தையை பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.உடனடியாக அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தபோது, தாங்களும் குழந்தையை காணவில்லையென 
கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட குறித்த பெண் என் குழந்தை எங்கே என உடனே கண்ணீர்விட்டு கதற ஆரம்பித்து விட்டார், பெண்ணின் கதறல் சத்தம் கேட்டதும், அயலிலுள்ளவர்கள் உடனடியாக வந்து, என்ன விடயமென கேட்டு நடந்ததை தெரிந்து கொண்டு குழந்தையை
 தேட ஆரம்பித்தனர்.பலரும் பல திசைகளில் தேடி, சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் சுமார் 50 மீற்றர் தொலைவிலிருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையின் முன்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்.
அதற்கு பின்னரே பரிதவிப்பிலிருந்த அந்த 
தாய் நின்மதியடைந்துள்ளார். மேலும், குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது பெற்றோர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் பல
 இடம்பெறுகின்றன. இது தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் இருந்த பலர் தெரிவித்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் நகரில் பட்டப் பகலில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்

தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்

செவ்வாய், 8 அக்டோபர், 2019

ஹட்டனில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் 28 மாணவர்கள் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோய
 வனராஜா பகுதியில் இன்று மாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தினால் பேருந்தில் பயணித்த 18 மாணவர்கள் உட்பட ஏனைய 10 பேருமாக, 28 பேர் காயமுற்ற 
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - தனியார் பேரூந்து விபத்து.பாடசாலை மாணவர்கள் உட்பட 28 படுகாயம்