இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமானம் அறிவிப்பு

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லையென தெரிவித்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.இன்று 
சுகயீன விடுமுறை
 போராட்டத்தை அறிவித்ததுடன், கல்வியமைச்சின் எதிரே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன், நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் 
காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும், மலையக பாடசாலைகளில் 8.00 – 2.00 மணி வரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை மேற்கொள்வர்.ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் செயற்பாடுகளில் 
ஈடுபடவுள்ளனர்.உரிய தீர்வு கிடைக்கவில்லையெனின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும்
 எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.இதனால், ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றி வரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஸ்ராலின் 
மேலும் தெரிவித்தார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமானம் அறிவிப்பு

ஓர் மகிழ்ச்சியான செய்தி மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை படகுச் சேவை

மார்ச் 11 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிகள் படகுச் சேவை ஆரம்பமாகவுள்ளது.வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.பத்தரமுல்ல தியத்த உயன பூங்கா அருகில் ஆரம்பமாகும் இந்த படகுச் சேவை நாவல பல்கலைக்கழகம் அருகே தரித்து பின்னர் வெள்ளவத்தை நோக்கி செல்லும் எனவும் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை சுமார் 20 நிமிடங்களில் இந்த படகுச் சேவையில் செல்ல முடியுமென கூறப்படுகின்ற நிலையில்இ வீதிகளில் பொதுமக்கள் இதே பயணத்திற்கு ஒன்றரை மணி நேரம் வரை செலவிடுவது இதன்மூலம் தவிர்க்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சேவையை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இலங்கை கடற்படையுடன் ஒத்துழைப்புடன் நடத்தவுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - ஓர் மகிழ்ச்சியான செய்தி மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை படகுச் சேவை

யாழ்.பிறவுண் வீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி. உயிர் தப்பிய தந்தையும் மகளும்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி- 
நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
.திருத்த வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துள்ளனர். எரிபொருள் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால், தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தையும் மகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 






READ MORE - யாழ்.பிறவுண் வீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி. உயிர் தப்பிய தந்தையும் மகளும்

முக்கிய செய்தி நுகர்வோருக்கு நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையையும் குறைக்க அனைத்து இலங்கை பேக்கரி 
உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.நாளை கொழும்பில் நடைபெறவிருக்கும் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் புதிய விலைகள் அறிவிக்கப்படும்
 எனத் தெரிவிக்கப்படுகின்றது .
READ MORE - முக்கிய செய்தி நுகர்வோருக்கு நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.

முக்கிய தகவல் இனி இரவில் மட்டுமே அரைச்சொகுசுப் பேரூந்து சேவை

வியாழன், 20 பிப்ரவரி, 2020

அரைச் சொகுசு பேருந்துகளை இரவு நேர பிரயாணங்களிற்கு மாத்திரமே இயக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இரவு 07.00 மணி முதல் பேருந்துகளை இயக்கலாம் என அறிவித்தார்
. இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையே இந்த பேருந்தகள் சேவையில் ஈடுபட முடியும். ஒரு நாளைக்கு 200 கிலோமீற்றர் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.அரைச் சொகுசு 
பேருந்துகளை இரத்து செய்ய முன்னர் 
முடிவு செய்திருந்தாலும்இ அது தொடர்பான விமர்சனங்கள் வந்ததாகவும், அரைச் சொகுசு பேருந்துகளை பொதுமக்களிற்கு வசதியான சேவையாக மாற்றி, சேவையை தொடர முடிவு செய்துள்ளதாகவும்
 தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணையத்துடன் நடைபெற்ற கூட்டத்தில், விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டு சேவையை தொடர பேருந்து உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.தற்போது 433 அரைச் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இதில் 25 அரை சொகுசு
 பேருந்துகள் தங்கள் பேருந்துகளை சொகுசு பேருந்துகளாக மாற்ற ஒப்புக்கொண்டன.இதேவேளை, அரை சொகுசு பேருந்துகளை இயக்க புதிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர 
மேலும் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - முக்கிய தகவல் இனி இரவில் மட்டுமே அரைச்சொகுசுப் பேரூந்து சேவை

கொரானா வைரஸை இலங்கையில் குணப்படுத்தலாம். சர்வதேச ஆயுர்வேத நிறுவனத்தின் அறிவிப்பு

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸுக்கு சாத்தியமான சிகிச்சை அளிக்க முடியும் என பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.எனினும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி 
இல்லாத காரணத்தினால் அவர்களால் அதை சோதனை செய்ய முடியவில்லை என் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.டெங்கு மற்றும் 
பிற தொற்று நோய்கள் போன்ற வைரஸ்களை குணப்படுத்த பயன்படும் தற்போதைய ஆயுர்வேத மருந்துகள் 
நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதால், கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு 
தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள தங்கள் குடும்பங்களை எச்சரிக்கும் பொருட்டு தேவையான ஆயுர்வேத மருந்துகளைப் பெறுவது தொடர்பாக இலங்கையில் உள்ள சில சீனர்கள் ஏற்கனவே இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர்.இலங்கையின் ஆயுர்வேத மருந்துகள் கொரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என்று 
குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சகம், இந்த மருந்துகள் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்து அரசுக்கு தெரிவிக்க இலங்கை ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.தற்போது, ​​இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற 
சந்தேகத்தின் பேரில் மூன்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள், தொற்று நோய் மருத்துவமனையில் 2 பேரும், குருநாகல் போதனா மருத்துவமனையில் ஒருவருமாக சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூவரில் 
இருவர் வெளிநாட்டினர் என சுகாதார 
அமைச்சு கூறியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரானா வைரஸை இலங்கையில் குணப்படுத்தலாம். சர்வதேச ஆயுர்வேத நிறுவனத்தின் அறிவிப்பு

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா 2020

சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப்பெருவிழா 08.02.2020 சனிக்கிழமை காலை 11.15 முதல் 12 மணிவரையுள்ள சுபநேரத்தில் 
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.
20.02.2020 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் சப்பறத்திருவிழாவும்
21.02.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இரதோற்சவமும்
22.02.2020 சனிக்கிழமை சூரிய உதயத்தில் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை 7 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெற்று மகோற்சவம் இனிதே நிறைவுபெறும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா 2020

வெளிநாட்டுப் பறவைகள்..யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பு

வியாழன், 6 பிப்ரவரி, 2020

யாழ்ப்பாணம் கல்லுண்டாய், வடமராட்சி வல்லைவெளி மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன.இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை 
அனுபவிக்க வரும் அரிய வகை வெளிநாட்டு
 பறவைகளின் எண்ணிக்கை 
கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்டன
.எனினும், இம்முறை சீரான மழைவீழ்ச்சி காணப்பட்டதால் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதி மற்றும் தீவகம் அல்லப்பிட்டி முதல் நாரந்தனை வரையான தரவைப் பகுதி என்பவற்றில் வரத்து நீர் காணப்படுகின்றது.
சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், புதிய வகையான ஆசிய ஓபன் பில் நாரைகள் அந்தப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
 இந்த வகை நாரைகள் இந்திய துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுவதாக கூறப்படுகிறது
.இந்த நாரை தனது உணவைத் தேடி நீண்ட தூரம் பறக்கக் கூடியது. இந்த நாரைகள் தற்போது
 யாழ்ப்பாணத்துக்கு வந்து அதிகளவில் தனித்தனியாக ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.
   ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி, மார்ச் மாதம் வரை இந்தப் பறவைகள் தமது நாடுகளிலிருந்து இனப்பெருக்கம் மற்றும் பருவ 
நிலை மாற்றங்களை அனுபவிக்க இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற பறவைகளை போல் பிளமிங்கோ பறவைகள் மீன்களை சாப்பிடாது. கடலில் உள்ள பாசிகளையே உணவாக உட்கொண்டு வாழும் ஒரு சைவ பறவையாகும். மற்ற பறவைகளை
 போல் மரங்களில் 
கூடு கட்டி வாழாது. தண்ணீரிலேயே நின்ற படியே தூங்கும்” என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - வெளிநாட்டுப் பறவைகள்..யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பு