முக்கிய தகவல் இனி இரவில் மட்டுமே அரைச்சொகுசுப் பேரூந்து சேவை

வியாழன், 20 பிப்ரவரி, 2020

அரைச் சொகுசு பேருந்துகளை இரவு நேர பிரயாணங்களிற்கு மாத்திரமே இயக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இரவு 07.00 மணி முதல் பேருந்துகளை இயக்கலாம் என அறிவித்தார்
. இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையே இந்த பேருந்தகள் சேவையில் ஈடுபட முடியும். ஒரு நாளைக்கு 200 கிலோமீற்றர் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.அரைச் சொகுசு 
பேருந்துகளை இரத்து செய்ய முன்னர் 
முடிவு செய்திருந்தாலும்இ அது தொடர்பான விமர்சனங்கள் வந்ததாகவும், அரைச் சொகுசு பேருந்துகளை பொதுமக்களிற்கு வசதியான சேவையாக மாற்றி, சேவையை தொடர முடிவு செய்துள்ளதாகவும்
 தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணையத்துடன் நடைபெற்ற கூட்டத்தில், விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டு சேவையை தொடர பேருந்து உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.தற்போது 433 அரைச் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இதில் 25 அரை சொகுசு
 பேருந்துகள் தங்கள் பேருந்துகளை சொகுசு பேருந்துகளாக மாற்ற ஒப்புக்கொண்டன.இதேவேளை, அரை சொகுசு பேருந்துகளை இயக்க புதிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர 
மேலும் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக