நாட்டில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் தாழ்வு நிலை காரணமாக  பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 60 மைல் வேகத்தில் காற்று
 வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் 
அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்வாழ் மக்களுக்கு அறிவித்துள்ளது
7.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணம் குறையாது கைவிரித்தது மின்சார சபை

சனி, 7 டிசம்பர், 2024

நாட்டில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை
 சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை
 திருத்தம் செய்யாமல் 6 மாதங்களுக்கு இதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது..
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணம் குறையாது கைவிரித்தது மின்சார சபை

மீன்களின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

வெள்ளி, 6 டிசம்பர், 2024

 மீன்களின் விலை நாட்டில் சடுதியாக உயர்ந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 பேலியகொடை மத்திய மீன் சந்தையில், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,400 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலும், பரவை மீன் ஒரு 
கிலோ கிராம் 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 லின்னா மீன் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாய் முதல் 1,100 ரூபாவுக்கும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக 
தெரிவிக்கப்படுகிறது. ஃபெங்கல் புயல் காரணமாக 
கடல்சார் ஊழியர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தநிலையில், மீன்களின் விலைகளும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விற்பனை செய்வதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - மீன்களின் விலை இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

பப்பாசி செய்கை வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில்  வவுனியா வடக்கில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது பப்பாசி தோட்டங்களை இழந்து நிற்கதியாகியுள்ளார்கள்.
 மழை மற்றும் காற்றினால் தோட்டங்கள் பாதிக்கப்பட்டு அறுபடை செய்வதற்கு தயாரான பப்பாசிதோட்டங்கள், அறுபடை செய்யப்பட்டு கொண்டிருந்த தோட்டங்கள் முற்ராக பாதிக்கப்பட்டுள்ளது.
 இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய்களை இழந்து மீழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே இது தொடர்பில் விவசாயத்திணைக்களம்,கமநல அபிவிருத்தி திணைக்களம், பிரதேசசெயலகம், வவுனியா மாவட்ட செயலகம், ஆகியவற்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், வன்னி
 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தரவுகளைபெற்று 
தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள விவசாய அமைச்சறுக்கு தரவுகளை வழங்கி பப்பாசி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுக்கான அரச நிதியுதவியினை பெற்றுத்தருமாறு
இழப்பீடு கோரி நிற்கும் வவுனியா வடக்குவிவசாயிகள்
என்பது  குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - பப்பாசி செய்கை வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள்

நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

புதன், 4 டிசம்பர், 2024

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், 
அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில
 இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அதன் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.
 "நாம் நீண்ட கால தீர்வைக் காண வேண்டும், இல்லை என்றால், நாம் மீண்டும் இந்த நெருக்கடிக்கு செல்லலாம்.
 இந்த நெருக்கடியை ஒடுக்குவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் ஒரு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும், குறுகிய கால தீர்வாக அரசாங்கம் விரைவில் வெளி நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். இல்லை என்றால் சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் மீள ஆரம்பம்

செவ்வாய், 3 டிசம்பர், 2024

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் நாளை (4) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 நவம்பர் 27ஆம் திகதி முதல் 6 நாட்களுக்கு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, முதலில் டிசம்பர் 4 ஆம் திகதி பாடங்கள் திட்டமிட்டபடி நடத்தப்படும். 
வேதியியல் முதல் தாள், தொழில்நுட்ப அறிவியல் முதல் தாள் மற்றும் நாடகம் முதல் தாள் (மூன்று மொழிகளில்) காலையிலும், அரசியல் அறிவியல் முதல் தாள் பிற்பகலும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 புதுப்பிக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணையை அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் விநியோகிக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட அசல் கால அட்டவணையில் இருந்து வேறுபடுத்தும் வகையில் புதிய கால அட்டவணை 
வேறு நிறத்தில் அச்சிடப்படும். திருத்தப்பட்ட அட்டவணை குறித்து செய்தித்தாள் அறிவிப்புகள் மற்றும் பிற ஊடக சேனல்கள் மூலமாகவும் பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும்.
 பரீட்சார்த்திகள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணைகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். பண்டிகை காலத்தை முன்னிட்டு டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் தேர்வுகள் நடைபெறாது. 
இந்த நாட்களில் அனைத்து தேர்வு நிலையங்களும் மூடப்படும். வினாத்தாள்கள் தொடர்பாக, அனைத்து வினாத்தாள்களையும் நிலையங்களில் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் மீள ஆரம்பம்

நாட்டில் மூன்று வருடங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் என் பி பி அரசாங்கம்

திங்கள், 2 டிசம்பர், 2024

நாட்டில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கும் மேலாக குறைக்கவுள்ளோம் என வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 "புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டத்தை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
 ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 வீதத்திற்கும் அதிகமான மின் கட்டணத்தை குறைக்கும்” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
 இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் மூன்று வருடங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம் என் பி பி அரசாங்கம்

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம்

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இலங்கையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய 
பிரதேசங்களில் உள்ளன.
காற்றின் தரக் குறியீடு அல்லது SL AQI இன் மதிப்பு 0 மற்றும் 50 க்கு இடையில் இருப்பதே சிறந்தது. அதற்கு மேல் 51 மற்றும் 100 க்கு இடையில் இருக்க வேண்டும். இது மிதமான அளவு ஆகும். 
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் 101க்கும் 150க்கும் இடைப்பட்ட நிலையிலும், 151க்கும் 200க்கும் இடைப்பட்ட நிலையிலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு நகரின் காற்றின் தரத்தின் பெறுமதி நேற்று 104 ஆக இருந்தது, அது இன்று 108 முதல் 116 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, களுத்துறை நகரில் காற்றின் தர மதிப்பு இன்று 98 முதல் 104 வரை இருந்தது. கண்டியின் காற்றின் தரம் 106 முதல் 114 ஆகவும், அனுராதபுரத்தின் காற்றின் தரம் 100 முதல் 118 ஆகவும் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 யாழ்ப்பாண நகரத்தில் காற்றின் தரத்தின் மதிப்பு இன்று 120ஐ நெருங்கியது. தற்போதைய சூழ்நிலையில், உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு
 சம்பந்தப்பட்ட துறைகள் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றன.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம்

நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் லாஃப்  (LP) எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க  தவறினால் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க 
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எங்கள் நாட்டில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எல்பி எரிவாயு 
நிறுவனங்கள் உள்ளன. 
லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. லாஃப் கேஸ் பற்றாக்குறைக்கான காரணங்களை விளக்க வேண்டும். லாஃப் கேஸ் எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். 
லிட்ரோ எரிவாயுவில் ஏராளமான கையிருப்பு உள்ளது. 
எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண காஸ் சிலிண்டர்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
 தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார். வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவ்வாறான
 ஓர் நிலைமை 
இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து 
கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 இந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு வீடு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நிலையை எட்டும் வரையில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் 
தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள் உயர்தரப் பாடசாலையை நடத்துவதில்லை 
என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது.
 மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு 
செல்கின்றனர்.
வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது. மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும்
 திறக்கப்பட்டுள்ளது. 
இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்கின்றது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




READ MORE - நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 26 நவம்பர், 2024

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக வைக்கப்பட்டிருந்ததாக 
தெரியவருகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் 25-11-2024.அன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, இந்தியாவில் பொதி செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூடைகளில் உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள உற்பத்தி திகதி ஜனவரி 2022 என பொறிக்கப்பட்டுள்ளதோடு, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர், பொதி தயாரிக்கும் திகதியை ஜூன் 2024 என மாற்றி அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள 
களஞ்சியசாலையில்
 இரகசியமாக வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார
 அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொதியிடல் குறித்த தகவல்கள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா 
என ஆராய்ந்து, அவ்வாறான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை 1977 ஆம் என்ற
 இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

திங்கள், 25 நவம்பர், 2024

நாட்டில் சூறாவளி உருவாகி.25-11-2024. இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை
 நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த 
முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
 சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக 
அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன்
 அறியத்தருகின்றோம்.
 சூறாவளி .25-11-2024.உருவாகி இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு 
காணப்படுவதனால்
 அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என 
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
எந்தவொரு அவசரநிலையிலும் பரீட்சைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் 24 மணிநேர தொலைபேசி இலக்கமான 0412 234 134 க்கு அழைத்து தேவையான உதவிகளைப் பெற ஏற்பாடு செய்யுமாறு அவர் மேலும் கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்

இலங்கையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சனி, 23 நவம்பர், 2024

இலங்கை சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இலங்கையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் பெரும்போகத்துக்காக வழங்கப்படும் உர மானிய தொகையில் மாற்றம்

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில்  பெரும்போகத்துக்கான உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
இதன்படி, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் உர மானியத்தை விட இம்முறை சற்று அதிகளவில் வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த உர மானிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 15, 000 ரூபாயும், 2ம் கட்டமாக 10, 000 ரூபாவும் வழங்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதன்படி, மொத்தமாக 25, 000 ரூபாய் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
   என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் பெரும்போகத்துக்காக வழங்கப்படும் உர மானிய தொகையில் மாற்றம்

நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பம்

வியாழன், 21 நவம்பர், 2024

நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை.22-11-2024. நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு 
அறிவித்துள்ளது. 
இதன்படி  இஸ்லாமிய பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13 ஆம் திகதி 
நிறைவடையவுள்ளது. 
 எவ்வாறாயினும், அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி.02-01- 2025 வியாழன் அன்று தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பம்

அமெரிக்க கண்டத்தில் இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்

புதன், 20 நவம்பர், 2024

சூரியன் உதிப்பதைக் கொண்டுதான் நாம் ஒரு நாளின் தொடக்கத்தை கணித்து கொள்கிறோம். அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியதாம்
இந்த நகரத்தில் கடைசியாக சூரிய அஸ்தமனமானது 2024 நவம்பர் 18ம் திகதி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய தீபகற்பம் அலாஸ்காவாகும்.
அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வட மேற்கில் 
அமைந்துள்ளது.
இங்கு உள்ள உட்கியாக்விக் என்னும் நகரத்தில் சுமார் 4,500 மக்கள் வசிக்கின்றனர். 
அங்கு ஒவ்வொரு ஆண்டின் கடைசியிலும் சூரியன் இரண்டு மாதங்கள் வரை தென்படாதாம்.
ஏனெனில் இக்காத்தில் துருவ இரவு (Polar Night) சீசனுக்குள் இந்நகரம் நுழைகிறது. 
இந்த துருவ இரவு என்னும் நிகழ்வானது ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கு நிகழுமாம்.
துருவ இரவு என்பது பூமியின் தென் துருவம் மற்றும் வட துருவப் பகுதிகளில் 24 மணிநேரத்திற்கும் மேல் இரவு பொழுது 
நீடிப்பதைக் குறிக்கிறது.
பெரும்பாலும் இம்மாதிரியான நிகழ்வு துருவ வட்டங்களில் மட்டுமே நிகழும். 
இதில் உட்கியாகவிக் நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே
 அமைந்துள்ளது.
பூமியில் உட்கியாக்விக் நகரம் இருக்கும் பகுதியை எடுத்துக் கொண்டால் இந்த துருவ இரவு காலகட்டத்தில் பூமியானது அதன் அச்சில் 23 1/2 டிகிரியில் சாய்ந்திருக்கும்.
இப்படி பூமி அச்சின் சாய்வு காரணமாக, இந்த நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்க்காலத்தில் இந்த மாதிரியான ஆச்சரியமான
 நிகழ்வு நடக்கிறது.
நவம்பர் 19ம் திகதி முதல் இருளில் மூழ்கிய இந்த நகரத்தில் மீண்டும் சூரியனை அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 23ம் திகதி 
காண முடியும்.
சூரியன் இந்த நகரத்தில் கண்ணில் படாமல் இருக்குமே தவிர மற்ற படி பகல் வேளையில் இந்நகரமானது நீல நிறத்திலும் இரவு வேளையில்
 இருட்டாகவும் இருக்கும். 
மேலும் சூரியன் இங்கு தெரியாததால் மிகவும் கடுமையான குளிரை அனுபவிக்கக்கூடும்.
ஏனெனில் இங்கு இக்காலத்தில் வெப்பநிலையானது 
மைனஸ் 23 டிகிரியாக இருக்கும். 
இதனால் இங்கு வாழும் மக்கள் குளிரால் மிகவும் சிரமப்படுவார்கள்.
அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் நகரத்திற்கு செல்ல வேண்டுமானால் சாலை வழியாக செல்ல முடியாது. 
இந்நகரத்திற்கு செல்ல ஒரே வழி விமானம் தான். விமானத்தின் உதவியுடன் மட்டுமே இந்த நகரத்திற்கு செல்ல முடியும்.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிற பிராந்திய விமான நிறுவனங்கள் ஏங்கரேஜ் மற்றும் ஃபேர்பேங்க்ஸில் இருந்து வழக்கமான விமான சேவையை வழங்குகின்றன  குறிப்பிடத்தக்கது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - அமெரிக்க கண்டத்தில் இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்

நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : பணம் வரவு வைப்பதில் தாமதம்

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பான அறிக்கையை.19-11-2024. இன்று விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக 
தெரிவித்துள்ளது. 
உர மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
ஆனால் உரிய பணம் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் 
தெரிவித்தனர். 
இதேவேளை, விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உர மானியப் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 
 இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த விவசாய அமைச்சு உரிய பணத்தை விவசாயிகளின் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 
 அதிகப் பருவத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரத்தைப் பெற விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் உர மானியமாக 
அரசு வழங்குகிறது. 
அம்பாறை உள்ளிட்ட கிழக்குப் பிராந்தியத்தில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகளால் உரம் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது. 
 இதேவேளை, முதற்கட்ட பருவத்திற்கான உர மானியம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது 23 மாவட்டங்களில் 86,162 ஹெக்டேர் ஆகும். 
 எவ்வாறாயினும் பொலன்னறுவை, கிரித்தலே மற்றும் கௌடுல்ல உயர் நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் நீர் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு உர மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : பணம் வரவு வைப்பதில் தாமதம்

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட தடை நீதிமன்றின் உத்தரவு

திங்கள், 18 நவம்பர், 2024

நாட்டில் சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம்
 .18-11-2024. இன்று இடைக்கால தடை உத்தரவு 
பிறப்பித்துள்ளது.
 இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட தடை நீதிமன்றின் உத்தரவு

நாட்டில் உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டில் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பொதுச் சான்றிதழ் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடிவதற்குள் உரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அதன் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

நாட்டில் சியம்பலாகொட பிரதேசத்தில் பல கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

சனி, 16 நவம்பர், 2024

நாட்டில் கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் 
பேரில் 16-11-2924.அன்று  மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும்,
 சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும், அவர்கள் சியம்பலாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 
தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பெண் சிங்கப்பூர், ஹொங்கொங், டுபாய் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் பணியாற்றிய பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு வருகைத்தந்து சந்தேக நபருடன் இந்தப் பகுதியில் வசித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் சுமார் இரண்டரை வருடங்களாக பல்வேறு நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, ராஜகிரிய பிரதேசத்தில் வீதிகளில் தங்கியிருந்து அந்த நபர்களின் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், முகவர் நிறுவனங்கள் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்து, வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைப்பதாக கூறி, குறித்த நபர்களிடம் இருந்து 02 முதல் 03 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, அந்த கடவுச்சீட்டுக்களை தம்மிடம் 
வைத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது,
 ​​20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்  குறிப்பிடத்தக்கது.என்பதாகும்.


READ MORE - நாட்டில் சியம்பலாகொட பிரதேசத்தில் பல கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

திருமண வயதை அதிகரிக்கும் மசோதா கொலம்பியாவில் நிறைவேற்றம்

வெள்ளி, 15 நவம்பர், 2024

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் 
நிறைவேற்றப் பட்டுள்ளது.
கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. 
அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்த 
மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும்.
இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள் என்று தெரிவித்தார். 
மத்திய கிழக்கு நாடான ஈராக் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைக்க தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



READ MORE - திருமண வயதை அதிகரிக்கும் மசோதா கொலம்பியாவில் நிறைவேற்றம்