கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம்
தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை
ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை
நெருங்கும். இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை
ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக
சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை
வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக