நாட்டில் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

புதன், 31 ஆகஸ்ட், 2022

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரியராச்சி
 தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து நாட்களும் வேலைக்குச் செல்லும் 
அரச ஊழியர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சந்தன சூரியராச்சி
 தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கும் நிவாரணம் வழங்க தலையீடு செய்வதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வாரத்தின் ஐந்து நாட்களும் பணிக்கு சமூகமளிக்கும் போது போக்குவரத்துச் செலவு அதிகமாக காணப்படும் நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய போது அதற்கு நல்ல பதிலொன்று கிடைத்ததாகவும் அவர் மேலும் 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோலை விநியோகம் செய்கிறது.
பேருந்துகள் மற்றும் பாடசாலை சேவைகளுக்கான தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மேலும் 35,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் இன்று இரவு கப்பலில் இருந்து இறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை அமைச்சர் வெளியிட்டுள்ள போதிலும் நாடு முழுவதிலும் இன்று டீசலுக்கு நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

நாட்டில் மின்வெட்டு நேரம் குறைப்பு வெளியாகியுள்ள அறிவிப்பு

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நாட்டில் ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி 
வழங்கியுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடுவதுடன், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மதியம் மூன்று மணிக்கு பின்னரே மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் நாளை முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் மின்வெட்டு நேரம் குறைப்பு வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் இன்று ர் வெளியாகியது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
இந்த பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் இன்று ர் வெளியாகியது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு: பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2022

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 
மூடப்பட்டுள்ளன.
அகில இலங்கை பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பாவனை அதிகரிப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள வரிசைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா 
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 30 ஆயிரம் மெட்றிக் டொன் டீசல் தரையிறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>READ MORE - நாட்டில் எரிபொருள் இருப்புக்கு தட்டுப்பாடு: பெற்றோலிய போக்குவரத்து தாங்கி உரிமையாளர்கள்

இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சு
ற்றுப்பயணம் சென்றார். 
5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். 
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு 
கொப்புளங்கள் உருவானது. 
ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது. எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். 
அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு 
இருப்பது உறுதியானது. 
கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது. 
அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது. 
ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் 
சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

READ MORE - இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில்26-08-2022. நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
 வழங்கியுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரமும் 40 நிமிடங்களும், இரவு ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களுக்கு அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் வழங்கல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

புதன், 24 ஆகஸ்ட், 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு டேங்கர்களாகவும், நிறுவனங்களுக்கு டொலரில் செலுத்துவதற்கும் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சிரேஷ்ட அதிகாரி ஒருவர்.24-08-2022. இன்று தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த இரண்டு அமைப்புகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, இந்த 
அமைப்பு மீண்டும் தொடங்கும் திகதி குறித்து கூற முடியாது என்றும் கூறினார்.
அதேசமயம் வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்காக 
தனியான எரிபொருள் ஒதுக்கீடு ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், கடந்த சில நாட்களாக எரிபொருள் இருப்புக்கள் இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் எரிபொருள் வழங்கல் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

இலங்கையில் நாளைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

இலங்கையில்.24-08-2022. நாளை புதன்கிழமை 3 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் 
அளித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில், பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் 
துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் நாளைய மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

நாட்டில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்கலாம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

நாட்டில் அரசாங்கம் பேக்கரி உரிமையாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, ஒரு இராத்தல் பாண் 50ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறிப்பிடத்தக்க அளவிலும் குறைக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.
நாட்டில் பேக்கரி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை குறைவடைந்தும் பாண் உட்டப ஏனைய உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பாக அவர்  தெரிவிக்கையில்,
பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு தேவையான பிரதான மூலப்பொருட்களான மா, சீனி, மாஜரின் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளது.
இந்நிலையில் , அதன் நன்மையை பேக்கரி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தால் பாண் விலையை குறைக்கலாம்.
உற்பத்தி மூலப்பொருட்களின் விலை 
அதிகரிப்பு
டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் பேக்கரி உற்பத்தி மூலப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் கோதுமை மா மாபியாவும் நாட்டுக்குள் செயற்பட்டு 
வருகின்றது.
200ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமான கோதுமை மா, மாபியாக்கள் காரணமாக 280ரூபாவுக்கே பேக்கரி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொள்ளமுடிகிறது.
அதேபோன்று முட்டை விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அரசாங்கம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்தாலும் இதுவரை கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை இல்லை எனவும் 
அவர் கூறினார்.
இந்த விடயத்தில் அரச மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்குமானால் 190 ரூபா என்ற அதிக விலைக்கு விற்பனையாகும் 400கிராம் கொண்ட ஒரு இராத்தல் பாணின் விலையை 50ரூபாவாலும் 100ரூபாவுக்கு விற்பனையாகும் பனிஸ் 25ரூபாவாலும் அதேபோன்று ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறிப்பிடத்தக்களவிலும் 
குறைக்க முடியும்.
அரசாங்கம் இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தராவிட்டால், பிஸ்கட் சாப்பிட வேண்டாம் என நாட்டுக்குள் மக்கள் அபிப்பிராய கருத்து கொண்டு செல்லப்படுவதுபோல், பேக்கரி உற்பத்திகளை கொள்வனவு செய்யவேண்டாம் என நாட்டுக்குள் மக்கள் கருத்து எழுவதற்கு இடமிருக்கின்றதாகவும் அவர் கூறினார்.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - நாட்டில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்கலாம்

நாட்டில் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு 
அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சற்றுமுன் இதனை அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிப்பு

நாட்டுமக்களுக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு

சனி, 20 ஆகஸ்ட், 2022

இலங்கையில் கட்டுப்பாட்டில் இருந்த கொவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட்டால் , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாட்டில் நிலவும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டினால் முன்பைப் போன்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் காரணமாக மிக அவசியமான சூழ்நிலைகளுக்கு மாத்திரமே பீசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
முன்பு ஒரு நாளைக்கு 25,000 பீசிஆர் பரிசோதனைகள் வரை சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லையென்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - நாட்டுமக்களுக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு

இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

முருங்கை மரத்தினை பொறுத்தளவில் அதன் ஒவ்வொரு பாகமும் எமது உடல் நோயினை குணப்படுத்தும் ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகையாகவே பார்க்கப்படுகின்றது.
உண்மையில் இந்த முருங்கை தாவரத்தினை எமது அன்றாட பயன்பாட்டில் எடுத்துக்கொண்டால் எமது உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் என்பதை மருத்துவர்களும் அடிக்கடி தெரிவித்து 
வருகின்றனர்.
எமது முன்னோர்கள் இயற்கையினை நம்பியே தமது வாழ்தலை 
மேற்கொண்டு வந்தனர்.
அந்த காலங்களில் மருத்துவம் வளரவில்லை ஆனால் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் இருக்கும்.
அன்றைய மனிதர்களுக்கு நோய் நொடி ஏற்படுவது குறைவென்றே
 சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இயற்கையோடு வாழ்வினை மேற்கொண்டான்.
உண்ணும் உணவில் இயற்கை மூலிகைகள் சேர்க்கப்ட்டது.
அதனால் அவன் நோய்களில் இருந்து விடுபட்டு கொண்டே 
வந்துள்ளான்.
ஆனால் இன்றய சமுதாயம் அதனை கைவிட தொடங்கியுள்ளது.
அதனால் நோய்கள் அவர்களை கைப்பிடிக்க 
தொடக்கி விட்டது.
என்னதான் புதிது புதிதாக உணவு வகைகள் வந்தாலும் எமது பாரம்பரிய உணவு வகைகளை போல சுவை தருவதும் இல்லை நிலைத்து 
நிற்பதும் இல்லை.
இன்றய உணவுகள் நோயை உடலில் உருவாக்குகின்றது.

அன்றைய உணவுகள் உடலில் உள்ள நோயை போக்கியது இதுவே நிதர்சனமான உண்மை.
இவ்வாறான நிலையில் இந்த முருங்கை மரம் ஒரு மனிதனுக்கு எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் எவ்வாறான நோய்களை கட்டுப்படுத்துகின்றது என்பதையும் 
விரிவாக பாப்போம்.
முதலில் இந்த முருங்கையில் எவற்றினை நாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போமானால் முருங்கை மரத்தில் காட்டு முருங்கை, கொடி முருங்கை, தவசு முருங்கை என பல வகைப்படுள்ள முருங்கைகள்
 இருக்கின்றது.
இவ்வாறு இருக்க கூடிய மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், முருங்கை பட்டை, முருங்கை வேர் என்பவற்றினை நாம் பயன்படுத்த முடியும்.
இவ்வாறான முருங்கை தாவரத்தினை உண்ணுவதனால் எமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பாப்போம்.
ஒரு மனிதனுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும் போது கூடவே மன உளைச்சலும் வந்து சேர்ந்துவிடும்.
இவ்வாறு வேலைப்பளு மன உளைச்சல் மற்றும் சில காரணங்களுக்காக நரம்பு தளர்ச்சி ஏற்படுகின்றது.
இவ்வாறான நரம்பு தளர்ச்சியினை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து கசாயம் செய்து வாரத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ பருகி வந்தால் குறித்த நரம்புத்தளர்ச்சி நோயினை கட்டுப்படுத்தலாம்.
உண்மையில் தற்பொழுதெல்லாம் அனைவருக்கும் பொதுவாக இருக்க கூடிய நோயாக இந்த நீரிழிவு நோய் உருவாகியுள்ளது.
அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முருங்கை பூவையோ அல்லது முருங்கை இலையினையோ எமது அன்றாட உணவில் கலந்து உட்க்கொண்டு வந்தால் உண்மையில் குறித்த நோயினை கட்டுக்கோப்புக்குள் 
கொண்டுவரும்.
உண்மையில் ஞாபக மறதி என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் ஒரு விடயம்.
இந்த ஞாபக மறதி என்பது ஒரு கொடிய நோய்க்கு சமனாகும்.
இவ்வாறு ஞாபக மறதியினை இல்லாமல் செய்து ஞாபக சக்தியினை தூண்ட வேண்டும் என்றால் முருங்கை பூவினை எடுத்து அரைத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தினமும் இயன்றளவு காலை மாலை குடித்து வந்தால் ஞாபக சக்தியினை அதிகரிக்க செய்வதோடு நமது மூளைக்கு ஒரு 
புத்துணர்வினை ஏற்படுத்தும்.
எமது உடலில் பல காரணங்களால் பித்தம் அதிகரிக்கின்றது.
இந்த பித்தமானது நமது இரத்தத்துடன் கலந்து மேல் நோக்கி வரும்போது தலை சுற்று, வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற கொடிய நோய்களை
 உருவாகும்
இதனை குணப்படுத்த வேண்டும் என்றால் குறுநகை பூவையோ அல்லது இலையையோ அரைத்து பொடியாக எடுத்து காலை மாலை கசாயம் செய்து குடித்து வந்தால் குறித்த பித்தம் தொடர்பான நோய்களை குணமாக்கி எமது உடலில் உள்ள பித்தத்தினை குறைக்கும்.
இன்றைய காலத்தில் கணனி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசிகள் அதிக பாவனையில் உள்ள இலத்திரனியல் பொருட்கள். இவற்றினை தொடர்ந்து பாவிப்பதனால் சிறுவயதிலேயே கண்பார்வை 
குறித்து விடுகின்றது.
இவ்வாறான கண்பார்வை பிரச்சனைகளை குறைப்பதற்கு முருங்கை பூ மற்றும் இலையினை பொடியாக்கி பசும்பாலுடன் கலந்து காலை மாலை வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகரித்து கண்பார்வை சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கை இலையினை எடுத்து சுத்தமாக கழுவி அதனை வேக வைத்து அதன் சாற்றினை வடித்து வாரத்தில் மூன்று நாளுக்கு மேல் குடித்து வந்தால் எமது உடலில் உள்ள உடல் சூடு நீங்கி மலசிக்கல் பிரசனிகளில் 
இருந்து விடுபட முடியும்.
முருங்கை இலையினை எடுத்து நன்றாக சுத்தம் செய்து நெய் இட்டு வதக்கி சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல 
இரத்தம் அதிகரிக்கும்
முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் பதார்த்தங்களை கொண்டு உணவு தயாரித்து உட்க்கொள்ளுவதன் மூலம் பற்கள் உறுதியாகி, தலை உதிர்வதை தடுத்து கருமையான அடத்தியான கூந்தலை 
உருவாக்கும்.
முருங்கை மரத்திலிருந்து பெறப்படும் முருங்கை காயினை சமைத்து எமது உணவு வகையோடு தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மலட்டு தன்மை நீங்கி ஆண்மை 
அதிகரிக்கும்.
முருங்கை மரத்தில் முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை காய் என்பவற்றினை எமது அன்றாட உணவோடு கலந்து உண்பதன் மூலம் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரித்து குழந்தையின் நல்ல வளர்சிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கின்றது.
சுவாசம் சம்மந்தமான நோயுடையவர்கள் முருங்கை இலையில் சூப் செய்து குறிப்பதனூடாக அவர்களுக்கு சுவாச குழாயில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அந்த நோயினை கட்டுப்படுவதோடு நென்சு சளியினை குறைக்கும்.
முருங்கை இலையினை தனியே எடுத்து அந்த இலையில் மிளகு ரசம் வைத்து குடித்து வந்தால் எமது காய் கால் மற்றும் மூட்டுகளில் உள்ள வலிகள் நீங்கி ஆரோக்கியமான உடலை உருவாக்கும்.
இவ்வாறு எமது உடலில் உள்ள வியாதிகளை பூரண குணமாக்குவதோடு எமது ஆயுளையும் அதிகரிக்கும் இந்த அற்புத மூலிகை.
ஆகவே எமது உணவில் சிறிதளவேனும் வாரத்தில் இரு முறையாவது இந்த முருங்கை மரத்தின் உள்ள பதார்த்தங்களை கலந்து 
உண்ண பழகுவோம்.
இந்த முருங்கை பதார்த்தங்கள் சில இடங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
முருங்கை பதார்த்தங்களை குறிப்பாக முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை விதை போன்றவற்றினை பொடியாக வாங்கி வைத்து தினம் நாம் காலையில் பசும் பாலுடனோ அல்லது நாளாந்த உணவுடனோ கலந்து தினம் உட்க்கொள்ளலாம்.
கலோரி, புரதசத்து நார்சத்து, இரும்புசத்து, கல்சியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - இத்தனை மருத்துவங்களா முருங்கை மரத்தில் நோயினை கட்டுப்படுத்துமாம்

நாட்டில் மின் கட்டணங்கள் திடீர் உயர்வைக் கண்ட முழு விபரம் இதோ

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

இலங்கை மின்சார சபையினால் புதிதாக அறிவிக்கப்பட்ட மின் அலகுகளுக்கான கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பல பேருக்கு பல சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க 
கூடியதாக உள்ளது.
ஆகையினால் பாவிக்கப்படும் மின் அலகுகளும் அதற்கான புதிய கட்டணங்களும் குறித்த விபரங்களை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
30 அலகுகளுக்கு 360/=
31 அலகுகளுக்கு 550/=
60 அலகுகளுக்கு 840/=
61 அலகுகளுக்கு 1336/=
90 அலகுகளுக்கு 1800/=
91 அலகுகளுக்கு 2450/=
100 அலகுகளுக்கு 2900/=
120 அலகுகளுக்கு 3900/=
150 அலகுகளுக்கு 5400/=
180 அலகுகளுக்கு 6900/=
181 அலகுகளுக்கு 7515/=
200 அலகுகளுக்கு 8940/=
250 அலகுகளுக்கு 12690/=
300 அலகுகளுக்கு 16440/=
350 அலகுகளுக்கு 20190/=
400 அலகுகளுக்கு 23940/=
நாம் பயன்படுத்தும் மின் அலகுகளின் எண்ணிக்கையை தெரிவிப்பதின் ஊடாக மின் கட்டணத்தை கணிக்கும் ஒரு பொறிமுறையை மைக்றோ ஜேகோட் என்ற வலைத்தளத்தின் உரிமையாளர், பொத்துவிலை சேர்ந்த சகோதரர் TL ஜபர் தயார் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனை நீங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் மின் கட்டணங்கள் திடீர் உயர்வைக் கண்ட முழு விபரம் இதோ

நாட்டில் சடுதியாக விலைக் குறைப்பு எரிவாயு நிறுவனம் எடுத்த திடீர் முடிவு

புதன், 17 ஆகஸ்ட், 2022

நாட்டில் 17-08-2022.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ கிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,320 
ரூபாவாகும்.
இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் 
குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் சடுதியாக விலைக் குறைப்பு எரிவாயு நிறுவனம் எடுத்த திடீர் முடிவு

உணவு உட்கொள்ளும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லையா என்பது குறித்தும், சாப்பிடும்போது திரவ பொருட்களை எடுத்துக் கொள்வது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்தப் பதிவில்
 பார்க்கலாம்.
உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று, உடல் எடையை அதிகரிக்கும். ஏனென்றால், இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை உருவாக்கி, பின்னர் சேமித்து 
வைக்கப்படுகிறது. இது தவிர, பலவீனமான செரிமான அமைப்பு உடல் பருமனுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது
சாப்பிடும் போது திரவங்களை குடிப்பது வயிறு மற்றும் வாய் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். இது உங்களை அதிக காற்றை விழுங்கச் செய்யும், இது உங்களை அதிகமாக எரிக்கச் செய்யும். இது உங்கள் கவனத்தை உங்கள் உணவில் இருந்து விலக்கி, ரசிப்பதை 
கடினமாக்கும்.
உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது
இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது இரத்த சர்க்கரை அளவையும் கொழுப்பின் சேமிப்பையும் கட்டுப்படுத்துகிறது. உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இதனால் எடை
 அதிகரிக்கும். இது வெறும் தண்ணீருக்கு மட்டும் பொருந்தாது; உங்கள் உணவோடு சாறு அல்லது சோடா குடிப்பது உங்கள் உடல் எவ்வளவு இன்சுலின் உற்பத்தி செய்கிறது என்பதையும் பாதிக்கும்.
உற்பத்தி செய்யப்படும் உமிழ்நீரின் அளவைக் குறைக்கிறது
உமிழ்நீர் செரிமானத்தின் இன்றியமையாத அங்கமாகும், இது உணவை உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.
ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மெதுவாக்கலாம்
தொற்றுப் பொருட்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான இரைப்பைச் சாறுகளை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம், உணவு சரியாக உடைந்து போவதைத் தடுக்கலாம். உங்கள் வயிற்றில் உள்ள 
செரிமான நொதிகள் தண்ணீரில் நீர்த்தப்படும் போது, உங்கள் உணவு உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். இது சிறிய குடல் 
வழியாக மெதுவான வேகத்தில் குறைவான
 ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> READ MORE - உணவு உட்கொள்ளும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா

உங்கள் குண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் வைத்திய முறைகள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

இந்தப் பிரச்சனையை போக்க நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நல்ல இயற்கை மருத்துவ முறைகளை கூறிச் 
சென்றுள்ளனர்.
அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டோம்.நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற, கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதனால் ஒல்லியான உடல் குண்டாக மாற்றி வெற்றியும் கண்டுள்ளனர்.குண்டான உடல் ஒல்லியாக மாற்ற தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும்.
அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து 
குடிக்கவும்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் 
தடுத்து விடும்.
அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.
இதனை நாமும் கடைபிடிப்போம், இந்த முறையை மற்றவர் 
அறியவும் செய்வோம்.
வீண் விளம்பரங்களால் கவரப்பட்டு, அதனால் பக்கவிளைவுகளுடன் அவதிப்படும் நமது மக்களை பாதுகாக்க இந்த 
முறை உதவும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - உங்கள் குண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் வைத்திய முறைகள்

உங்கள் பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை.
உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் கெட்டும் போகும் தன்மை உடையது ஆனால் தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும்.
அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
(தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்) இதுதான்
 தேனின் இயல்பு.
ஆனால் இந்த தேன் மனித இனத்திற்கு மிகுந்த பயனுள்ள ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் இதயக் கோ ளாறு மிகுந்த வேகமாக பரவிவரும் ஒரு கொடிய நோயாக இனம் காணப்படுகிறது.
எல்லா வயதினரையும் தாக்கும் நோயாகவும்
 இது உள்ளது.
இந்த நோய் ஏற்பட மிக முக்கிய காரணம் மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இவ்வாறான கொடிய நோயை எளிதாக தீர்க்கும் சக்தி தேனுக்கு உண்டு.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது.
ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு 
பலவீனமாக இருக்கும்.
அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம்.
1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்கள்.
இதனால் அதிசயத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.
இரத்த ஓட்டத்தில் உள்ள அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும்
 லவங்கமும்.
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது 
அரு மருந்து.
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.
2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.
ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் 
கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குழைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.
2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை 
அடியோடு மறையும்.
தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீரும்.
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள்.
இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும்.
பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக 
வலியில்லாமல் ஜீரணமாகும்.
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை
தொண்டையில் ஏற்படும் கிச் கிச் போக்க 3 மணிநேரத்திற்கு ஒருமுறை 1 தேக்கரண்டி தேனை சாப்பிட்டால் தொண்டையில் கிச்கிச் விரைவில் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு 
அழிந்துவிடும்.
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள்
 குணமாகும்.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் 
புற்று நோய் குறைந்து விடுமாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - உங்கள் பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை