இலங்கை விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் முன்மொழிவுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர இணங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெற்றவுடன் அவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும்
அமைச்சர் கூறினார்.
தான் இன்று முன்வைத்த இரண்டு ஆலோசனைகளுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கர தெரிவித்துள்ளார்.
அனுப்பப்படும் பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் புதிய வரியில்லா கொடுப்பனவு தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதன்படி சட்டபூர்வமாக அனுப்பப்படும் பணத்தில் 50% இற்கு இணையான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக