அவகோடா பழம். புற்றுநோயை அடித்து விரட்டுமாம்

புதன், 3 ஆகஸ்ட், 2022

 

மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
அவகோடா என்றால் என்ன?
அவகோடா எனப்படும் பழம் மெக்சிகோ மற்றும் பியூப்லா நகரங்களில் அதிகம் காணப்படுகிறது. அவகோடவின் சுவை இனிப்பு. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
வெண்ணெய் பழத்தில் அதிக கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்ற நிலையில், மேலும் இந்த கொழுப்புகள் மிகவும் பயனுள்ளதாக
 இருக்கின்றது.
வெண்ணெய் பழம் அலிகேட்டர் பேரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. வெண்ணெய் பழம் பச்சை நிறத்திலும், தோலும் வடிவமும் கொய்யா போன்று காட்சி அளிக்கிறது.
வெண்ணெய் பழத்தை எவ்வாறு சாப்பிடலாம்?
கொழுப்பு அமிலங்கள் அதிகமாக காணப்படும் இப்பழத்தினை சாப்பிட்டால் கொழுப்பு அதிமாகிவிடும் என்றே பெரும்பாலான நபர்கள்
 நினைக்கின்றனர்.
ஆனால் இவ்வாறு எண்ணுவது தவறாகும். வெண்ணெய் பழத்தை காட்டிலும் பாலில் அதிக கொழுப்பு அமிலம் உள்ளது. வெண்ணெய் பழத்தை சாலடாகக் செய்து சாப்பிடலாம்.
அவகோடா பழத்தைக் கொண்டு அல்வா செய்தும், காரமான பொருட்களுடனும், மற்ற பழங்களுடனும் சேர்த்து உட்கொள்ளலாம் . நீரிழிவு நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம். இது உடல் கொழுப்பைக் குறைக்கவும் 
உதவுகின்றது.
வெண்ணெய் பழத்தில் விட்டமின் K காணப்படுவதுடன் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
வெண்ணெய் பழத்தின் நன்மைகள் என்ன?
அவகோடா பழத்தில் இயற்கையாகவே அதிக கலோரிகள் நிரம்பியுள்ள நிலையில், இதில் உள்ள ‘வைட்டமின் ஏ’ கண்களின் பார்வை திறனை பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியினை 
அதிகரிக்கிறது.
விந்து உற்பத்தி தடை இல்லாமல் உருவாக உதவும் இப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை குறைவதோடு, தாம்பத்திய உறவும் 
சிறப்பாக இருக்கும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களை சேர்த்து 
சாப்பிடலாம்.
சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தின் எண்ணெய்யை உடம்பில் தேய்த்து வருவதோடு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல 
பலன் கிடைக்கும்.
இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும். அவகோடா பழங்கள் உணவுப் பொருளாக மட்டும் அல்லாது பேஷியலுக்காக அழகு நிலையங்களிலும் பயன்படுத்தப்படுவதால், இதற்கு வரவேற்பு
 அதிகரித்துள்ளது.
வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணெய்க்கு பதிலாக இப்பழம் பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான, குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரிசெய்யும் ஃபோலிக் அமிலம் இப்பழத்தில் ஏனைய பழங்களைவிட அதிகமாக உள்ளது.
இப்பழத்தில் காணப்படும் ‘விட்டமின் கே’ இரத்தம் உறைதலுக்கு துணை புரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பினை அளிக்கிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் வாந்தியை இப்பழத்தில் காணப்படும் விட்டமின் பி6 கட்டுப்படுத்துகிறது.
வாழைப்பழத்தை விட மிகச் சிறந்தது
ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று கருதவேண்டாம் வாழைப்பழத்தை விட அதிக அளவில் பொட்டாசியத்தை அவகோடா பழம் கொண்டுள்ளது .
கொலஸ்ட்ராலை குறைத்து விடும்
இந்த அவகோடா பழத்தை தொடர்ந்து உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும். அது மட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவையும் குறைக்கிறது மற்றும் நல்ல கொழுப்பு அளவையும் அதிகரிக்கிறது.
புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள்
அவகோடா பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், பாலி நியூட்ரியன்ட்டுகல், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வலிமை படுத்துகிறது மற்றும் ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய் செல்களை உற்பத்தியாகாமல் தடுக்கிறது.
நார்ச்சத்து
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அவகோடா பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால் உடல் எடை குறைக்கவும், உயர் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும், அது மட்டுமில்லாமல் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடுகிறது.
ஆர்த்ரிடிஸ்
மருத்துவ ஆய்வுகளில் அவகோடா பழத்தில் உள்ள ஆர்த்ரிடிஸ் சேர்மங்கள் வலி மற்றும் இதர எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்வதாக தெரியவந்துள்ளது. எனவே உங்களுக்கு வலுவான எலும்புகள் தேவை என்றால் இந்த பழத்தை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மூளை திறனை அதிகரிக்கும்
அவகோடா பழத்தில் ஒமேகா 3, ஃபேட்டி அமிலம், வைட்டமின் எ சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது மூளையானது அதிகமாக செயல்படும் ஆற்றல் வாய்ந்தது.

அவகோடா நம் மூளையின் முக்கியமான பகுதியான Prefrontal Cortex எனும் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக சிந்திக்கவும் தூண்டுகின்றது.
குறிப்பு
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்ணெய் பழத்தினை உட்கொண்ட பின்பு உடல் தொந்தரவு எதுவும் ஏற்பட்டால் தாமதக்காமல் உடனே மருத்துவரை அனுக வேண்டும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணைச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக