இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சி

ஞாயிறு, 31 ஜூலை, 2022

பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
தரம் ஒன்று மற்றும் இரண்டுக்கான ஆரம்பக் கல்வியை இழந்து மூன்றாம் ஆண்டுக்கு சென்றுள்ள பாடசாலை மாணவர்களின் தகைமை குறித்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
நாளை முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சி

இதோ யாழ் குடாநாட்டுக்கான நாளைய எரிவாயு விநியோகம் முழுமையான விபரங்கள்

சனி, 30 ஜூலை, 2022

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம்
 இடம்பெறவுள்ளது.
கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக.31-07-2022. நாளை குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை 
மேற்கொள்ளப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - இதோ யாழ் குடாநாட்டுக்கான நாளைய எரிவாயு விநியோகம் முழுமையான விபரங்கள்

உங்கள் மஞ்சள் நிற பற்களை இரண்டே நிமிடத்தில் போக்க வேண்டுமா

வெள்ளி, 29 ஜூலை, 2022

தான் மற்றவர்முன்பு அழகாக தெரியவேண்டும் என நினைப்பது ஆண், பெண் என இருவருக்குமே தோன்றுவது வழக்கம்.
நமது அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது நமது பற்களில் தெரியும் மஞ்சள் கரை. இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி 
எல்லோரிடமும்
இவ்வாறு பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை குக்கிய காரணமாக 
அமைகின்றது.
சரி அவ்வாறு மஞ்சள் நிறமாக மாறிய பற்களை இரசாயனம் எதுவும் இல்லாமல் வேலை நிறமாக மாற்றுவது எப்படி என்று
 பார்க்கலாம் வாங்க.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இது நமது முகம், தலை முடி மட்டும் இன்றி நமது உடல் முழுவதும் ஆரோக்கியம் தரும் பல விஷயங்களை
 நமக்கு தருகின்றன.
எப்படி தேங்காய் என்னை மூலம் வெள்ளை பற்களை பெறுவது? தேங்காய் எண்ணையுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பயன் படுத்துவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை 
பெற முடியும்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சேடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்துக் 
கொள்ளவும்.
உங்கள் பற்பசைகளிற்கு பதிலாக இதனைப் பயன்படுத்துவதனால் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை உங்கள் குளியலறையில் அல்லது குளிரூட்டியில் வைத்திருக்க முடியும்.
தேங்காய் எண்ணெய் வாயின் சுகாதாரத்தைப் பேணுவதுடன் பற்கள், முரசுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும் போதும் தேங்காய் எண்ணெய்யை தடவினால் இலகுவான தீர்வைப் பெற முடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - உங்கள் மஞ்சள் நிற பற்களை இரண்டே நிமிடத்தில் போக்க வேண்டுமா

உங்களுக்கு தொப்பையா ஒரே வாரத்தில் குறைக்க சிறந்தவழி

வியாழன், 28 ஜூலை, 2022

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் ஆண்களிடம் இருப்பது இரண்டு விஷயங்கள். ஓன்று ஸ்மார்ட் போன் மற்றொன்று முட்டியை தொடும் அளவிற்கு தொப்பை.
பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் கண்ட உணவுகளை அருந்துவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது மற்றும் போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது இதனால் உடல் குண்டாகி தொப்பை உண்டாகிறது.
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் ஒன்று சேர்ந்து உடலில் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால் சிறுவயதிலேயே பலவிதமான நோய்கள் நம்மை தாக்குகின்றன. சரி இந்த கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம் வாங்க.
நமக்கு நன்மை தரும் பழங்களில் ஒன்று பப்பாளி. நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தொப்பை குறைவதை கண்கூட பார்க்க முடியும்.
மேலும் வாழைத் தண்டை சூப் செய்து அதனை அருந்தி வர தொப்பை விரைவாக குறையும். மேலும் வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் தொப்பையை எளிதில் 
குறைக்க முடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - உங்களுக்கு தொப்பையா ஒரே வாரத்தில் குறைக்க சிறந்தவழி

கணவன் - மனைவி இடையே சண்டை குழந்தைகளின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது

புதன், 27 ஜூலை, 2022

கணவன் - மனைவி இடையே சண்டை இல்லாத வாழ்க்கையே இருக்க முடியாது. என்னதான் ஒற்றுமையான தம்பதியர் என்றாலும், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை தவிர்க்கவே முடியாது. பெற்றோராகிய உங்களுக்கு இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், உங்கள் சண்டை மற்றும் நடவடிக்கைகள் காரணமாக உங்கள் குழந்தையின் மன நலன் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக, கணவன், மனைவி இருவருமே கோபத்தில் ஒருவரை, ஒருவர் மிகுந்த மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள். அதை பார்க்கும் குழந்தையின் மனதில் எந்த அளவுக்கு பாதிப்புகள் 
ஏற்படக்கூடும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்தால், அதன் விளைவாக குழந்தைகளுக்கு கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இவ்வளவு ஏன்? எதிர்காலத்தில் அவர்கள் யாரிடமும் ஒட்டி, உறவாட 
விரும்ப மாட்டார்கள்.
இத்தகைய சூழலில், பெற்றோர் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதன்
 மூலமாக உங்கள் 
குழந்தைகளின் நலன் பாதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெற்றோரின் சண்டை ஏன் குழந்தையை பாதிக்கிறது
ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் இருந்து
 அறிவுரை, அன்பு, அரவணைப்பு, வழிகாட்டுதல் 
போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள். ஆகவே, இதுபோன்ற சமயத்தில் பெற்றோருக்கு இடையேயான வாக்குவாதங்களை பார்க்கும் குழந்தைகளின் மனதில் குழப்பம் ஏற்படக் கூடும். வளர்ந்த குழந்தைகள்
 தான் என்றில்லை. 6 மாத குழந்தைகள் கூட பெற்றோரின் சண்டைகளால் பாதிக்கப்படும். இதேபோன்று 19 வயது வரையிலான இளம் 
பருவ பிள்ளைகள் அனைவருமே பெற்றோரின் சண்டையால் பாதிக்கப்படுவர்.
ஏன் நீண்ட கால பாதிப்பை தருகிறது
பெற்றோர் இடையே தீர்க்கப்படாமல் தொடர்ந்து நடைபெறக் கூடிய சண்டை என்பது, உங்கள் குழந்தையை வாழ்க்கை முழுவதும் பாதிக்கும். பெற்றோரைப் போல, அவர்களுக்கும் திருமணம் நடந்த பிறகு, வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த முடியாமல் 
சிரமம் அடைவார்கள். சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரை பார்த்து, பார்த்து வளரும் குழந்தைகள் இயல்பாகவே மூர்க்கத்தனமாகவும், கோபம் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.
பெற்றோர் மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம்?
சண்டைகளும், வாக்கு வாதங்களும் இயல்பானவை என்றாலும், அதை வெகுவாக குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதையும் மீறி சண்டை நடைபெற்றால், அது குழந்தைகளை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் விவாதங்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முன்பாக வேண்டாம்.
அமைதியாக பேசி சமரசம் அடைய முயற்சி செய்யவும். வெறுமனே சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் எந்தத் தீர்வும் ஏற்பட்டு விடாது. ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து பேசுங்கள். அதை பார்த்து வளரும் உங்கள் குழந்தையும் எல்லோருக்கு மதிப்பு அளிக்கும் நபராக இருக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - கணவன் - மனைவி இடையே சண்டை குழந்தைகளின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது

நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த மின்வெட்டு நேரம்

செவ்வாய், 26 ஜூலை, 2022

மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை இடையறாது விநியோகம் செய்வதற்கு போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.மக்கள் நினைப்பதனை விடவும் மின்வலு துறையில் பாரிய நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும்  தெரிவித்துள்ளது.
எனவே மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் நீடிக்கப்படும் சாத்தியங்கள் வெகு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முனைப்பு காட்டப்படுவதாகவும், மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த மின்வெட்டு நேரம்

நீதிபதி இளஞ்செழியனின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது

திங்கள், 25 ஜூலை, 2022

யாழ்ப்பாணத்தில் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கடமையாற்றிய போது அவரது மெய் பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் கடந்த 22ம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஹலவத்தை ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய போது நீதிபதியை பாதுகாத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர மரணமடைந்ததையடுத்து அவரது குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நீதிபதி இளஞ்செழியன் 
ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதோடு ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளின் கல்வி விடயங்களை தொடர்ந்து கவனித்து வரும் நீதிபதி, சார்ஜன்ட் ஹேமச்சந்திர இறந்தபோது அவரது குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றையும் நிர்மாணித்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நீதிபதி இளஞ்செழியனின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது

இலங்கையில் எரிபொருள் பிரச்சினையால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கையில் போக்குவரத்துக்கான எரிபொருள் விநியோகம் தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள்
 தெரிவித்துள்ளனர். 
சமீப நாட்களாக, எரிபொருள் பிரச்சினையால், பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வரத்து 
குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது  பொருளாதார மையங்களுக்கு கணிசமான அளவு மரக்கறிகள்  வருவதால் அவற்றின் விலையில் சிறிது 
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கும் கடந்த நாட்களை விட இன்று அதிகளவு மரக்கறிகள் கிடைத்துள்ளதாக வர்த்தகர்கள் 
தெரிவித்தனர்
மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை இன்று 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதித் தலைவர் பிரபாத் சுசந்த தெரிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் எரிபொருள் பிரச்சினையால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மஸ்கெலியாவில் நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது

சனி, 23 ஜூலை, 2022

இலங்கை நோர்வூட் நகரில் உள்ள மஸ்கெலியா  கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகடு காட்டி பெற்றோல் பெற சென்ற ஒருவரை  நோர்வூட் பொலிஸார்.
23-07-2022. இன்று (23) கைது செய்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு  3300 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் கடைசி இலக்கமான 0 முதல் 3 வரையிலான வாகனங்களுக்கு எரிபொருளை வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம்
 நடவடிக்கை எடுத்துள்ளது.
கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த  27 வயதான சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில், தான் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளுக்கு தொடர்பில்லாத எரிபொருள் விடுவிப்பு இலக்கம் என்ற பதிவு இலக்கத் தகட்டை பொருத்தியுள்ளார்.
எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த போது, ​​எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் குறிப்பிடப்பட்ட இலக்கத்திற்கு அனுமதிப்பத்திரம் மற்றும்
 காப்புறுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் உரிமம் மற்றும் காப்புறுதி சான்றிதழை பெற்றுக் கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி இலக்கத் தகடுகளை வைத்து வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த 
மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைப் பயன்படுத்தி வேறு குற்றங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - மஸ்கெலியாவில் நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது

எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

வெள்ளி, 22 ஜூலை, 2022

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
 தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எரிபொருள் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவில் இரண்டு பிரதேச செயலகங்களில் உள்ள மூன்று லங்கா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை நேற்று  மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலகத்தினர் கிராம அலுவலகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்கள் தோறும் கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை பெற்றவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்பம் ஒன்றிற்கு ஒரு பெட்ரோல் வாகனம், ஒரு டீசல் வாகனம் என்ற வீதம் எரிபொருள் விநியோக அட்டை 
வழங்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

தேக்கவத்தை ஆலடி சந்தியை சேர்ந்த சிறுவனை காணவில்லை

வியாழன், 21 ஜூலை, 2022

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு 
காணாமல் போயுள்ளார்.
இன்று (20) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற சிறுவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து
 தேடி வருகின்றனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - தேக்கவத்தை ஆலடி சந்தியை சேர்ந்த சிறுவனை காணவில்லை

முழு விபரம் இதோ யாழில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் விநியோகம்

புதன், 20 ஜூலை, 2022

யாழ்.மாவட்டத்தில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளைய தினம் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன்
 கூறியுள்ளார்.
முதல்கட்டமாக குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் நாளை பொதுமக்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலர் கூறியிருக்கின்றார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விபரம்…
1:- பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கம்
2:- சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்

3:- அளவெட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம்

4:- யாழ்ப்பாணம் சரவணபவன் எரிபொருள் நிரப்பு நிலையம்

5:- யாழ் மாநகர பலநோக்கு கூட்டுறவுசங்கம்

6:- யாழ்ப்பாணம் லிவர்பூல் எரிபொருள் நிரப்பு நிலையம்

7:- நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கம்

8:- வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்

9:- மானிப்பாய் பலநோக்கு கூட்டுக்றவுசங்கம்

10:- ராஜன் உமையாள் யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையம்

11:- நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கம்

12:- யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம்

13:- கோப்பாய் ஏஎம்டி பலநோக்கு கூட்டுறவுசங்கம்

14:- மருதனார் மடம் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையம்

15:- இலங்கை கூட்டுறவுசங்க சந்தைபடுத்தல் எரிபொருள் நிரப்பு நிலையம்

பெற்றோல் விநியோகம்..

* மோட்டார் சைக்கிள்- ரூபா 1500/=

* முச்சக்கர வண்டி -ரூபா 2000/=

* கார்/வான் ரூபா 7000/=
பெற்றோல் விநியோகத்தின்போது வாகன பதிவு இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோகம் மேற்கொள்ளப்படும்.

* செவ்வாய் , சனி – 0,1,2

* வியாழன்,ஞாயிறு- 3, 4, 5

* திங்கள் புதன் வெள்ளி- 6,7,8,9

இதற்கு மேலதிகமாக QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை யில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் 
மேற்கொள்ளப்படும்.
1. எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் எரிபொருள் நிலையங்களில் அவ் அட்டையைப் பயன்படுத்தி பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும்.
2. டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் விநியோகிக்கப்படும்.
யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையம் அத்தியாவசிய தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் இவ் எரிபொருள் நிலையம் தவிர்ந்த ஏனைய எரிபொருள் நிலையங்களிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும், தனியார் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கும் , பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் .
பொதுமக்கள் வரிசையில் காத்திராது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி எரிபொருளை பெற்றுக்
 கொள்ளுமாறும் ,
விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மேலான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - முழு விபரம் இதோ யாழில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் விநியோகம்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

செவ்வாய், 19 ஜூலை, 2022

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், இவ்வாறு பாணின் விலையை குறைக்கமுடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுவேளை, எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் 
தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்ப
$டும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து பயணிகளுக்கு 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

நாட்டில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு

திங்கள், 18 ஜூலை, 2022

நாட்டில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே இனி எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் 
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே அதுவரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் 
மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - நாட்டில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஞாயிறு, 17 ஜூலை, 2022

நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் (18, 19) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி
 வழங்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட மகிச்சியான அறிவிப்பு

வெள்ளி, 15 ஜூலை, 2022

இலங்கை மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 
அறிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ள நிலையில் ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், மற்றைய கப்பலில் 41 ஆயிரம் மெற்றிக்தொன்னும் இலங்கைக்கு 
எடுத்துவரப்படவுள்ளன.
அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் கப்பல்களில் எரிபொருள் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் கட்டணங்களை செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. கப்பல் கட்டணத்தில் 30 வீதம் செலுத்தப்பட்டுள்ளது. ஞ்சிய கட்டணத்தை செலுத்த தயாரென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 
மேலும் எதிர்வரும் 22ம் திகதி மேலும் 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் மற்றுமொரு கப்பலும் நாட்டை
 வந்தடையவுள்ளது.
அதற்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் பிறிதொரு கப்பல் எதிர்வரும் 21ம் திகதி கொழும்பு துறைமுகத்தை 
வந்தடையவுள்ளது.
இதற்கமைய அடுத்த வாரம் மொத்தமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், 70 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பெற்றோலும் கிடைக்கவுள்ளதாக
 குறிப்பிடப்பட்டுள்ளது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட மகிச்சியான அறிவிப்பு

இலங்கையில் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

செவ்வாய், 12 ஜூலை, 2022

இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம்
 மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - இலங்கையில் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

திங்கள், 11 ஜூலை, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியிலும் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
இதன்படி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவினால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ்
 தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 40,000 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் இல்லாமல் போகும் நிலை

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இலங்கையில்  தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர், மேலும் தெரிவிக்கையில், நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கான பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தற்போது பேக்கரிகளில் 50% உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மிகுதியும் மிக விரைவில் நின்றுவிடும். பேக்கரி தொழில் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும், நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் எனவும் நான் ஏற்கனவே
 தெரிவித்திருந்தேன்.
இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் தெரிவித்தோம். ஆனால் அமைச்சரிடம் இருந்து இதுவரை எந்த 
பதிலும் இல்லை.
பேக்கரி உற்பத்தியும் அத்தியாவசிய சேவை பிரிவின் கீழ் வருகிறது. ஆனால் பேக்கரி தொழிலை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் இல்லாமல் போகும் நிலை

விபரங்கள் இதோ யாழ் –கிளிநொச்சி மக்களுக்காக புதிய ரயில் சேவை

சனி, 9 ஜூலை, 2022

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையே எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் யாழ் ராணி சேவையினை ஆரம்பிக்க உள்ளதாக, யாழ். புகையிரத நிலைய அத்தியட்சகர் ப. பிரதீபன் 
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காலை 6 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், 6.40 க்கு யாழ். புகையிரத நிலையத்தில் இருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியில் இருந்தும், 7.12 க்கு கொடிகாமத்தில் இருந்தும் புறப்பட்டு,
 பளையை 7.30 க்கும், கிளிநொச்சியை 7.56 க்கும், அறிவியல்நகர் புகையிரத நிலையத்தை 8.05 க்கும் வந்தடைந்து, 8.11 க்கு முறிகண்டியை 
சென்றடையும்.
காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்தில் இருந்து 6.05 க்கும், தெல்லிப்பளையில் இருந்து 6.09 க்கும், மல்லாகத்தில் இருந்து 6.14 க்கும், சுன்னாகத்தில் இருந்து 6.18 க்கும் இணுவிலில் இருந்து 6.22 க்கும், கோண்டாவிலில் இருந்து 6.27 க்கும், கொக்குவிலில் இருந்து 6.31 க்கும் புறப்பட்டு 6.35 க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44 க்கும், நாவற்குழி 6.50 க்கும், தனங்கிளப்பு 6.54 க்கும், சாவகச்சேரி 7 க்கும், சங்கத்தானை 7.03 க்கும், மீசாலை 7.07 க்கும், கொடிகாமம் 7.12 க்கும், மிருசுவில் 7.14 க்கும், எழுதுமட்டுவாள் 7.21 க்கும் புறப்பட்டு பளையை 7.30 க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42 க்கும், பரந்தன் 7.50 க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56 க்கு வந்தடையும்.
மீண்டும் காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்தப் புகையிரதம் பளையில் இருந்து 10.31 க்கும், கொடிகாமத்தில் இருந்து 10.48 க்கும், சாவகச்சேரியில் இருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், யாழ்ப்பாணத்தில் இருந்து 2.39 க்கும், சாவகச்சேரியில் இருந்து 2.59 க்கும், கொடிகாமத்தில் இருந்து 3.11 க்கும் புறப்பட்டு, பளையை 3.38 க்கும், கிளிநொச்சியை 3.56 க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10 க்கு
 வந்தடையும்.
மீண்டும் முறிகண்டியில் இருந்து 4.40 க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல் நகரை 4.46 க்கு வந்தடைந்து. கிளிநொச்சியில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனில் இருந்து 5.06 க்கும், பளையில் இருந்து 5.30 க்கும் புறப்பட்டு 6.44 க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20 க்கு காங்கேசன் 
துறையை அடையும்.
இடையில், பரந்தனில் இருந்து 5.04 க்கும், ஆனையிறவில் இருந்து 5.14 க்கும் புகையிரதம் புறப்படும்.
சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிகள் : 03
சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டி : 01
அனைத்து புகையிரத நிலையங்களிலும் 
நிறுத்தப்படும்.
யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவைக்கான கட்டணம் 90 ரூபா எனவும், அதிகரித்த டீசல் செலவுகள், பஸ் கட்டணங்கள் காரணமாக யாழ். மக்களுக்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் யாழ். புகையிரத நிலைய அத்தியட்சகர் ப. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - விபரங்கள் இதோ யாழ் –கிளிநொச்சி மக்களுக்காக புதிய ரயில் சேவை