இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் மத்திய வங்கி முக்கிய அறிவிப்பொன்றை
வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதத்திற்கு இரு தடவைகளாக அவற்றை செலுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியினால் வங்கிகளுக்கு பணிப்புரை
வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கிணங்க கடனை மீளச் செலுத்துவதற்கு ஆறு மாத கால சலுகை வழங்குவது, முறைப்படியான செயற் திட்டத்தின்
மூலம் வங்கிக் கடனை அறவிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிப்பது, மற்றும் செயற்படாத கடனை செலுத்தவுள்ளோரின் பட்டியலில்
உள்ளோர் புதிய கடன்களை பெற்றுக் கொள்ளும்போது
கடன் தகவல் பிரிவில் சலுகையுடனான மதிப்பீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக