விபரங்கள் இதோ யாழ் –கிளிநொச்சி மக்களுக்காக புதிய ரயில் சேவை

சனி, 9 ஜூலை, 2022

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையே எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் யாழ் ராணி சேவையினை ஆரம்பிக்க உள்ளதாக, யாழ். புகையிரத நிலைய அத்தியட்சகர் ப. பிரதீபன் 
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காலை 6 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், 6.40 க்கு யாழ். புகையிரத நிலையத்தில் இருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியில் இருந்தும், 7.12 க்கு கொடிகாமத்தில் இருந்தும் புறப்பட்டு,
 பளையை 7.30 க்கும், கிளிநொச்சியை 7.56 க்கும், அறிவியல்நகர் புகையிரத நிலையத்தை 8.05 க்கும் வந்தடைந்து, 8.11 க்கு முறிகண்டியை 
சென்றடையும்.
காங்கேசன்துறைக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில், மாவிட்டபுரத்தில் இருந்து 6.05 க்கும், தெல்லிப்பளையில் இருந்து 6.09 க்கும், மல்லாகத்தில் இருந்து 6.14 க்கும், சுன்னாகத்தில் இருந்து 6.18 க்கும் இணுவிலில் இருந்து 6.22 க்கும், கோண்டாவிலில் இருந்து 6.27 க்கும், கொக்குவிலில் இருந்து 6.31 க்கும் புறப்பட்டு 6.35 க்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையே, புங்கன்குளம் 6.44 க்கும், நாவற்குழி 6.50 க்கும், தனங்கிளப்பு 6.54 க்கும், சாவகச்சேரி 7 க்கும், சங்கத்தானை 7.03 க்கும், மீசாலை 7.07 க்கும், கொடிகாமம் 7.12 க்கும், மிருசுவில் 7.14 க்கும், எழுதுமட்டுவாள் 7.21 க்கும் புறப்பட்டு பளையை 7.30 க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42 க்கும், பரந்தன் 7.50 க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56 க்கு வந்தடையும்.
மீண்டும் காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்தப் புகையிரதம் பளையில் இருந்து 10.31 க்கும், கொடிகாமத்தில் இருந்து 10.48 க்கும், சாவகச்சேரியில் இருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், யாழ்ப்பாணத்தில் இருந்து 2.39 க்கும், சாவகச்சேரியில் இருந்து 2.59 க்கும், கொடிகாமத்தில் இருந்து 3.11 க்கும் புறப்பட்டு, பளையை 3.38 க்கும், கிளிநொச்சியை 3.56 க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10 க்கு
 வந்தடையும்.
மீண்டும் முறிகண்டியில் இருந்து 4.40 க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல் நகரை 4.46 க்கு வந்தடைந்து. கிளிநொச்சியில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனில் இருந்து 5.06 க்கும், பளையில் இருந்து 5.30 க்கும் புறப்பட்டு 6.44 க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20 க்கு காங்கேசன் 
துறையை அடையும்.
இடையில், பரந்தனில் இருந்து 5.04 க்கும், ஆனையிறவில் இருந்து 5.14 க்கும் புகையிரதம் புறப்படும்.
சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிகள் : 03
சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டி : 01
அனைத்து புகையிரத நிலையங்களிலும் 
நிறுத்தப்படும்.
யாழ் – கிளிநொச்சி புகையிரத சேவைக்கான கட்டணம் 90 ரூபா எனவும், அதிகரித்த டீசல் செலவுகள், பஸ் கட்டணங்கள் காரணமாக யாழ். மக்களுக்காக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் யாழ். புகையிரத நிலைய அத்தியட்சகர் ப. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக