நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

வெள்ளி, 29 மே, 2020

பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை 
ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பொதுவாக
 காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த நேரங்களில் மணிக்கணக்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டும். அதுவும் முன் அனுபவம் இல்லாத ஓட்டுநராக
 இருந்தால் இன்னும் அதிக மன உளைச்சல் மற்றும் மன 
அழுத்தம் ஏற்படும்.
மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இறுதியில் இதயத்தைப் பாதிக்கும். இந்த சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அது வாகனம் ஓட்டும்போது சரியான இசையைக் கேட்பதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக இசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இசைக்கு மயங்காத உயிர்கள் 
இவ்வுலகில் இல்லை.
இசை என்பது மனித வாழ்வோடு இணைந்த ஒன்று. உலக கலாச்சாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கியத்துவம் உள்ளது. பண்டைய காலத்தில் தமிழ்மொழியில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை முத்தமிழ் என்று அழைத்தனர். அந்தளவிற்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இசைக்கும் மருத்துவ உலகிற்கும் கூட இணைப்புள்ளது. இசைக்கு ஒரு விதமான மருத்துவ குணமுண்டு என்பது அனைவரும் 
அறிந்த ஒன்றே.
மூளை ஆரோக்கியம்,ஞாபக சக்தி,ஒருங்கிணைக்கும் திறன்,ஹார்மோன் மாற்றங்கள்,மன அழுத்தம் குறையும், புத்துணர்ச்சி பெறுவது,மனச்சோர்வு நீங்குவது,இதய துடிப்பைச் சீராக்கும்,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்,மன நலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது.
கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி, மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக வாகனம் ஓட்டுதல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இதய நோயாகவும் மாற வாய்ப்பிருப்பதாக 
கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , 20 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அதிக போக்குவரத்தில் வாகனம் ஓட்டுதல் மன அழுத்தத்தையும், முன் அனுபவம் இல்லாத வாகன ஓட்டுநர்களால் கவலையடைவதும் இதய நோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் 
ஆராய்ச்சியாளர்கள்.
பிரேசிலின் மராலியாவில் உள்ள சாவோ பாலோ மாநில பல்கலைக்கழகம், யுனைடெட் கிங்டமில் உள்ள ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியில் உள்ள பார்மா பல்கலைக்கழகம் ஆகிய பல ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி 
இவ்வாறு கூறப்படுகிறது.
அடிக்கடி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நீண்ட காலமாக உரிமம் பெற்றவர்கள் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் மன அழுத்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு 
இருக்கிறார்கள். இரு வெவ்வேறு சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். பங்கேற்பாளர்கள் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் 3 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் கடக்க வேண்டும். அப்போது, பங்கேற்பாளர்கள் வாகனம் ஓட்டும்போது காரில் எந்த
 இசையையும் கேட்கவில்லை.
மற்றொரு நாளில், அதே இயக்கங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இந்த முறை வாகனம் ஓட்டும்போது பங்கேற்பாளர்கள் இசையைக் கேட்கலாம். ஒவ்வொரு சோதனை 
நிலையிலும் இதயத்தில் மன அழுத்தத்தின் விளைவை அளவிட, புலனாய்வாவார்கள் பங்கேற்பாளர்களிடம் இதய துடிப்பு மானிட்டர்களை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதியில் வாகனம் ஓட்டும்போது இசையைக் கேட்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நோயாளிகள் இசையை கேட்கும்போதும், பாடும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை, ‘அல்ஸைமர்’ எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாக 
அமைகிறது.
நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. பதற்றம் மற்றும் கவலைகளை குறைக்கிறது. இதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனதை அமைதிப்படுத்தும் 
சக்தி இசைக்கு உண்டு.
இசையைக் கேட்பவர்களைவிட, அதைக் கற்றுக்கொண்டு இசைப்பவர்களின் மூளையில் சில நல்ல தாக்கங்கள் ஏற்படுகின்றதாக கூறப்படுகிறது. இசையைக் கற்றுக்கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அதை வாசிப்பவர்களின், பாடுபவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகிறது.
ஒருவர் இசைகேட்பதால் அவரின் வாழ்க்கை முறையை, விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்வரை இசை கேட்பது மிக நல்லது. இன்றைய சூழலில் தூக்கமின்மை மிகப் பெரும் பிரச்சனை. எனவே, தூங்குவதற்கு முன்னர் இசையைக் கேட்டால் நிம்மதியான தூக்கம் பெறலாம்.
உலகை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மட்டும் இல்லையென்றால் எத்தனையோ பேர் இன்று மன அமைதியைத் தொலைத்திருப்பார்கள் 
என்பது நிற்சயம் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - நீங்கள் வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா அப்படின்னா இதைப் படிங்க

நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஞாயிறு, 24 மே, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.24-05-20. இன்று மாலை வரை 1106 ஆக உயர்ந்துள்ளது.இதில் குவைத்தில் இருந்து வந்து திருகோணமலை 
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 17 பேர் உள்ளடங்குகின்றனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக 
உயர்ந்துள்ளது.24-05-20..இன்று மாத்திரம் குணமடைந்த 14 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.411 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.கொரோனா குணங்குறிகளுடன் 97 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இலங்கையில் கொரோனா
 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094 ஆக உயர்ந்துள்ளது.இதில், குவைத்தில் இருந்து 
வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருக்கும் 5பேர் இன்று கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.இன்று மாத்திரம் குணமடைந்த 14பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.407பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

சனி, 23 மே, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அடையாளம்
 காணப்பட்டவர்களில் 409 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின்
 தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.மேலும், தொற்று உறுதியாகியவர்களில் 660 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரோனா தொற்று இலங்கையில் மேலும் அதிகரித்துள்ளது

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

வெள்ளி, 22 மே, 2020

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது
 என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற 
நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில்
 எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா
 அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

புதன், 20 மே, 2020

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இல்லை என பொது சுகாதாரம் தொடர்பான பிரதி 
சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.20-05-20..இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு
 குறிப்பிட்டுள்ளார்.இலங்கை சமூகத்திற்குள் நோயாளிகள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 20 நாட்களாக ஒரு நோயாளியேனும் சமூகத்திற்குள் இருந்து பதிவாகவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியான ஆறுதல் செய்தி

கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

யாழ் குடாநாட்டில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் 
கொரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே, இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக 
தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் எனவும் கேட்டுகொண்டார்.உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் 
தெரிவித்தார்.தற்பொழுது 
கொரோனா நோய் தொற்று அபாயம் தொடர்பில் நாம் அனைவரும் செயற்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வரும் 
நிலையில், தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது 
மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.எனவே மக்கள் கொரோனா 
மற்றும் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரோனாவை தொடர்ந்து யாழில் காத்திருக்கும் மற்றுமொரு பேராபத்தாம்

மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்

செவ்வாய், 19 மே, 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை சிறப்பான திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட என்னும் பிரதேசத்தை சேர்ந்த தர்ஷன மற்றும் பவனி ஆகிய இருவருக்குமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணத்தை 
தாமதப்படுத்த நேரிட்டது. எனினும், திருமணத்தை பிற்போடுவற்கு பதிலாக வேறு வகையில் நடத்த திட்டமிட்டனர்.அதற்கமைய திருமண சம்பிரதாயங்களை மாத்திரம் செய்துவிட்டு திருமண வைபவத்திற்கான பணத்தில் பிரதேசத்தில் குறைந்த 
வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய இருவரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  திருமண ஆடையுடனேயே உதவிகளை செய்த இந்த தம்பதியின் செயலை பிரபல சர்வதேச
 ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.இந்தச் சிறப்பான செயலை பார்த்த அவர்களது உறவினர்கள் பல்வேறு பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் 
வெளியிட்டுள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மாத்தறையில் சர்வதேசப் புகழ்பெற்ற இலங்கை தம்பதிகளின் திருமணம்

நாட்டில் ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று

வெள்ளி, 15 மே, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஒன்றரை மாத குழந்தை பாதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் பதிவாகி உள்ளது.நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 8 பேர் கடற்படையினர் எனவும், இருவர் அவர்களின் உறவினர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இருவர்களில் ஒன்றரை 
மாத குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இதற்கு முன்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படைச் சிப்பாயின் ஒன்றரை மாத  குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று

நாட்டில் மதுபானசாலைகளின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

வியாழன், 14 மே, 2020

மதுபானசாலையைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது
.நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் மதுபான சாலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி 
மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டது.
எனினும் அன்றைய தினத்துடன் மறு அறிவித்தல்வரை மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தன.இந்த நிலையில் 3 வாரங்களின் பின்னர் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுபான சாலைத் திறப்பதற்கு 
அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மதுபானசாலைகளின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் கட்டமைப்பின் புதுப்பித்தல் பணிகள்காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் மாகாண பிரதான அலுவலகம் மூலம் 
அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்.18-05-20.. திங்கட்கிழமை வரை வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிமாக
 ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் 18-05-20..திங்கட்கிழமை முதல் வழமைப் போல் வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - நாட்டில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பித்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

பதற வைக்கும் உண்மை கொரோனாவிற்கு பிடித்த மனிதனின் முக்கிய உறுப்பு.

புதன், 13 மே, 2020

கொரோனா வைரஸ் நுரையீரல் மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உள்ளது, அதேசமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 
2,92,804 ஆக உயர்ந்துள்ளது.இது நாள் 
வரையில் கொரோனா நுரையீரலை தாக்கி முச்சுதிணறல் ஏற்படுத்துகிறது என்றுதால் சொல்லப்பட்டு வந்தது, ஆனால் அவை சிறுகுடலையும் தாக்குகிறது
 என சீன ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.அதாவது, வாய் வழியாக 
மனைத உடலுக்குள் நுழையும் கொரோனா சிறுகுடலில் உள்ள ஏசி-2 என்ற புரதத்தை கொரோனா வைரஸ் விரும்பி
 உண்கிறதாம். இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு பின்வரும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை,குடலை கொரோனா தாக்கினால் வயிற்றுப்போக்கு
, வாந்தி, அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படும்.சிறுகுடலை கொரோனா தாக்கியிருந்தால் கொரோனா வைரஸ் மனித மலத்திலும் காணப்படுகிறது.நுரையீரலை கொரோனா முழுவதுமாக தாக்கினாலும், அடுத்து சிறுகுடலில் அவை வாழத் 
துவங்கிவிடுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - பதற வைக்கும் உண்மை கொரோனாவிற்கு பிடித்த மனிதனின் முக்கிய உறுப்பு.

நாளை முதல் இரு மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் சேவைகள்

செவ்வாய், 12 மே, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள இடங்களில் பேருந்துகளின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சு அறிவித்துள்ளது
.இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார்துறை பேருந்துகளுக்கு
 இது பொருந்தும்.ஏற்கனவே 3 அடிக்கு ஒரு ஆள் என்ற அடிப்படையிலான சமூக இடைவெளியில் பயணிகளை ஏற்றிச்செல்ல 
வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.எனினும், இதற்கு தனியார்துறை தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுப்பெற்றிருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாளை முதல் இரு மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு போக்குவரத்துச் சேவைகள்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 61 பேர் குணமடைந்து வெளியேற்றம்

ஞாயிறு, 10 மே, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் இன்றைய தினம் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் 
எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது
.இந்நிலையில், இதுவரை 847 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் 
காணப்பட்டுள்ளார்கள்.அத்துடன் தற்போது வைத்தியசாலையில் 517 கொரோனா 
நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும்
, நோய்த் தொற்று சந்தேகத்தில் 116 பேர் மருத்துவ 
கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ள நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 61 பேர் குணமடைந்து வெளியேற்றம்

ஹட்டனில் பாரிய தீ விபத்து 8 வீடுகள் எரிந்து 80ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதி

சனி, 9 மே, 2020

இலங்கை மத்திய மலைநாட்டின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை 3 ஆம் பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (09.05.2020) மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் முற்றாக 
எரிந்து தீக்கிரையாகின.
இதனால் 89 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது
 இடம்பெற்று வருகின்றன.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குளேயே இருந்துள்ள நேரத்தில், திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடி சென்றுள்ளதாகவும், இதனையடுத்து 
பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால் சமூக
 இடைவெளியை பின்பற்றி உரிய 
வகையில் இருக்குமாறு
 பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. மேலும், இத் தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள் முக்கிய ஆவணங்கள் தங்க
 நகைகள் பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக மக்கள் 
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு 
பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையெனவும், தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகள் 
தொடர்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - ஹட்டனில் பாரிய தீ விபத்து 8 வீடுகள் எரிந்து 80ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கொழும்பில் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது.புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், கண்டி 
மாவட்டத்தில் 13 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனா நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 
தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக 
அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை சிப்பாய்கள் 393 பேரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.எப்படியிருப்பினும் ஆபத்துகள் அதிகம் உள்ள பிரதேச மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளில் கொரோனா தொற்றவில்லை என்பது மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம் என மத்திய கொழும்பு 
சுகாதார அதிகாரி தம்மிக்க அதிகாரிவத்தகே தெரிவித்துள்ளார்.இந்தச் சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கொழும்பில் அதிகரிப்பு

வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

வெள்ளி, 8 மே, 2020

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், உணவகங்களில்
 பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.தற்போது
 மிகவும் ஆபத்தான கொரோனா தொற்றுநோய் பரவி வருவதனால் உணவகங்களில் உணவு உண்ணும் போது 
பின்வரும் நடைமுறைகளை அவதானமாகக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இயலுமானவரை 
உணவினை வாங்கிச் சென்று உண்ணுங்கள்.உணவகத்தின் உள்ளே 
இருவருக்கு இடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உணவு
 கையாளும் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும் சுத்தமாக இருப்பதையும் உறுதிப்படுத்துங்கள்.உணவு 
கையாளும் நிறுவனத்தில் கடமையாற்றும் வேலையாள்கள், 2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு சரியான முறையில் 20 செக்கன்களாவது கைகளை 
கழுவுவது உறுதி செய்யப்படவேண்டும். உள் நுழையுமிடத்தில் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கான
 வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.சிறிதளவேனும் காய்ச்சல், இருமல், தொண்டை நோ போன்ற கோரோனா 
தொற்றின் குணங்குறிகளுடைய வேலையாள்கள் எவரும் உணவு கையாளும் நிறுவனத்தினுள்ளோ வளவினுள்ளோ
 கடமையில் ஈடுபடலாகாது. பொதுமக்கள் உணவங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தங்களது பகுதிப் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு மேற்கொள்ள முடியும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - வடமாகாண மக்களுக்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளிற்காக நாளை (9) சனிக்கிழமையும் யாழின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமையும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் பராமரிப்புப் பணியென கூறப்பட்டது.
கடந்த சனிக்கிழமையும், நாளைய சனிக்கிழமையும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதி.
 கொரொனாவை கட்டுப்படுத்த மக்கள் வீடுகளிற்குள் தங்கியிருக்க வேண்டும் என அரசு அறிவித்து வரும் நிலையில், மின் துண்டிப்பு நடைபெறுகிறது.வீடுகளிற்குள் முடங்கியிருக்கும் மக்களிற்கு மின்சாரம் மிக அவசியமான தேவைகளில் ஒன்று
. மக்களை வீடுகளிற்குள் முடக்கி வைத்திருக்க, அரசுக்கும் மின்சாரம் தேவை. ஆனால், இரண்டு தரப்பு பார்வையிலும் இந்த
 விவகாரத்தை நோக்காமல், யாழில் அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுகிறது.இது மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் முடுக்கி 
விடப்படுகிறது. அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டியது அவசியம். மக்களை வீடுகளிற்குள் தங்க வைப்பதற்கு எதை செய்ய முடியுமோ, அதை அரச 
நிறுவனங்கள் செய்ய வேண்டியது அவசியம்.ஆனால், யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு அந்த வகையானது அல்ல. அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், இரண்டு நாட்கள் பகல் பொழுது முழுவதும் மின் துண்டிப்பை
 மேற்கொண்டு, சாதாரண காலத்தில்
 மின்சாரசபை மேற்கொள்ளும் பராமரிப்பு பணிக்கு இது உகந்த தருமணமல்ல.யாழில் அமுல்ப்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து தொடர்புடைய அதிகாரிகள், அரச அதிபர், வடக்கு ஆளுனர் கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.நாளை காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை மின்வெட்டு 
அமுல்ப்படுத்தப்படும் இடங்கள்-

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - யாழில் மக்களை வீடுகளுக்குள் முடக்கி விட்டு பாரிய மின் வெட்டு

பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

வியாழன், 7 மே, 2020

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே 
கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டு மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.அத்தியாவசிய அலுவலக கடமைகளைத் தொடங்கும் போது ஊழியர்களின் போக்குவரத்தினை எளிதாக்குவதற்கு 
தேவையான வகையில் அலுவலக ரயில்களை பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பத்து முக்கியமான ஆலோசனை குறிப்புகள் வழங்கப்படவுள்ளது
. இந்நிலையில், இதற்கு இணங்காத பயணிகள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார், இராணுவம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைகள் எச்சரிக்கையுடன் இருப்பதாக 
ரயில்வே கட்டுப்பாட்டாளர் திலந்த பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.ரயில் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,பயணிகளுக்கு இடையில் ஒரு மீட்டர் தூரத்தை 
கடைபிடித்தல்,ரயில் நிலையத்தில் கைகளை கழுவுதல்,கிருமிநாசினி தெளித்தல்ரயில் நிலையத்திற்கு
 சீக்கிரம் வந்து சேருதல்,ரயிலில் பயணிப்பதற்கு குறுந்தகவல் பெற்றிருத்தல்,கூட்டாக ஒன்றுகூடுவதை தவிர்த்தல்,எச்சில் துப்புதல் மற்றும் குப்பை போடுதலை தவிர்த்தல்,பொதுக் கழிப்பறைகள் பயன்படுத்தவதனை முடிந்தளவு
 தவிர்த்தல்,ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே பயணித்தல்,போன்ற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதென ரயில்வே கட்டுப்பாட்டாளர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பணிக்குச் செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு 11 ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 29 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
 சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நோயாளிகளில் 24 பேர் கடற்படை சிப்பாய்கள் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய
 நோயாளிகள் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய நால்வர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி பழகியவர்கள் என 
தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நால்வருக்குள் 7 வயது சிறுவனும் உள்ளடங்குவதாக சுகாதார பணிப்பாளர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் 7 வயது சிறுவனுக்கும் கொரோனா.நேற்று 29 பேருக்குத் தொற்று

கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

ஞாயிறு, 3 மே, 2020

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிய முதலாவது நபர், ஹங்குராங்கெத்த திக்கல்பொத்த பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.வெலிசறை
 கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து 
செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் முகாமுக்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்த காலப்பகுதியில் இவர் பலருடன் தொடர்பை பேணியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 50 பேர் வரை தொடர்பை பேணியுள்ளனர் என்றும், இவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும், கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகளை தியத்தலாவை கொரோனா
 தொற்று தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிகில்கஸ்கட பொதுச் சுகாதார பரிசோதகர் ராஜநாயக்க தெரிவித்தார்.  குறித்த கடற்படை
 சிப்பாய் முகாமுக்கு சென்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே கொரோன தொற்று
 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கொரோனா நுவரேலியாவிற்குள்ளும் புகுந்தது முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு

இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

வெள்ளி, 1 மே, 2020

ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை
 தீர்மானித்துள்ளது.ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான
 சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக்கூடியவர்களை துரிதமாக பதிவு செய்துகொள்ளுமாறு அதிகார சபை 
அறிவுறுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - இலங்கை அரசு மருத்துவப் பொருட்களை துரித கதியில் விநியோகம் செய்ய திட்டம்

இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் 
ஆலோசனைக்கமைய, இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் இந்த உறுதிப்படுத்தும் சேவை முன்னெடுக்கப்படுவதாக 
கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தச் சேவையினூடாக 2001ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம்
 நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்கீழ் வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள், வௌிநாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பரீட்சை விண்ணப்பதாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அங்கீகரித்து உறுதி
செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன.பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக விண்ணப்பதாரர்கள் தமது பெறுபேற்றை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - இணையத்தள சேவையை இலங்கை மாணவர்களுக்கு ஆரம்பித்தது பரீட்சைகள் திணைக்களம்