மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடுகளை மக்கள்
 சந்தித்துள்ளனர்.
வீதிக்கு குறுக்காக மரம் முறிந்து விழுந்ததனால் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த 
கிராம மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் முள்ளியவளை காவல்து​றையினர் ஆகியோர் இணைந்து வீதியிலுள்ள மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

வியாழன், 29 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில்
 29-04-2021.இன்று
ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் 
அடைந்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலயம் .26-04-2021.இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக இன்றைய தினம் குறித்த பாடசாலை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டு போட்டி  விமரிசையாக இடம்பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த பாடசாலை,விளையாட்டு மைதானம் தனிமைப்
 படுத்தப்பட்டுள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

சனி, 24 ஏப்ரல், 2021

 நாட்டில் தபால் திணைக்களத்துக்கு புதிதாக 3,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாகாண மட்டத்திலேயே இணைக்கப்பட்டனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைக்கப்பட்டனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நாட்டில் சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று
 இடம்பெறவுள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு 
இடம்பெறவுள்ளது.
அத்துடன் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, புற்றுநோயை ஏற்படுத்த கூடிய
 இரசாயனம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்களை இந்த 
வாரத்தில் மீள் ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுங்கப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஃப்லடொக்ஸின் எனப்படும் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் அண்மையில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறித்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஒரு நாளில் அதிகூடிய வருமானத்தை பெற்றுள்ளது
கடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு இலாபத்தினைப் பெற்று சாதனை
 படைத்துள்ளது.
வழமையாக நாளொன்றிற்கு 14,000 தொடக்கம் 15,000 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், கடந்த (12) திங்கட்கிழமை 27 ஆயிரத்து 600 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்களை விற்பனை செய்துள்ளது.
கடற்றொழில் கூட்டுத்தாபன வரலாற்றிலேயே இது வரையிலும் 20 ஆயிரம் கிலோ கிராமுக்கு அதிகமான மீன்களை விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 

READ MORE - ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்

  சமூர்த்தி கொடுப்பனவு ரூ .5 ஆயிரம்  இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி 
தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தற்போது, ​​இலங்கையில் 1,073 சமுர்தி வங்கிகளில் ரூ .5 ஆயிரம் என்ற சமூக பாதுகாப்பு நல உதவித்தொகையை அரசாங்கம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் அனைவருக்கும் இந்த கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய 
எதிர்ப்பார்த்துள்ளோம்.
இதற்கு தேவையான நிதியை சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம். இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை எங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக் கொள்ளுமாறு நாம் கோரியுள்ளோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

READ MORE - நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சனி, 17 ஏப்ரல், 2021

¨அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  ; கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர் 
 பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான ; கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் 
பாதிக்கப்பட்டுள்ளது. 
 நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனால் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடாத்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவு செய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல 
நேரிடுகின்றது. 
 இது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேற  திசைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது. கடற்றோழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவர்கள் அதிக ; மூலதனங்களை செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்குச்  ; சென்று வெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நடாத்திவருவதாக மிகவும் கவலை 
தெரிவிக்கின்றனர். 
 ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்கின்றனர் ஆழ் கடலில் ; நீரோட்டத்தில் அடிக்கடி  போது ஏற்படும் சுழலினால் வலைகள்  சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன என எமக்கு தெரிவித்தனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், சித்திரை புத்தாண்டு 
காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த
 சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு

ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது

வியாழன், 8 ஏப்ரல், 2021

நாட்டில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜஹ்ரான் ஹாசிமை பின்பற்றும் இருவரே இவ்வாறு 
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 2018 இல் இவர்கள் ஒலுவில் பகுதியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பியுள்ளனர் என காவல் துறை  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளை தளமாக கொண்டபயங்கரவாத தீவிரவாத அமைப்புகளின் கருத்துக்களை உள்ளடக்கிய காணொளிகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
இவர்கள் தங்கள் வகுப்புகளின் போது மாணவர்களை உடற்பயிற்சிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது

தேங்காய் களில் ற்றுநோய் காரணிகளை கொண்டடவை இன்னும்

திங்கள், 5 ஏப்ரல், 2021

இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் காரணிகளை கொண்ட தேங்காய் எண்ணெயை இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் களஞ்சியசாலையில் வைத்திருப்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ரோஹினி கவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள முறையை மாற்ற, அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தால் இதுவரை முடியவில்லை என்றும் அது மக்களின் கனவு மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - தேங்காய் களில் ற்றுநோய் காரணிகளை கொண்டடவை இன்னும்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

சனி, 3 ஏப்ரல், 2021

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 
கோரப்பட்டுள்ளன.
 இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் 
தெரிவித்துள்ளது. 
 க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு
 விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது 
உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது
 வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். 
 விண்ணப்பப் படிவங்கள்  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து 
பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை
 இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய 
பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ; ரஜபிகில்ல மாவத்தை,  கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்
கொள்ள முடியும்.
 முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், CEWET மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இம் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது 

நிலாவரை.கொம் செய்திகள் >>>READ MORE - இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்