கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சனி, 17 ஏப்ரல், 2021

¨அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  ; கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர் 
 பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான ; கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் 
பாதிக்கப்பட்டுள்ளது. 
 நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனால் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடாத்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவு செய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல 
நேரிடுகின்றது. 
 இது குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேற  திசைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது. கடற்றோழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவர்கள் அதிக ; மூலதனங்களை செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்குச்  ; சென்று வெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நடாத்திவருவதாக மிகவும் கவலை 
தெரிவிக்கின்றனர். 
 ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்கின்றனர் ஆழ் கடலில் ; நீரோட்டத்தில் அடிக்கடி  போது ஏற்படும் சுழலினால் வலைகள்  சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன என எமக்கு தெரிவித்தனர். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக