தங்கபுரம் பகுதியில் மீனை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

புதன், 28 பிப்ரவரி, 2018

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தங்கபுரம் பகுதியில் இடம்பெற்றது.
உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் எனத் 
தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - தங்கபுரம் பகுதியில் மீனை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

கரடியனாற்றில் இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே நேற்று இரவு தீயில் கருகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. சம்பவ தினம் தனது வீட்டில் இப்பெண் பகல் போசனம் சமைத்துக்
 கொண்டிருந்துள்ளார்.
அதன் பின்னர் மாலையாகியும் வீட்டில் எதுவித நடமாட்டங்களும் இல்லாததால் அயலிலுள்ளவர்கள் மாலை 5 மணியளவில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இளம்பெண் தீயில் கருகிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பெண் மரணித்து விட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் வலிப்பு நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும் பெற்றோரின் தயவில் பெண்; வாழ்ந்து வருவதாகவும் அப்பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் 
தெரிவித்துள்ளனர்..
சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில்
.ஈடுபட்டுள்ளனர்/
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கரடியனாற்றில் இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

காணாமற்போன குடும்பஸ்தர் யாழில் எலும்புக்கூடாக இன்று மீட்பு

சனி, 17 பிப்ரவரி, 2018

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.
எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம்சுரேஸ்குமாா் வயது 56 என ஆடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறிச் சென்றுள்ளாா்.
இவ்வாறு ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இவா், இன்று காலை எழுதுமட்டுவாள் நாகா்கோயில் குளத்துக்கு அருகில் எரிந்து எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு 
வருகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - காணாமற்போன குடும்பஸ்தர் யாழில் எலும்புக்கூடாக இன்று மீட்பு

புகை­யிலைக்கு பதி­லாக யாழில் கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.
இதன் முதற்­கட்­ட­மாக கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட  விவ­சாய போத­னா­சி­ரியர்  திரு­மதி சசி பிரபா 
கைலேஸ்­வரன் தெரி­வித்தார்.
மேலும்,2020 ஆண்­டுடன் புகை­யிலைப் பயிர்ச்­செய்­கையை நிறுத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளதால் அதற்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் நின்று பயன்­தரும் மிளகாய்  செய்கை என்­பன 
அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.
வறள் நிலத் தாவ­ர­மான கற்­றா­ழையை தோட்ட நிலத்தில் மட்­டு­மல்ல திருத்தி அமைக்­கப்­ப­டாத நிலங்­க­ளிலும் செய்கை பண்­ணலாம். கற்­றாழை ஒரு கிலோ கிராம் 150 ரூபா­வுக்கு மேல் விற்­ப­னை­யா­கின்­றது
. நல்ல விளைச்­சலில் ஒரு மடல் தண்டு 700 கிரா­முக்கு குறை­யாத நிறை உடை­ய­தாக இருக்கும். செய்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு உத­விகள் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் செய்து தரப்­படும் என வும் தெரிவித்தார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - புகை­யிலைக்கு பதி­லாக யாழில் கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

கிண்ணியாவில் வான்- டிப்பர் மோதி கோர விபத்து! சிறுமி மரணம்!!

கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் சென்ற சிறுமி நேற்றிரவு (15) 10.40 மணியளவில்
 உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99ம் கட்டையில் வசித்துவரும் யூசுப் யனீயா 
(ஒன்றரை வயது) எனவும் தெரியவருகின்றது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது 99ம் கட்டைப்பகுதியில் வசித்து வரும் காத்தான்குடியைச்சேர்ந்த ஹாரூன் (பலசரக்குக்கடை) தனது உறவினர்களை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த வேளை, 
அவரது வேனுக்கு காற்று போய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதினாலேயே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - கிண்ணியாவில் வான்- டிப்பர் மோதி கோர விபத்து! சிறுமி மரணம்!!

உந்துருளி மோதி கோர விபத்து தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில்
 நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய தந்தையும், அவரது 6 வயது மகனுமே இந்த விபத்தில் பாலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்து இடம்பெற்ற போது 
உத்துருளியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>READ MORE - உந்துருளி மோதி கோர விபத்து தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

உங்கள் குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

குழந்தையின் அழகான தகவல் தொடர்பு மொழி தான் இந்த அழுகை.
பசி, தூக்கம், ஏதேனும் அடிபட்டுவிட்டாலோ, அல்லது பூச்சிகள் கடித்து விட்டாலோ அழுகும் என்று தான் நாம் நினைத்து 
வருகிறோம்.
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் குழந்தைகள் ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் வரையில் அழும் என்று. குழந்தை அதிகமாக அழுதால் அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் என்பதை இப்பதிவில் நாம் 
பார்க்க போகிறோம்.
குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர் விடாமல் அழுதால், நிச்சயம் பசிக்காக இருக்காது, தாகத்திற்கு தான் அழும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தும் வகையில் நல்லிரவில் அழுவார்கள்.
அச்சமயம் ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும். மேலும் நீண்ட நேரம் நிலைக்கும் டயப்பரை குழந்தைக்கு இரவு நேரத்தில் உபயோகப்படுத்துவது குழந்தைக்கு 
நல்லதாகும்.
குழந்தையை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும், கனமான மற்றும் உறுத்தலாக இருக்க கூடிய ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம்.
ஆனால் இப்படிப்பட்ட ஆடைகள் அணிவதால் இறுக்கமாகவும்,
 கனமாவும் உணரும் சிறுபிள்ளைகள் அழத்துவங்குகின்றனர். ஆகையால் மிருதுவான இழைகளால் ஆன ஆடைகளை அணிவித்து விட வேண்டியது அவசியமாகும்.
சில நேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையும் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.
குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும்.
பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும், வாந்தி வருவது போலிருக்கும்.
இதனாலும் குழந்தை அழவதுண்டு. தொட்டிலில் போட்டு ஆட்டுவது போன்றவை குழந்தைக்கு களைப்பையும் சோர்வையும் உண்டாக்கும். இதனால் குழந்தை அழுது கொண்டே
 இருக்கும்.
குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். குழந்தையை தூக்குவதில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று 
நினைக்கும் போது அழும்.
அப்போது விளையாட்டு காட்டுவது, பொம்மைகளை தருவது, அல்லது மடியில் எடுத்து படுக்க வைத்துக் கொண்டாலே போதும் குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - உங்கள் குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல

இலவச இணைய வசதிகள் ஏப்ரல் முதல் பாடசாலைகளுக்கு

புதன், 7 பிப்ரவரி, 2018

    பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் முதல்  இலவச இணைய வசதிகள் வழங்கப்படும் என பிரதமர்  தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வருடத்தில் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலவச இணைய வசதிகள் ஏப்ரல் முதல் பாடசாலைகளுக்கு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு:

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவிருக்கின்ற 70ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக, சதோச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக்
 குறைத்துள்ளது என சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.சதோச நிறுவனத்தின் ஊடாக சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் 
என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதோடு, மக்கள் இதன் மூலம் பாரிய அளவில் நன்மையடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி;
ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவிற்கும்
ஒரு கிலோ அரிசி 60 ரூபாவிற்கும்
500 கிராம் பெரிய வெங்காயம் 55 ரூபாவிற்கும்
500 கிராம் செத்தல் மிளகாய் 110 ரூபாவிற்கு
500 கிராம் பருப்பு 54 ரூபா 50 சதத்திற்கும்
விற்பனை செய்யப்படுவதாகவும், சதோச நிறுவனத்தின் 
பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு: