உங்கள் குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

குழந்தையின் அழகான தகவல் தொடர்பு மொழி தான் இந்த அழுகை.
பசி, தூக்கம், ஏதேனும் அடிபட்டுவிட்டாலோ, அல்லது பூச்சிகள் கடித்து விட்டாலோ அழுகும் என்று தான் நாம் நினைத்து 
வருகிறோம்.
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் குழந்தைகள் ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் வரையில் அழும் என்று. குழந்தை அதிகமாக அழுதால் அதற்கு என்னவெல்லாம் காரணங்கள் என்பதை இப்பதிவில் நாம் 
பார்க்க போகிறோம்.
குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர் விடாமல் அழுதால், நிச்சயம் பசிக்காக இருக்காது, தாகத்திற்கு தான் அழும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தும் வகையில் நல்லிரவில் அழுவார்கள்.
அச்சமயம் ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும். மேலும் நீண்ட நேரம் நிலைக்கும் டயப்பரை குழந்தைக்கு இரவு நேரத்தில் உபயோகப்படுத்துவது குழந்தைக்கு 
நல்லதாகும்.
குழந்தையை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும், கனமான மற்றும் உறுத்தலாக இருக்க கூடிய ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம்.
ஆனால் இப்படிப்பட்ட ஆடைகள் அணிவதால் இறுக்கமாகவும்,
 கனமாவும் உணரும் சிறுபிள்ளைகள் அழத்துவங்குகின்றனர். ஆகையால் மிருதுவான இழைகளால் ஆன ஆடைகளை அணிவித்து விட வேண்டியது அவசியமாகும்.
சில நேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையும் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.
குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும்.
பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும், வாந்தி வருவது போலிருக்கும்.
இதனாலும் குழந்தை அழவதுண்டு. தொட்டிலில் போட்டு ஆட்டுவது போன்றவை குழந்தைக்கு களைப்பையும் சோர்வையும் உண்டாக்கும். இதனால் குழந்தை அழுது கொண்டே
 இருக்கும்.
குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். குழந்தையை தூக்குவதில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று 
நினைக்கும் போது அழும்.
அப்போது விளையாட்டு காட்டுவது, பொம்மைகளை தருவது, அல்லது மடியில் எடுத்து படுக்க வைத்துக் கொண்டாலே போதும் குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக