வருகிறது இலங்கை.7,500 மெற்றிக் தொன் டீசல் அரச தரப்பிலிருந்து தகவல் கசிவு

வியாழன், 30 ஜூன், 2022

 

தற்போதைய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானிதுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பணப்பரிமாற்றம் நிறைவடைந்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளிடம் இருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்வது பற்றிய பேச்சுவார்த்தைகளும், உலக நாடுகளுக்கான பயணங்களும் 
அதிகரித்துள்ளன.
இருந்தும் எவரிடம் இருந்தும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ரஷ்ய அரச தலைவர் புடினுடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில், நெருக்கடி நிலையை சரி செய்ய யூலை 10 ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் என்றவாறு விநியோக சேவை மட்டுப்படுத்தபட்டாலும் கூட, தற்சமயம் அரசின் அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்கு மாத்திரம் பயன்பாடும் அளவே எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதற்குள் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 15 மணித்தியாலங்களாக மின்துண்டிப்பு அதிகரிக்கும் என மின்சார சபை எச்சரித்துள்ளது.

சகல அத்தியாவசிய சேவைகளும் முடங்குவதை தவிர்க்கும் முகமாக அரசாங்கள் பல வழிகளில் எரிபொருள் பெறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இலங்கையில் இருப்பதாக அகழ்வாராச்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - வருகிறது இலங்கை.7,500 மெற்றிக் தொன் டீசல் அரச தரப்பிலிருந்து தகவல் கசிவு

நாட்டில் எரிபொருளாக மாறிய சிறுநீர் வீதியில் தவித்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்

புதன், 29 ஜூன், 2022

எரிபொருள் எனக் கூறி சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் 
தெரிய வருகையில்,
அவசர வேலையாக சென்று கொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு தெல்வத்தை சந்தி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் எரிபொருளின்றி நின்ற நபரை அணுகி எரிபொருள் தேவையா எனக் கேட்டு, தன்னிடம் எரிபொருள் இருப்பதாக கூறியுள்ளார்.
1000 ரூபாய் பணத்திற்கு 375 மில்லி லீற்றர் எரிபொருள்
 பெற்றுக் கொடுக்க குறித்த நபரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பெற்றவர், அதனை 
விற்பனை செய்த நபரிடம் 5000 ரூபாயை கொடுத்து மீதிப் பணத்தை கோரியுள்ளார். அதனை வழங்காமல் அந்த நபர் அங்கிருந்து
 தப்பி சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அந்த நபரை துரத்திச் செல்ல முயற்சித்த போதிலும் மோட்டார் சைக்கிள் இயங்கவில்லை. பின்னரே சிறுநீரை வழங்கி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் எரிபொருளாக மாறிய சிறுநீர் வீதியில் தவித்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்

நாட்டில் மக்களின் நலன்கருதி இலவச பஸ் சேவை அறிமுகம்

செவ்வாய், 28 ஜூன், 2022

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தூரப் பாடசாலைகளுக்கிடையிலான விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இச்சேவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசுகர் கான் (ZDE)தலைமையின் கீழ் இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இச் சேவைக்கு அல் ஹிக்மத்துள் உம்மா பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான கஸ்ஸாலி பாத்திஹ் பூரz அனுசரணையினை 
வழங்கவுள்ளார்.
இச் சேவையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்களின் நலன்கருதி (இரு பஸ் சேவைகள்) கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.1ஆவது பஸ் சேவையானது – கிண்ணியாவில் இருந்து நடுவூற்று, ஊடாக வான்எல வரையிலும், 2ஆவது பஸ் சேவை கிண்ணியாவில் இருந்து முள்ளிப்பொத்தானை வரையிலும் 
நடைபெறும்.
மீண்டும் பாடசாலை முடிவுற்ற பின் இறுதியாக பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தை வந்தடையும்.
குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் சுமார் ஆறாயிரம்(6000) மாணவர்கள் இதன்மூலம் பயனடைய உள்ளார்கள். அத்தோடு, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன் அடைவார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இச் சேவையானது சுமார் ஆறு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும்
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் மக்களின் நலன்கருதி இலவச பஸ் சேவை அறிமுகம்

இலங்கையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

ஞாயிறு, 26 ஜூன், 2022

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்
92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் பெற்றோலுக்காக காத்திருப்பவர்களுக்கு பேரிடியான செய்தி

வெள்ளி, 24 ஜூன், 2022

இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல் .24-06-2022.இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வழங்குனர்களால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கப்பலின் வருகை மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் தாமதத்திற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் பெற்றோலுக்காக காத்திருப்பவர்களுக்கு பேரிடியான செய்தி

நாட்டில் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

புதன், 22 ஜூன், 2022

பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்தார்.
 இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும்
 அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா கொமன்வெல்த்தில் இடம்பிடித்த தமிழ் இளைஞன்

செவ்வாய், 21 ஜூன், 2022

கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன்முதலாக பங்கேற்கவுள்ளார்.
கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக் கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இவர் தேசிய மட்டப்போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இவரது திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டி இந்த கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு 
செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
READ MORE - கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா கொமன்வெல்த்தில் இடம்பிடித்த தமிழ் இளைஞன்

இப்படியானவர்களும் இலங்கையில் இருக்கின்றனர்

திங்கள், 20 ஜூன், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் 
காத்திருக்கின்றனர்.
இவர்களுக்கு நலன் விரும்பிகள் பலர் அவ்வப்போது உணவு மற்றும் பானங்களை வழங்கி வருவதை காணக் 
கூடியதாக உள்ளது.
அந்தவகையில், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார்.
சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று (18) மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில்
 பதிவிட்டுள்ளார்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், அலுத்கம பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் மூன்று நாட்களாக காத்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு “பலாக்காய்” தானமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நலன்விரும்பிகளது செயற்பாடு நெட்டிசைன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - இப்படியானவர்களும் இலங்கையில் இருக்கின்றனர்

இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க புதிய யோசனை

ஞாயிறு, 19 ஜூன், 2022

நாட்டில் உந்துருளிகளின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று
 முன்வைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து ஒன்றிணைந்த செயற்பாட்டு
 மத்திய நிலைய இணைப்பாளர் ஜே.இமாம்டின் இந்த தகவலை கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு நாளாந்தம் 8 லீற்றர் எரிபொருளை பெற்றுக்கொடுக்க இணக்கம் வெளியிடப்பட்டதாக அவர் 
குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க புதிய யோசனை

இலங்கையர்களை தலை சுற்றவைக்கும் எரிபொருள் விலை உயர்வு

வெள்ளி, 17 ஜூன், 2022

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித
 தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஏனைய எரிபொருட்களின் விலைகளையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். இறுதியாக எரிபொருள் விலை அதிகரிப்பு மே 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை74 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 78 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 65 ரூபாவாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் சீராக இயங்க தினமும் 6,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5,000 மெட்ரிக் தொன் பெற்றோல் 
தேவைப்படுகிறது.
இதன்படி, 5,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 11,000 மெட்ரிக் தொன் டீசல் தற்போது இலங்கை பெற்றோல் கூட்டுதாபனத்தில் சேமிப்பு வசதிகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெடரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையர்களை தலை சுற்றவைக்கும் எரிபொருள் விலை உயர்வு

நாட்டில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்என அறிவிப்பு

வியாழன், 16 ஜூன், 2022

இலங்கையில்  இன்னும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் 
அனில் ரஞ்சித் இதனை
 தெரிவித்துள்ளார்.15-06-2022.அன்று ஊடகங்களுக்கு கருத்து
 வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் மின்சாரத் தேவைக்கு போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை.
தற்போதைய தேவை ஒரு நாளைக்கு சுமார் 2,800 மெகாவாட் (MW) ஆகும். எனினும், அனல் மின், காற்றாலை மின், சோலார் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்நியச் செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெப்ரவரி 22ம் திகதி முதல் இலங்கையில் நாளாந்த மின்வெட்டு தொடர்வதாக ரஞ்சித் 
தெரிவித்தார்.
நிலைமையை எளிதாக்க அவசர முயற்சியாக அரசாங்கம் அதன் சோலார் பேனல் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், சூரிய சக்தியை சேமித்து வைப்பதற்கு போதுமான மின்கலம் வங்கிகளை இலங்கையில் நிறுவ வேண்டும் எனவும் 
கூறியுள்ளார்.
தற்போது, ​​இலங்கை தனது பெரும்பாலான மின்சாரத்தை நீர் மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்கிறது, ஆனால் மழை இல்லாத நாட்களில் அது சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, அனல் மின் நிலையங்களுக்கான டீசலை இறக்குமதி
 செய்வதற்கு இலங்கை மாதமொன்றுக்கு சுமார் 100 மில்லியன் டொலர்களை செலவிடுகிறது.எனவே, நாடு உடனடியாக புதுப்பிக்கத்தக்கவைகளுக்கு மாற வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்என அறிவிப்பு

இலங்கையில் பாணின் விலை 1, 790 ரூபாவாக அதிகரிக்கும் அபாயமாம்

செவ்வாய், 14 ஜூன், 2022

இலங்கையில் அதித பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது.இதனால், அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது.
இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது.மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரித்தால், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருளின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாக 
அதிகரிக்கும்.
இதனால், பாணின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாவாக அதிகரிக்கும் என சுனில் ஜயரத்ன மேலு‌ம் 
கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> READ MORE - இலங்கையில் பாணின் விலை 1, 790 ரூபாவாக அதிகரிக்கும் அபாயமாம்

நாட்டில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 
இதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில்
 முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இருப்பினும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்தவாரம் தெரிவித்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமனம்

திங்கள், 13 ஜூன், 2022

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.15-06-2022..அன்று  முதல் அவர் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இவர் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் 
முகாமைத்துவப் 
பணிப்பாளர்களுள் ஒருவராவார்.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜித ஹேரத் கடந்த நாட்களில் பதவி விலகியிருந்த நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முதித்த பீரிஸ் 
நியமிக்கப்பட்டுள்ளார்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கை லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமனம்

இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேர விபரம்

ஞாயிறு, 12 ஜூன், 2022

இலங்கையில்12-06-2022. இன்று. 1 மணித்தியாலம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேர விபரம்

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டி வைத்தியசாலையில் அனுமதி

சனி, 11 ஜூன், 2022

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10-06-2022.அன்று  பாடசாலை மைதானத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றுக்கூடிய போது இந்த அனர்த்தம்
 நேர்ந்துள்ளது.
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டி வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் தங்கப் பிரியர்களா நீங்கள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் கடந்த இரு தினங்களை விட.11-06-2022. இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,300 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 164,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் விலை
 மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - நாட்டில் தங்கப் பிரியர்களா நீங்கள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாட்டில் வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை

வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா இது குறித்து அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணம்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும்  வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாட்டில் வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை

குச்சவெளி மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

புதன், 8 ஜூன், 2022

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார இணைப்பு பெறாத வசதியற்ற 
குடும்பங்கள், வறிய குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீட்டுத் தேவைக்காக இலவசமாக மண்ணெண்ணை வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக இன்று(08) காலை குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவகத்தில் வைத்து, புல்மோட்டை பயன்பாடுகளுக்கான மண்ணெண்ணெய் குச்சவெளி
 பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.ஏ.சீ.எம்.நசார், ஏ. பஸ்மீர், புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர்
 கலந்து கொண்டனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - குச்சவெளி மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செவ்வாய், 7 ஜூன், 2022

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,542 ரூபாவாக 
பதிவாகியுள்ளது.
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,550 ரூபாவாக  பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் 164,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி 
அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக
 குறிப்பிடப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>READ MORE - உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றியது.

திங்கள், 6 ஜூன், 2022

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
05-06-2022.அன்று  இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென
 இவ்வாறு தீப்பற்றியது.
இந்த தீப்பரவலின் போது அந்நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின்உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வந்தனர்.
எனினும் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர்
 தெரிவித்தனர்.
இதன் போது தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நகரசபையின் தீயணைப்பு பிரிவுடன் காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


READ MORE - வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றியது.