நாட்டில் இன்று முதல் மீண்டும் இரவு நேர மின்வெட்டை அமுல்படுத்தல்

புதன், 1 ஜூன், 2022

இன்று முதல் மீண்டும் இரவு நேர மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடந்த சில 
நாட்களாக இரவு நேர மின்வெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் மின்சார சேமிப்பை கருத்திற் கொண்டு இன்று 
தொடக்கம் மூன்றாம் திகதி வரை (2-3) இரண்டு
 மணி நேர மின்வெட்டும், நான்காம் திகதி ஒரு மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐந்தாம் திகதி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஐந்தாம் திகதிக்குப் பின்னர் புதிய மின்வெட்டு நேரங்கள் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
0 கருத்துகள்:

கருத்துரையிடுக